Tuesday, January 6, 2015

பெண்களுக்கான அற்புத ஹோமியோ நிவாரணி ஃபாலிகுலினம் (FOLLICULINUM) -டாக்டர் எஸ்.வெங்கடாசலம்


பெண்களுக்கான அற்புத ஹோமியோ நிவாரணி ஃபாலிகுலினம் (FOLLICULINUM) -   டாக்டர் எஸ்.வெங்கடாசலம்                                                                                                                            
இது பெண்களுக்கான மிகச்சிறந்த ஹோமியோ நிவாரணி. இதனைக் கண்டறிந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ நிபுணர் மெலைசா ஆசிலம். சினைப்பைகள் சுரக்கும் இயற்கை ஹார் மோன் Folliculin  (இதற்கு Oestrogen என்று பெயர்). இதனை வீரியப்படுத்திக் தயாரிக்கப்பட்ட மருந்து என்பதால், பெண்களின் ஹார்மோன் அமைப்பு பாதிப்புகளுக்கும், பலவித உடல் நலப் பிரச்சனைகளுக்கும், உணர்வுரீதியான பாதிப்புகளுக்கும், குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளதாக டாக்டர். மெலைசா ஆசிலம் அழுத்தமாகக் கூறுகிறார்.

மனநிலைகளும் உணர்வு நிலைகளும்
பிறரோடு பழகுவதில் தன்னை முழுவதுமாக இழத்தல்; பிறர் வயப்படுதல்.
தனது நேரம், கவனம், ஆற்றல் அனைத்தையும் பிறருக்காக, பிறரின் எதிர்பார்புகளுக்காக செலவிடுதல் பிறரின் கால்மிதிப் போல் ஆகிவிடுதல்.
தனது தனித்தன்மை’, ‘சுயம்’ ‘தன்னுணர்வுஇழந்து, தான் யார்? தனது விருப்பு வெறுப்பு என்ன? என்ற உணர்வு கூட இல்லாமை.
எளிதில் மனம் உடைதல்; புண்படுதல்; அமைதியிழத்தல்; மன உறுதியை இழத்தல், உணர்வுரீதியாக, உளவியல் ரீதியாக சோர்வடைதல்.
தனித்திருக்க விரும்பமின்மை.

மாதவிடாய்க்கு முந்திய உடல்மன நிலைகள் (PreMenstrual Problems))
கருமுட்டை வெளியேறும் நாளிலிருந்து மாதவிடாய் துவங்கும் வரையிலும் ஏற்படும் பலவிதக் குறிகளுக்கு ஏற்றது (symptoms from ovulation to Menses).
சினைப்பை என்பது படைப்பாற்றல் மிக்க ஓர் உறுப்பு. அது செயல்படாவிட்டால் படைப்பு தடைபடும். இந்தத் தடைக்கான மூலகாரணம் ஆதிக்க மனோபாவமும் அதிகார உணர்வும் கொண்ட பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணையே (Domineering Parant or Spouse). படைப்பு ஆற்றல் அடக்கப்பட்டால் அல்லது தடுக்கப்பட்டால் அது எங்கே செல்லும்? என்ன ஆகும்? அது நோய்களாய் வடிவங் கொள்ளும். மனஅழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், அதிஉணர்ச்சி, உறுதியற்ற மனநிலை உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
மனச்சோர்வும் மனக் கிளர்ச்சியும் மாறிமாறி ஏற்படும்; அழுகை உண்டாகும். எரிச்சலும்,        கோபமும் ஏற்படும். மனநிலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பீதி ஏற்படும்.
சப்தம், தொடுதல், வெப்பம் தாங்க இயலாது.
பாலுணர்வு மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக அதிக பாலியல் கிளர்ச்சி காணப்படும். பாலியல் இயற்கை குறித்து மாறாத எண்ணம் இருக்கும் (Fixed ideas of Sexual Nature).
பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படும்.
மாதவிடாய்க்கு முன்பாக மார்பகங்கள் வீங்கி, வலி ஏற்படும். தொட்டால் வலி அதிகரிக்கும். இவ்வலி மாதவிடாய் வந்தபின் மறையும்.
மாதவிடாய்க்கு முன்பாகக் கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
குமட்டலும், வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும். பின் மலச்சிக்கல் ஏற்படும் - இரு நிலைகளும் மாறிமாறி ஏற்படும்..
மாதவிடாய்க்கு 10 நாட்கள் முன்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும்.
மாதவிடாய்க்கு முன்பாக அல்லது கருமுட்டை வெளியாகும் காலத்தில் அதிகளவு சாப்பிடாமலேயே எடை அதிகரிப்பு & நீர் உடம்பாகப் பெருத்தல் இரண்டும் ஏற்படலாம். (சில பெண்களுக்குக் கட்டாயம் அதிக அளவு உண்ணுதலில் மிகுந்த விருப்பம் ஏற்படலாம்.)
கருமுட்டை வெளிப்படும் நாட்களில் சினைப்பைப் பகுதியில் இழுக்கும்வலி, எரிச்சல்வலி, கவ்விப்பிடிக்கும் வலி, திட்டுத்திட்டாய் மாதவிடாய் படுதல்,  நீர்மக்கட்டிகள் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன.
மாதவிடாய்க்கு முன்பு உடலின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு உபாதைகள் எழுகின்றன.
கோதுமை மற்றும் சர்க்கரை மீது அதீத விருப்பம் உண்டாகும்.
தலைவலியுடன் அதிகளவு சளிப்பிடிக்கும்.
முகத்தில் பருக்கள் வெடிக்கும். விரல்களில் வறட்சியுடன் சரும எழுச்சிகளும், நகங்களில் பிளவும், உடைதலும் உண்டாகும். பலவித தோல் ஒவ்வாமைகள், சரும எழுச்சிகள், அரிப்பு, வறண்ட கரப்பான் படை, பெண்களின் தலையில் சொட்டை விழுதல் போன்றவை ஏற்படும்.
இருதயத்தைச் சுற்றி இறுக்கும் உணர்ச்சி ஏற்பட்டு இடதுகையில் பரவும். நுரையீரலுக்குப் புதிய காற்றுத் தேவைப்படும். காற்றை நீண்டு சுவாசித்தல்; ஆழ்ந்த பெருமூச்சு விடுதல்; வறட்டு இருமல் ஏற்படுதல்; இருதய இறுக்க உணர்ச்சியில் இருமல் மேலும் அதிகரிக்கும்.
மாதவிடாய்க்கு முன்பும், கருமுட்டை வெளிப்படும் போதும், மாதவிடாயின் போதும் முதுகிலும், அடிமுதுகிலும் வலி அதிகரிக்கும்.
மாதவிடாய்க்கு முன் கல்லீரல் வீக்கம்; அஜீரணம்; வாந்தி, குமட்டல்; வலது கீழ் உதரவிதானப் பகுதியில் மாதவிடாய் முன்வலிதோன்றுதல்.
வயிறு வீங்குதல், கனத்தல், இரைச்சல் ஏற்படுதல், மலச்சிக்கல் ஏற்படுதல், சிலசமயம் மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படுதல். மலக்குடல் பகுதியில்       கனஉணர்வு.
திரவங்கள் விழுங்கும்போது தொண்டையில் தாங்க முடியாத அழுத்தமும் வலியும் ஏற்படும்.
வேகமான இருதயத்துடிப்பும், மயக்க உணர்வுடன் கூடிய படபடப்பும் ஏற்படும்.
மீண்டும் மீண்டும் நீர்ப்பை அழற்சி ஏற்படும்.
மாதவிடாய் காலப் பிரச்சனைகள்
சினைப்பைகள் மையப்படுத்தி மாதவிடாயின் போது வலி ஏற்படும்.
நீடித்த, ஏராளமான மாதவிடாய், நல்ல சிவப்புக் குருதியாக கரும்புள்ளிகளுடன் வெளிப்படும்.
பொதுவாக, குறுகிய கால அல்லது நீடித்த மாதவிடாய் சுழற்சி சம்பந்தமான அனைத்து      வகைப் பிரச்சனைகளுக்கும் Folliculinum  ஏற்றது.

மாதவிடாய் முற்றுக் காலப் பிரச்சனைகள் (Menopausal Problems)
மாதவிடாய் முற்றுக்காலத்தில் தோன்றும் பெருமளவிலான உடல் மற்றும் மனக்குறிகளைச் சீராக்கக் கூடிய ஆற்றல் இம்மருந்துக்கு உண்டு.
மாதாந்திரச் சுழற்சியில் ஒழுங்கீனம்
அதிக ரத்தப்போக்கு
உடலில் வெப்ப அலைகள், அனல்வீச்சு.
இரவு வியர்த்தல்; காற்றுப்பசி; கிறுகிறுப்பும் மயக்கமும்
வயிறு கனத்தல்
கர்ப்பப்பையில் தசைநார்க்கட்டிகள்
மிகை உணர்ச்சி - சப்தம், வெப்பம், தொடுதல் தாங்க இயலாது.
யோனி வறட்சி; மஞ்சள் அல்லது மரக்கலரில் கழிவு வெளிவருதல்.

இக்குறிகளில் எவையேனும், அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்பப்பை நீக்கப்பட்டபின் , அல்லது சினைப்பை நீக்கப்பட்டபின் காணப்பட்டால் Folliculinum பயன்படும். Menopause காலத்தில் அல்லது கர்ப்பப்பை, சினைப்பை அகற்றிய பிறகு சினைப்பை சுரக்கும் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவில் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும். ஃபாலிகுலினம், சினைப்பையின் ஈஸ்ட் ரோஜன் சுரப்பைத் தூண்ட வாய்ப்புள்ள போது தூண்டுகிறது. அத்தோடு சிறிதளவு ஈஸ்ட்ரோஜன் சுரக்கக்கூடிய அட்ரினல் சுரப்பி, கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற பாகங்களையும் தூண்டு கிறது. ஞஸ்ஹழ்ஹ் அகற்றப்பட்ட பின்னரும் இச் செயல் நடைபெற ஃபாலிகுலினம் பயன்படுகிறது.
ஃபாலிகுலினத்தின் இதர பயன்பாடுகள் :
இயல்பான நிலையில் சினையகங்கள் புரெஜெஸ்டிரான் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது இனப்பெருக்கத்திற்குத் தேவையான அளவிற்கு உற்பத்தி ஆகிறது. அட்ரினல் சுரப்பிகள் சில வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இவை ஒருவகை ஹார்மோன்களாக மாற்றம் அடைகின்றன. இத்தகைய ரசாயன மாற்றத்தின் போது புரொஜெஸ்டிரான் உற்பத்தி செய்யப்படுகிறது. சினைப்பைகளால் உற்பத்தி செய்யப்படும் புரொஜெஸ்டிரான் அளவு குறைவாக இருந்தாலும் Corticosteroid உற்பத்திச் செலவிலேயே புரொஜெஸ்டிரான் கிடைப்பதால் மாதவிடாய் சுழற்சியில் தடையும், பாதிப்பும் நிகழாது.
அட்ரினல் சுரப்பி பலவித Cortico steroid களை உற்பத்தி செய்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒரு பணியை மேற்கொள்கிறது. சிலவற்றிற்கு உடல் திசுக்களின் நீர்சமநிலையைப் பாதுகாப்பது பொறுப்பு. அப்போது செல்களிலுள்ள Iodium & Pottassium அளவுகளை ஒழுங்குபடுத்தும்; சில ஹார்மோன்கள் அலர்ஜி பாதிப்புகளைத் தடுக்கும்; சில ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்; சில ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் தொடர்பான பாகங்களை இயக்கும்

குழந்தைப் பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பெண்கள் உடலின் இயற்கையான இயக்கப் போக்குகளில் மாற்றங்களும், நோய்களும் ஏற்படுத்துகின்றன என ஹோமியோபதி நிபுணர்கள் உறுதிபட நம்புகின்றனர். கருத்தடை மாத்திரைகள் உண்ட பெண் மீண்டும் கர்ப்பம் அடைவது கடினம். கருத்தடை மாத்திரைகளால் இழந்த உடல் சமநிலையை மீட்கவும், மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பை உருவாக்கவும்  ஃபாலிகுலினம் உதவுகிறது.
மாதச் சுழற்சியைத் தற்காலிகமாக நிறுத்தவும், கருவைத் தடுக்கவும் எடுக்கப்படும் ஊசிகள், மருந்து, மாத்திரைகளால் பெண்ணின் உடலில் Estrogen Poisoning ஏற்படுகிறது. இதனால் உடலியக்க ஒழுங்குகள் தவறுவதோடு அதிகமாதப் போக்கு, கருவணு வெளிவராமை, கருத்தரிக்க இயலாமை, கருத்தரித்து விட்டால் இடையிலேயே சிதைவு, பிரசவத்திலும் பாலூட்டுவதிலும் இன் னல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய விளைவுகளை நிறுத்த ஃபாலிகுலினம் துணை புரிகிறது.
உடல்ரீதியாக, உளரீதியாக, பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம், பலாத்காரம் செய்யப்பட்ட வரலாறுள்ள பெண்களின் பிரச்சனைகளுக்கு இம்மருந்து பயன்படும். பாலியல் கொடுமை களுக்கு தற்போதோ அல்லது முன்போ ஆளான பெண்களுக்கு அவை நினைவிருக்கிறதோ இல்லையோ ஃபாலிகுலினம் சிறப்பாகப் பயன்படும்.
பெண்ணின் உடலையும் மனதையும் அவளது இசைவின்றி தவறாகப் பயன்படுத்தியவர் பெற்றொராக, உடன்பிறந்தவராக, உறவினராக, அன்போடு பராமரிப்பவராக, எஜமானராக, உயர் அதிகாரியாக இருக்கலாம். மாட்டேன்என்ற ஒருமுறை கூடச் சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். துஷ்பிரயோகம் செய்தவரோடு பலமாக இணைக்கப்பட்ட நிலையை, தேவையற்ற கட்டுப்பாட்டைத் தகர்க்க ஃபாலிகுலினம் பயன்படும். மேலும் பழைய பலமான நினைவுகளின் மோதலைச் சந்திக்க கூடுதல் பலம் அளிப்பது ஃபாலிகுலினம்.
அவர்களின் மன உறுதியை மீட்கவும், தன் மதிப்பு உணர்வை அதிகரிக்கவும், நலமான உணர்வை ஏற்படுத்தவும் ஃபாலிகுலானம் அரிய வகையில் பயன்படும்என்று சில ஹோமியோ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீரிய அளவு :
ஃபாலிகுலினம் வெவ்வேறு வீரியங்களில் வெவ்வேறு விதமாக பலனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3X அல்லது 4X வீரியம் - அடக்கப்பட்ட மாதவிடாயிலும், குறைவான மாதப்போக்கிலும் தூண்டுதல் தந்து பலனளிக்கும்.
7C வீரியம் - மாதவிடாய் தொடர்புள்ள, ஹார்மோன் தொடர்புள்ள உடலியக்கச் சீர்குலைவுகளை, வலிகளை சமனப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் உதவும்.
9C வீரியம் -  அடிக்கடி மாதப்போக்கு ஏற்படக்கூடிய விபரீதத்தைத் தடுக்கும்.
நோயாளிக்கு வேறு ஹோமியோபதி மருந்துடன் ஃபாலிகுலினத்தை தேவைக்கேற்ப மாற்றிமாற்றி தரலாம்.

மாதவிடாய் சுழற்சி துவங்கி 10 முதல் 14 நாட்களுக்குள் 5 நாட்கள் அல்லது மாதவிடாய் சுழற்சி துவங்குவதற்கு 5 நாள் முன்பு இரவு வேளை இம்மருந்தை உபயோகிக்கலாம். (மாதவிடாய் நின்றுவிட்ட, அறியமுடியாத பெண்களுக்கு இது பொருந்தாது)

2 comments:

  1. ஐயா கல்லீரலுக்கு ஹோமியோபதியில் மருத்துவம் உள்ளதா. என் அம்மா கல்லீரல் கெட்டுவிட்ட பிரச்சனையால் அவதிப்படுகிறார் ஐயா.

    ReplyDelete