பல காயங்கள்
ஆறிய பின் தழும்பு அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. சில காயங்கள் மட்டுமே தழும்பு
ஏற்படாமல் ஆறி இயற்கை தோல் மீண்டும் ஏற்படுகின்றன. தழும்புகளால் எந்தவித ஆபத்தோ, உபாதையோ இல்லை என்றாலும் தோற்றப் பொலிவைப்
பாதிக்கிறது.வெட்டுக்காயங்களில், அடிப்பட்ட காயங்களில், சிறிய, பெரிய விபத்துக் காயங்களில், நெருப்புக் காயங்களில் மற்றும் முகப் பருக்களால், அம்மைப்
புண்களால் ஏற்படக் கூடிய தழும்புகளை உடனடி ஹோமியோபதி சிகிச்சை மூலம் தடுக்க முடியும்.
ஆழமான காயங்களில் ஆங்கிலச் சிகிச்சை முறைப்படி தையல்போட்ட நிலையிலும் கூட
ஹோமியோபதி சிகிச்சையை இணைத்துக் கொண்டால் தழும்பு உண்டாவதைத் தவிர்க்க
இயலும்.
ஏற்கனவே
இவைபோன்ற தழும்புகளால் மனச் சிரமங்களுக்கு ஆளானவர்கள் ஹோமி யோபதி மருந்துகள் மூலம்
தழும்புகளை மறையச் செய்ய வாய்ப்பு உள்ளது.
உலகிலுள்ள வேறெந்த மருத்துவமுறையிலும் தழும்புகளை குணப்படுத்த மருந்துகள்
இல்லை என்பதும் ஹோமியோபதியில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தழும்புகள்
வராமல் தடுக்கவும், வந்த தழும்புகளைக் குணப்படுத்தவும் பயன்படக்கூடிய சில முக்கிய ஹோமியோபதி
மருந்துகள் இதோ :
1.காலண்டுலா [CALENDULA]:அனைத்துவிதக் காயங்களுக்கும், புண்களுக்கும் பயன்படக் கூடியது. இம்மருந்தினை [mother tincture] திரவ வடிவில் சிறிது எண்ணெய் கலந்து மேற்பூச்சாகவும், மாத்திரை வடிவில் உள்மருந்தாகவும் பயன்படுத்தலாம். ஆயிண்ட்மென்ட்
வடிவத்திலும் கிடைக்கிறது. (சர்க்கரை
நோயாளிகளின்) ஆறாத புண்களைக் கூடத் தழும்புகளின்றிக் குணப்படுத்தும் ஆற்றலுடையது காலண்டுலா.
2.ஆண்டிம்
டார்ட் [ANTIM TART]: அம்மை நோயின் போது
ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்பவருக்கு தழும்புகள் ஏற்படுவதில்லை. தழும்பு ஏற்பட்டவர்கள் இம்மருந்தினை தினம் 2
வேளை வீதம் 1 முதல் 2 மாத காலம் எடுத்துக்கொண் டால் தழும்புகள் முற்றிலும் மறைந்து
விடும்.
3.காஸ்டிகம் [CAUSTICUM ]:நெருப்புக் காயத்தின் போது உடனடி யாக இம்மருந்தைச் சாப்பிட்டால் எரிச்சல், வலி மறைவதோடு துரித நிவாரணம் கிடைக்கும்.
புண்கள், தழும்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். பொதுவாக நெருப்புக் காயத்தால் ஏற்பட்ட தழும்பு
எக்காலத்திலும் குணமாகாது. தசை நாண்கள்
இழுக்கப்பட்டு, சுருங்கி, இறுக்க
உணர்வுடன் கூடிய தழும்பாகக் காணப்படும்.
இந்நிலையிலும் காஸ்டிகம் மருந்து தொடர்ந்து உட்கொண்டால் தழும்பு
நிச்சயம் குணமாகும்.
4.கிராபைட்டிஸ்[GRAPHITES]:கடினப்பருக்கள் மற்றும் எக்சிமா எனப்படும் கரப்பான்படைப் புண்கள் காரணமாக ஏற்படும் தழும்புத்
திட்டுக்களையும், கீலாய்டு (KELOIDS) எனப்படும் தழும்புப் புண்களையும்,
பெண்களின் மார்பக அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஏற்படும்
தழும்புகளையும் குணப்படுத்தும் ஆற்றல் உள்ள மருந்து இது. வெளிப்பூச்சாகவும்,
உள் மருந்தாகவும் பயன்படும்.
5.ஃபுளோரிக்
ஆசிட் [FLOURIC ACID]: பருவ
வயதில் ஏற்படும் சில வகைப் பருக்கள் தழும்புகளை ஏற்படுத்துகின்றன.இவற்றை
மறையச் செய்ய இம்மருந்து உதவும்.
சிலிகா (SILICEA) எனும் மருந்தும் இதற்குப் பயன்படும்.
6.கல்கேரியா
ஃபுளோர்[CALCAREA FLOUR] ;டாக்டர். சூஸ்லரின் கண்டுப்பிடிப்பான இந்த திசு மருந்து... எல்லாவித
தழும்புகளையும் கரைத்து, குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. தினம் மூன்று வேளை - வேளைக்கு 4 மாத்திரை வீதம்
உட்கொண்டால் பலன் கிடைக்கும். ஹோமியோபதி மருந்துகளுடன் இதனை இணைத்து உட்கொண்டால்
சிறந்த பலன் பெறலாம்.