Wednesday, December 11, 2013

கர்ப்பிணிகளுக்குப் பயோ மருந்துகள்

முதல் & இரண்டாம் மாதம்- நேட்ரம் பாஸ் 6x : 
 அதிக உமிழ்நீர்சுரப்பு; குமட்டல்; வாந்தி, கர்ப்பகால மஞ்சள் காமாலை, வயிற்றுப் பூச்சிகள்; இடுப்பு. மூட்டு வலிகள், மலப்போக்கு ஏற்படாமல் தடுத்தல். 

மூன்றாம் & நான்காம் மாதம்- பெர்ரம் பாஸ் 6x :          
 இரத்த சோகையை நீக்கும்; தாய்க்கும்,கருவிலுள்ள குழந்தைக்கும் தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்யும்; சோர்வை அகற்றும்; ரத்தக் கசிவுகள் ஏற்படாமல் தடுப்பு மருந்தாக செயல்படும். 

ஐந்தாம் & ஆறாம் மாதம்- கல்கேரியா பாஸ் 6x :
குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்; குழந்தையின் தலை வீங்காமல்; பெரியதாகாமல் தடுக்கும்; எல்லா                   உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். 

ஏழாம் & எட்டாம் மாதம்- காலிபாஸ் 6x : 
 கர்ப்பிணித் தாய்க்கு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும்     எரிச்சலைத் தடுக்கும்; நன்கு சிறுநீர் வெறியேறும்; சிறுநீர்ப்பாதை தொற்றுக்களைக் குணமாக்கும்; கால் வீங்காது; பிரசவம் பற்றிய பய உணர்வை நீக்கும். பிரசவ வேதனையைக் குறைத்து சுகப்பிரசவம் நிகழ உதவும். மேலும் பிறக்கும் குழந்தை மூளைத்திறன் உள்ள புத்திசாலி யாகப் பிறக்க, பிறந்தபின் தோல் நோய் வராதிருக்க, அடிக் கடி சளித்தொல்லைகள் ஏற்படாமலிருக்க KP 6x பயன் படும். 

ஒன்பதாம் & பத்தாம் மாதம்- நேட்ரம் மூர் 6x :
பிரசவ காலத்தில் விட்டு விட்டு வரும் வலியை விரைவுபடுத்திச் சுகப்பிரசவம் ஏற்படச்செய்யும். பிறக்கும் குழந்தை குறித்த காலத்தில், பேசவும், நடக்கவும், போலியோ வராமல் தடுக்கவும் NM பயன்படும்.
இம்மருந்துகளை குறிப்பிட்ட மாதங்களில் தினமும் காலை இரவு இருவேளைகள் தவறாமல் கொடுத்து வந்தால் கர்ப்பிணிகளின் நலம் பாதுகாப்பாக அமையும். குழந்தை ஆரோக்கியமாக, நல்ல வளர்ச்சியுடன் பிறக்கும். சுகப் பிரசவம் ஏற்படும். இருப்பினும் பயோவிலுள்ள 12 மருந்துகள் அனைத்தையும் கர்ப்பகாலத்தில் தேவைக்கேற்ப இடையிடையே சில நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தெந்த பயோ மருந்தை எந்தெந்தக் குறிகளுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற விவரத்தைப் பார்க்கவும்.

கர்ப்பகால வாந்தி      -     காலிமூர் (KM)
புளிப்பு மிக்க வாந்தி   -    நேட்பாஸ் (NP)
கசப்பான பித்த வாந்தி -    நேட்சல்ப் (NS)
நீர் போன்ற வாந்தி    -    நேட்மூர் (NM)
சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் வாந்தியாகுதல் - பெர்.பாஸ் (FP)
காலைநேரக் குமட்டல் -    கல்-பாஸ், காலி-பாஸ், நேட்-மூர்.
வாய்க்கசப்பு     -    நேட்சல்ப் (NS)
அதிகளவு எச்சில் ஊறுதல்  -    நேட்மூர் (NM)
கர்ப்பகால மலச்சிக்கல்      -     நேட்மூர் (NM), சிலிகா (S)
அசுத்த ரத்தக் குழாய்வீக்கம் (பச்சை நரம்புப்புடைப்பு)-     கல்.புளோர் (CF)
கால் வீங்குதல்  -    நேட்.சல்ப் (NS)
மார்பகம் வீங்குதல்    -    பெர்பாஸ் (FP), காலிமூர் (KM)
கர்ப்பகாலத்தில் பொதுவாக ஏற்படும் சோர்வு, பலவீனம்-   காலி.பாஸ் (KP)
அஜீரணத் தொந்தரவுகள்     - நேட்.பாஸ் (NP)
பல்வலி   - கல்.பாஸ் (CP), கல்.புளோர். (CF)
பிரசவ வலி ஏற்பட்டதும் 10,15 நிமிடத்திற்கு ஒருமுறை
சில வேளைகள் தர வேண்டிய மருந்து  -     காலிபாஸ் (KP)
பிரசவ நேர வலி - மெக்.பாஸ் (MP),காலி பாஸ் (KP)
இரத்த ஒழுக்கு  -    கல்.புளோர் (CF), காலி பாஸ் (CP)
பிரசவத்திற்குப் பின்கர்ப்பப்பை சுருங்காமலிருத்தல்  - கல்.புளோர் (CF)
பிரசவத்திற்குப் பின் சோர்வு - காலி பாஸ் (KP)
(Dr.S.வெங்கடாசலம், Dr.V.ஆவுடேஸ்வரி எழுதிய பல்லாயிரம் நோய்களைத் தீர்க்கும் பன்னிரண்டு பயோ மருந்துகள்நூலிலிருந்து)


No comments:

Post a Comment