Wednesday, August 20, 2014

மாரியம்மாளின் மரணம் இயற்கையானது தானா? - டாக்டர். S.வெங்கடாசலம்

மாரியம்மாளின் மரணம் இயற்கையானது தானா?  -  டாக்டர். S.வெங்கடாசலம்
            
சாத்தூருக்கு அருகிலுள்ள கண்மாய்சூரங்குடி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாளுக்கு வயது 23.  எளிய விவசாயி ஒருவரின் மனைவி. காட்டு வேலை, வீட்டுவேலை எல்லா வேலைகளும் செய்யக்கூடிய திடகாத்திரமான பெண்.
            
அவரது வலது மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி போன்ற புடைப்பு தோன்றியிருந்ததை ஒரு நாள் கவனித்திருக்கிறார். வலியில்லை வேறு தொந்தரவில்லை என்பதால் அப்படியே விட்டு விட்டார்.  சிலநாட்களில் கட்டி வளர்ந்து இருப்பதைக் கண்டு துணுக்குற்றார்.  கணவருடன் வந்தார்.  பரிசோதித்துப் பார்த்துவிட்டு பயப்படவேண்டாம் மருந்து மாத்திரைகளிலேயே இதைக் கரைக்க முடியும் என்று தெரிவித்தேன்.  அந்த பெண்ணை முழுமையாக விசாரித்து உரிய மருந்து கொடுத்து பதினைத்து நாட்கள் கழித்து வருமாறு கூறி அனுப்பினேன்.  ஆனால் மாரியம்மாள் பதினைந்து நாளில் மீண்டும் வரவில்லை.  நாட்கள் ஓடின.  மிகுந்த சிரத்தை எடுத்து மருந்தளித்த பின் நோயாளர் எந்தவித தகவலுமின்றி வராமல் இருப்பது ஹோமியோ பதியர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலை.
           
பின்னர் தாமதமாக ஒரு நாள் மாரியம்மாளின் கணவர் மட்டும் வந்தார்.  அவரது மனைவிக்கு இந்தச் சின்னஞ்சிறிய கடுகு மாத்திரைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் மாத்திரை களையும் சரியாகச் சாப்பிடவில்லை என்றும் ஒரு மாதத்தில் கட்டி பெரிதாகத் தெரிந்ததால் மதுரையில் ஒரு பெரிய டாக்டரைச் சந்தித்து அவரது பரிசோதனை ஆலோசனைகளின்படி கட்டியை ஆபரேசன் செய்து நீக்கிவிட்டதாகவும் கூறினார்.  என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.  சிறிது நேர மௌனத்திற்குப் பின் இப்போது உங்கள் மனைவி நன்றாக இருக்கிறாரா? என்று விசாரித்து விட்டு அனுப்பினேன்.
           
நான்கைந்து மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அந்தப் பெண்ணுக்கு வலது மார்பகத்தில் ஆபரேசன் செய்த இடத்திற்குப் பக்கத்திலேயே முன்பைவிட சற்று பெரிதாக மற்றொரு கட்டி வந்து விட்டது.  (ஆபரேசன் மூலம் வெளியே தெரிந்த கட்டியை அகற்றியும் கட்டிகள் மீண்டும் மீண்டும் உருவாகும் உடலியக்க சூழலை மாற்றவில்லையே! நோயின் வேர்கள் அழியவில்லையே! ஆபரேசன் செய்தும் நிரந்தர நோயாளியாக அல்லவா மாற்றப்பட்டுள்ளார்)
            
மீண்டும் மதுரை டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டு வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.  பின்னர் கட்டியை அல்ல வலது மார் பகத்தையே ஆபரேசன் மூலம் அகற்றி விட்டனர்.  (இது தான் நோயை வேரோடு களைதலா? பெண்மை யைப் பறைசாற்றும் மார்பகங்களில் ஒன்றை விஞ்ஞானப்பூர்வ நவீன சிகிச்சை என்ற பெயரால் மாரியம்மாள் இழந்து விட்டார்.  பல நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி, நலமடைந்த (?) பின்னர் கிராமத்திலுள்ள வீட்டுக்குத் திரும்பினார்.  ஊரிலுள்ளவர்களும், உறவினர்களும் விஷயமறிந்து வீட்டிற்கு வந்து விசாரித்துச் சென்றனர்.

            
எறும்பைப்போல் சுறுசுறுப்பாக இருந்த மாரியம்மாள் இப்போது வீட்டின் மூலையில் பாயில் படுத்தே கிடந்தார்.  வாசல் பெருக்கி நீர் தெளித்துக் கோலமிடவில்லை.  வீட்டு வேலைகள் பார்க்கவில்லை காட்டுவேலைக்கு போகவில்லை கணவரோ மற்றவரோ கூப்பிட்டால்கூட எங்கோ ஆழத்தில் புதைந்து கிடப்பது போல ம்என்ற மெதுவான பதில் சத்தத்தோடு மௌனமாகிக் கிடந்தார்.
            
மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது என்று சிலரும், காத்து கருப்பு பட்டு விட்டது, பேய் பிடித்துவிட்டது என்று சிலரும் ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு சோறு தண்ணீர் இல்லாமல் மாரியம்மாள் முடங்கிவிட்ட பின் கடவுளின் ஏஜெண்டுகளாக சில பூசாரிகளும் மாந்திரீகவாதிகளும் மாரியம்மாளின் கணவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்து சென்றனர்.  மாரியம்மாளின் நிலை மோசமாகிக் கொண்டே போனது.  ஊர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த ஓர் நள்ளிரவில் மாரியம்மாள் நிரந்தரமாய் உறங்கி விட்டார்.


          
  நடந்து முடிந்த சோகத்தை அவரது கணவர் என்னிடம் தெரிவித்த போது தாங்கிக் கொள்ள இயலாத துக்கமும் அதிர்ச்சியும் எனக்கு ஏற்பட்டது.  அவளுக்கு வைத்தியம் பார்க்க நகை நட்டுகளை விற்றேன், நிலத்தை விற்றேன்.  அவ்வளவு செலவழித்தும் அவள் விதி முடிந்து விட்டது.  மாரியம்மாள் போய்விட்டதால் எனக்கு எல்லாமே போய்விட்டது என்று தோளில் கிடந்த துண்டால் கண்ணீரைத் துடைத்தபடி கூறிவிட்டுச் சென்றார்.  அந்த ஏழை உழவரின் இல்லத்தில் ஏற்பட்ட துயரத்தை இப்போது நினைத்தாலும் மனசின் கனம் மாற நீண்ட நேரமாகிறது.
                                          ********    **********    *********
     சிவகாசியைச் சேர்ந்த சகோதரி உமாவிற்கு வயது 21.  அம்மாவுடன் வந்தார்.  உமாவிற்கு வலது மார்பகத்தில் சிறிய கட்டிகள் இரண்டும் சற்று பெரிய கட்டி ஒன்றும் செயின்போல் அடுத்தடுத்து அமைந்திருந்தன.  அதிகம் அழுத்தினால் மட்டுமே லேசான வலி ஏற்பட்டது.  எப்படியோ நான் கவனக்குறைவாக இருந்துவிட்டேன்.  எனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.  இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது.   சிவகாசியில் டாக்டர்களிடம் காட்டினேன்.  அறுவைச் சிகிச்சை தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டனர்.  கல்யாண நேரம் என்பதால் மார்பகத்தில் ஆபரேசன் செய்து கொள்வதில் இஷ்டமில்லை அம்மாதான் பல இடங்களில் கேட்டு விசாரித்து விட்டு இது மாதிரி கட்டிகளை ஆபரேசன் இல்லாமல் ஹோமியோபதியில் குணப்படுத்து கிறார்களாம் என்று சொன்ன பிறகு இங்கு வந்திருக்கிறோம்.

           
உமாவிடம் எல்லா விவரங்களையும் கேட்டறிந்து குறித்துக் கொண்ட பின்னர் மருந்துகள் கொடுத்து அனுப்பினேன்.  சரியாக 15 நாட்கள் கழித்து வந்தார்.  ஒரு மாற்றமும் தெரியவில்லையேஎன்றார்.  பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் மருந்துகளைச் சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டு தொடர்ந்து மருந்துகள் கொடுத்தனுப்பி னேன்.  மற்றும் ஒரு முறை இதே போல் மருந்தளித்தபின்னர் 45 நாட்களில் சிறிய கட்டிகள் இரண்டும் காணாமல் போயின.  பெரிதாக இருந்த கட்டி பாதியளவு குறைந்து விட்டது.  உமாவின் உள்ளத்தில் நம்பிக்கை வலுவடைந்தது.  வரும் போதெல்லாம் ஹோமியோபதி மருத்துவமுறை பற்றியும் ஆர்வமாய் விசாரித்தார்.  சிகிச்சையும் தொடர்ந்தது.

            திருமண நாளுக்கு ஒருவாரம் முன்பு அழைப்பிதழ்கொடுக்க வந்த உமாவின் முகத்தில் பிரகாசம்.   கட்டிகள் இருந்த தடயமே இல்லை”  என்றார்.  அவருக்கு இறக்கைக் கட்டி பறக்கும் சந்தோசம். 


இவ்வளவு சக்தி மிக்க நல்ல மருந்துகள் இருக்கும்போது ஆபரேசன்தவிர வேறு வழியே இல்லை என்றும் தாமதப்படுத்தினால் ஆபத்து என்றும் ஏன் மிரட்ட வேண்டும்?”  என்று அர்த்தம் பொதிந்த கேள்வி உமாவிடமிருந்து வந்தது.  ஹோமியோபதியின் மூலம் முழுநலம் பெற்ற உங்களைப் போன்றவர்கள் தான் இந்தக் கேள்விக்குரிய நடமாடும் பதில்கள்என்று சொல்லிவிட்டு முன்கூட்டியே திருமண வாழ்த்துகளைக் கூறி அனுப்பி வைத்தேன்.

                                                       ----------------------
            சாதாரண சின்னஞ்சிறிய மூக்குச்சதை வளர்ச்சியிலிருந்து (POLYP) தொண்டைச் சதை வளர்ச்சி, கொழுப்புக்கட்டிகள் (LIPOMA), கர்ப்பப்பை, தசைநார்க்கட்டிகள் (UTERINE FIBROIDS), மார்பகக் கட்டிகள் (BREAST TUMOURS), திரவக்கட்டிகள் (CYSTS), மூலம் (HAEMORRHOIDS), பௌந்திரம் (FISTULA), ஆணிகள் (CORNS), பாலுண்ணிகள், மருக்கள் (WARTS) போன்ற உடலில் ஏற்படும் அதீத வளர்ச்சிகளையும் (EXTRA GROWTHS) சிறுநீரகக்கல், பித்தப்பை கல், கல்லீரல் வீக்கம் மண்ணீரல் வீக்கம் போன்ற வற்றையும் பக்க விளைவுகள் இல்லாமல் மீண்டும் தோன்றாமல் ஆபரேசன் இல்லாமல் குணப் படுத்தும் ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கு உண்டு.  இதற்கான கண்முன் சாட்சியங்களாய் ஹோமியோ சிகிச்சையில் குணமடைந்த பல்லாயிரம் பேர்கள் உள்ளனர்.  விபத்துகள் போன்ற மிகச் சிக்கலான கட்டங்களில் மட்டுமே அறுவைச் சிகிச்சை தேவை என்கிறது ஹோமி யோபதி.
            
மேலே குறிப்பிட்ட இரண்டு பெண்களின் சிகிச்சை அனுபவங்களை ஆராய்ந்து பாருங்கள் உமா முழுநலமடைந்து புதுமணப் பெண்ணாக இல்லற வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார்.  மாரியம்மாள் இடி தாக்கிய மரமாய் இறந்து விழுந்து விட்டார்.  அறுவைச் சிகிச்சைகளால் எத்தனை பின்விளைவுகள்! எத்தனை பாதிப்புகள்! மாரியம்மாளின் மரணம் இயற்கையானது தானா?  என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.  சொர்க்கத் தின் வாசல்கதவு திறந்தே இருக்கிறதுவருவதற்கு ஆளில்லை. நரகத்தின் கதவு மூடிக்கிடந்தாலும் சுவரேறிக் குதிக்கிறார்கள் என்ற அனுபவ மொழிதான் நினைவுக்கு வருகிறது.



பல்லாயிரம் நோயாளிகள் தம் நோய்களால் இறக்காமல் மருத்துவர்களின் சிகிச்சைகளினால் இறந்துள்ளனர்.- Dr.ஹானிமன்

No comments:

Post a Comment