Saturday, January 31, 2015

பன்றி சுரத்தை முறியடிக்க உதவும் ஹோமியோபதி!உலகளாவிய வெற்றிச் சரித்திரம் காட்டும் பாதை!------ டாக்டர் எஸ்.வெங்கடாசலம்

பன்றி சுரத்தை முறியடிக்க உதவும் ஹோமியோபதி!





பன்றிக் காய்ச்சல் தடுக்க முடியும்!-டாக்டர் எஸ்.வெங்கடாசலம்

உலகில் அதிநவீன மருத்துவம் என்று சொல்லிக் கொள்ளும் ஆங்கில மருத்துவ முறையின் இயலாமையும், பீதியும் மீண்டும் ஒரு முறை உலக மக்கள் முன் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வாழ்நிலை, சூழ்நிலைக் காரணங்களால் தோன்றும் புதுப்புது நோய்களைக் கண்டு ஆங்கில மருத்துவ உலகம் திணறுகிறது. உலக மக்களையும் தேவையற்ற அச்சத்தில் ஆழ்த்துகிறது..
பறவைக் காய்ச்சல் என்றாலும், சார்ஸ் நோய் என்றாலும், சிக்குன்குனியா என்றாலும்,டெங்கு என்றாலும், பன்றிக்காய்ச்சல் என்றாலும் இவை புயல் வேகத்தில் உலகை தாக்கி மனித குலத்தையே கூண்டோடு அழித்துவிடும் என்றும், உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் மிக மிக எச்சரிக்கையோடு தற்காத்துக் கொள்ளப் போராட வேண்டும் என்றும், கிருமிகள் என்னும் சிற்றுயிர்களால் மனித இனம் மடிந்துவிடும் என்றும் ஆங்கில மருத்துவ முறை பீதியை ஏற்படுத்துவது வாடிக்கை. 

அது மட்டுமின்றி இந்தப்பேரழிவு நோய்களுக்கு எதிராகத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து உலகைக் காப்பாற்ற சில மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாகவும் ஆடம்பரமாய் ஆர்ப்பரிப்பார்கள். எப்போதெல்லாம் தொற்றுநோய்களால் பெருவாரி நோய்களால் கூட்டம் கூட்டமாய் மனித இனம் பாதிக்கப்படுகிறேதோ அப்போதெல்லாம் போர்க்கால நடவடிக்கைகளால் ஆங்கில மருத்துவம் மட்டுமே தலையிட்டு அவற்றை கட்டுப்படுத்தி வருவது போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆனால் உலக அனுபவத்தில், அலோபதி வரலாற்றில் இவை அனைத்தும் பச்சைப் பொய்கள் புனை கதைகள். 4ஆண்டுகளுக்கு முன் மெக்ஸிகோவில் பன்றிக்காய்ச்சல் தாக்கி தினசரி மக்கள் மரணமடைந்து வருவதாக ஊடகங்கள் செய்தியைப் பரப்பின. நூற்றுக்கணக்கானோர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மெக்ஸிகோவில் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதிலும், உலக நாடுகள் முழுவதிலும் இது பரவ வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. பன்றிக் காய்ச்சல்பன்றி இறைச்சி உண்பவர்க்கும் பன்றி வளர்ப்பவர்க்கும் வரக்கூடும் என்பதால் பன்றிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது (பன்றி இனம் முழுவதும் அழித்துவிடும் யோசனை கூட இவர்களுக்குத் தோன்றலாம். அப்படி அழித்து விட்ட பின்பும் கூட இந்தப் பன்றிக்காய்ச்சல் அழிந்து விடும் என்று இவர்களால் உறுதி கூற முடியாது என்பதே உண்மை)


பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன?
இது வழக்கமாகப் பன்றிகளிடம் தோன்றும் சுவாச நோய்களில் ஒன்று. Type A இன்புளூயன்சா வைரஸ் காரணமாக பன்றிகளிடம் தோன்றும் சளி சுரமே பன்றிக்காய்ச்சல் எனப்படுகிறது. இந்நோய் வருடம் முழுதும் வரக்கூடிய வாய்ப்பு இருந்தாலும் மழைக்காலம் துவங்கி முடிவதற்குள்ளான இடைப்பட்ட காலத்தில் அதிகம் பரவுகிறது. மனிதர்களுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் சளி சுரம் போன்றதே பன்றிக்கு ஏற்படும் சளிசுரமும்.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் எது ?
பறவைக் காய்ச்சல் வைரஸ், மனிதரிடம் ஏற்படும் இன்புளூயன்சா வைரஸ், பன்றிகளிடம் காணப்படும் இன்புளூயன்சா வைரஸ் இவையெல்லாமே கலந்து இன்று பன்றிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்புளூயன்சா வைரஸ்களில் முக்கியமானவை நான்கு உள்ளன. 1).H1N1 2).H1N2 3).H3N2 4).H3N1. தற்போது அதிகம் பரவுவது H1N1 வைரஸ் எனப்படுகிறது.


பன்றி இறைச்சியால் நோய் பரவுமா?
பன்றி இறைச்சி உண்பதால் இந்நோய் பரவுவதில்லை. 1600 பாரன்ஹீட் வெப்பத்தில் சமைக்கப்படும்போது பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் மற்ற கிருமிகள் போலவே முற்றிலும் அழிந்து விடுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் பன்றிகள் வளர்க்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய நோய் தாக்கி மரணங்களை ஏற்படுத்தியதில்லை. மேலும் பன்றிகளோடு சேர்ந்து வாழும் சூழ்நிலை காரணமாக அத்தகைய தொற்றுக் கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனும் தலித் மக்களிடம் தோன்றி விடுகின்றது. அமெரிக்காவின் நிலை வேறு.

இன்புளூயன்சா வைரஸ் பொதுவாக பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு மட்டுமல்ல. மனிதர்களிடமிருந்து பன்றிகளுக்கும் பரவுகின்றன என்பதே உண்மை. அமெரிக்காவி லுள்ள  CDC நிறுவனம் தகவலின் படி கடந்த காலங்களில் ஒரு வருடத்திற்கு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இந்நோயால் மரணமடைந்துள்ளனர். டிசம்பர் 2005 முதல் பிப்ரவரி 2009க்குள் 12 பேர்கள் இறந்துள்ளனர்.

மனிதரிடம் பரவிய பன்றி சுரம் மற்றவர்க்கு பரவுவது எப்படி ?
Swine flu எனப்படும் பன்றிக்காய்ச்சல் மனிதரிடம் பரவும் வழிகள் : 1).தொடுதல் 2).தும்மல் 3).முத்தமிடுதல் 4).நோயுற்ற பன்றியை அல்லது நோய்கிருமி தொற்றியுள்ள பொருட்களை தொடுதல் 5).அதன் பின் மூக்கு, வாய், கண்களைத் தொடுதல் என்று அலோபதி உலகம் நீண்ட பட்டியலை அடுக்குகிறது.

தும்மும் போது ஏவுகணையை வீசும் வேகத்தில் இக்கிருமிகள் பாய்ந்து சென்று தாக்கும் என்று கூறுகின்றனர். அவ்வளவு வேகத்தில் எத்தனை ஆயிரம் மனிதர்களை இக்கிருமிகள் கடந்து செல்லும்? ஏன் ஒரு சிலர் மட்டும் கிருமிகளின் தாக்குதலுக்கு பலியாகின்றனர் ? என்ற கேள்விக்கு பதில் உண்டா?

மனித சளிசுரத்திற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் பன்றி காய்ச்சலுக்குப் பயன்படாது என்கிறார்கள். எனவே இந்நோய்க்குத் தனி தடுப்பூசி தேவை என்கிறார்கள். இனி எத்தனை ஆயிரம் தடுப்பூசிகளை உலகம் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை!

பன்றிக்காய்ச்சலின் போது காணப்படும் அறிகுறிகள் என்ன?
வழக்கமான இன்புளூயன்சா சுரத்தில் தோன்றும் பல குறிகள் தான் பன்றிக் காய்ச்சலிலும் காணப்படும் பிரதானமான குறிகள் : 1).சுரம் 2).இருமல் 3). தொண்டை வலி மேலும் ஏற்படக்கூடிய குறிகள்: ஜலதோசம், நீர்ஒழுக்கு, மூக்கு அடைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, தசைவலி, தலைவலி, குளிர் உணர்வு, கடும் சோர்வு, பலவீனம், கண்வலி, பசியின்மை சிக்கலான நோய்க்குறிகள் சிலருக்கு ஏற்படலாம். அவை பிராங்கைடிஸ், நிமோனியா, சுவாச இயக்கம் நின்றுவிடுதல், சைனஸ்தொற்று, காதுத் தொற்று போன்றவையாகும்.



இந்நிலையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் முற்றிலும் அழிந்து விட்ட நோயாளி மரணமடைய நேரிடுகிறது. (பன்றிகளிடம் பன்றிக் காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகள் : சுரம், செயலற்ற மந்தநிலை, மூக்கு ஒழுக்கு, வாய்வழி சுவாசம், விட்டு விட்டு இருமல் - இக்குறிகளால் பன்றிகள் கடுமையாக பாதிக்கபட்டாலும் பெரும்பாலும் மரணம் ஏற்படாது. மரணவிகிதம் பன்றிகளிடம் மிக மிகக் குறைவு. இந்நோய் பன்றிகளிடமிருந்து 7 நாட்களில் நீங்கி விடுகிறது.)

பன்றிக்காய்ச்சலுக்கு ஹோமியோபதி சிகிச்சை

வறுமையும், அறியாமையும், மூடநம்பிக்கைகளும், சுகாதாரக்கேடுகளும், வேலையின் மையும் எங்கு உள்ளதோ அங்கு நோய்கள் தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. ஆனால் அறிவியலும் தொழில் நுட்பமும், மருத்துவமும், செல்வங்களும் பெருகி நிரம்பி வழிவதாகக் கூறப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சாதாரண பருவகால நோய்களுக்கும் கூட மக்கள் பலியாவது ஏன்? கர்ப்பகாலம் முதல் பிறந்து சில ஆண்டுகள் வரை தடுப்பூசிகள் போடப்பட்டும் நோய்கள் தாக்குவது ஏன்? ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகளையும், நடைமுறைகளையும் புனிதமாய் போற் றும் அறியாமையும், மூடநம்பிக்கையும் உலகை விட்டு நீங்கும் வரை ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி இந்தியா.அமெரிக்கா வித்தியாசமின்றி எல்லோரை யும் எல்லா நாடுகளையும் எல்லா காலங்களிலும் பாதிக்கக்கூடிய வகையில் நோய் தாக்குதலும் ஆங்காங்கே அழிவுகளும் பீதிகளும் இருக்கத் தான் செய்யும்.

ஹோமியோ தடுப்பு மருத்துவ வெற்றிப் பதிவுகள்

இன்புளூயன்சா நோய் தடுப்பில் ஹோமியோபதியின் வெற்றிக்குச் சரித்திர சான்றுகள் உள்ளன. அமெரிக்காவில் 1918ல் பரவிய இன்புளூயன்சா சுரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதியின் ஆற்றல் நிரூபிக்கப்பட்டது. கொலம்பியாவைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 1918 Flue epidemic நேரத்தில் ஆங்கில சிகிச்சை பெற்றவர்களில் மரணவிகிதம் 30 சதவீதம் என்றும் ஹோமியோபதி சிகிச்சை பெற்றவர்களில் மரணவிகிதம் 1 சதவீதம் என்றும் தெரிகிறது. அதாவது ஹோமியோபதி சிகிச்சை பெற்ற 1500 நோயாளிகளில் 1485 நோயாளிகள் முழுநலம் அடைந்துள்ளனர்.


ஓகியோபகுதியில் National Homeopathic Hospitalல் சேர்க்கப்பட்ட 1000 நோயாளிகளில் ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக ஒருவருக்கு கூட மரணம் ஏற்படவில்லை 100 சதவீதம் வெற்றி.

சிகாகோவை சேர்ந்த Dr.Frank Wieland M.D. அவர்கள் “8000 தொழிலாளர்க்கு புளுசுரத்திற்கு ஹோமியோபதியிலுள்ள ஜெல்சிமியம் எனும் ஒரே ஒரு மருந்து மட்டுமே தரப்பட்டது. எந்தச் சூழலிலும் அவர்களுக்கு ஆஸ்பிரினோ, தடுப்பூசிகளோ பயன்படுத்தவில்லை. இச் சிகிச்சையில் கிடைத்த வெற்றி 98 சதவீதம் .ஓகியோ மாகாணத்தில் அலோபதி சிகிச்சை பெற்ற 24000 நோயாளிகளில் 28.2 சதவீதம் இறப்பு ஏற்பட்டதாகவும் ஹோமியோபதி சிகிச்சை பெற்ற 26000 நோயாளிகளில் 1 சதவீதம் இறப்பு ஏற்பட்டதாகவும் .கனெக்டிகட் பகுதியில் ஹோமியோ சிகிச்சை பெற்ற 6602 நோயாளிகளில் 6547 பேர்கள் முழு குணமடைந்தனர் என்றும் மரண விகிதம் 1 சதவீதத்திற்குமே குறைவு என்றும் அமெரிக்காவில் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பன்றிக் காய்ச்சல் சிகிச்சையில் பயன்படும் முக்கிய ஹோமியோ மருந்துகளும் குறிகளும் :

1).ஜெல்சியம் (Gelsemium) :

ஆரம்பநிலை சளிசுரத்தின் குறிகள் தும்மல், மூக்குஉறுத்தல், கடும்தலைவலி, உடல்வலிகள், தசைவலி குளிர் உணர்வு, நடுக்கம், களைப்பு, மந்தமான உணர்வு, தூக்கக் கலக்கத்துடன் சுரம், கண்கலங்குதல். அகோனைட்டை விட குறைவான தீவிரத் தன்மையுள்ள சுரம். ஆனால் கடின இருமல். 1918ல் பெருவாரியாக மக்களைத் தாக்கிய போது (அமெரிக்காவில்) அதிகம் பயன்பட்டமருந்து இது.

2] பாப்டீசியா (Baptisia) :

கடுமையான ஃபுளூ சுர அறிகுறிகள் பிதற்றல், வாய்ப்புண்கள், உடல்பாகங்கள் சிதறிக் கிடக்கும் உணர்வு, துர்நாற்றமுள்ள வயிற்றுப்போக்கு. (மருத்துவர் J.H.கிளார்க் இன்புளூயன்சாவிற்கு ஏறக்குறைய இது “specific” எனக் குறிப்பிடுகிறார். 30வது வீரியம் தேர்வு செய்கிறார். மருத்துவர் ஹியூக்ஸ் இம்மருந்தை மிகவும் புகழ்கிறார். ஆனால் 1x, 2x, வீரிய நிலை திரவ மருந்தையே பயன்படுத்தியதாகக் கூறுகிறார்)

3] யூபடோரியம் பெர்ஃபோலியேடம்:

கடுமையான எலும்பு வலிகள், உடல்வலிகள், தும்மல் களகளத்த இருமல் குறிகளுடன் சுரம் குரல் வளையில் கடும் வலி, கரகரப்பு, தாகம், தாகத்துடன் தடுமன், நீர் அருந்தினால் வாந்தி. இருமலில் நெஞ்சைப் பிடித்துக் கொள்ளுதல். ஆரம்ப நிலையில் நன்கு பயன்படும் மருந்து இது.

4] ஆர்சனிகம் ஆல்பம்:

இந்நோயின் பல கட்டங்களிலும் பயன் படக் கூடிய மருந்து இது. சுவாசப்பாதையின் மேல்பகுதியில் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகளுக்கு இம்மருந்து உடனடி பலனளிக்கும். அதிக சுரம், அமைதியின்மை, பதட்டம், களைப்பு, கொஞ்சம் கொஞ்சமாய் தாகம், தும்மல், நீர் ஒழுக்கு போன்ற குறிகள் திடீரென முற்றுகையிடும் போது ஆர்சனிகம் ஆல்பம் நல்ல நிவாரணம் வழங்கும்.

5] ரஸ்டாக்ஸ்:

அமைதியின்மையுடன் சுரமும் உடல்வலிகளும், குறிப்பாக கால்களில் வலி, உளைச்சல் (அசைவுகளில் சற்று நிவாரணம்) தும்மல் கடின இருமல் தொற்றுநோயாக பரவித் தாக்கும் போது இம்மருந்து பெரிதும் பயன்படும். .இன்புளூயன்சா சுரம்,சளி போன்றவை சாதாரண ஜலதோசமாக மாறி பின் நலமடையும் ஒய்வில் குறிகள் அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

6] ஆர்ஸ் அயோடு:

இன்புளூயன்சா சுரத்தின் பிரதான குறிகள் இம்மருந்தில் காணப்படுகின்றன கடுமையான ஜலதோசம், தும்மல், எரிச்சலும் அரிப்பும் உள்ள நீர் ஒழுக்கு, களைப்பு, குளிர் உணர்வும் வெப்ப உணர்வும் உடலினுள் பாய்தல் (மருத்துவர் ஹேல்இன்புளூயன்சாவிற்கு இம்மருந்தினைப் பரிந்துரைக்கிறார்

7] பிரையோனியா :

தலைவலி, உடல்தசைவலிகளுடன் சுரம், இருமல், வயிற்றுவலி, நா வறட்சி, குளிர் நீர் விரும்பும் அதிக தாகம். அசைவற்றுக் கிடக்க விருப்பம். அசைவுகளால் தொந்தரவு அதிகரிக்கும். இருமினால் நெஞ்சுப்பகுதியில் வலி, மலச்சிக்கல் ஒய்விலும், அழுத்தத்திலும் சற்று நிவாரணம்.

8] சபடில்லா:

திறந்த வெளியில் சென்றால் தும்மல், தும்மலுடன் கண்ணீர், தொண்டையில் வீக்கமும் வலியும் வெறும் வாயை விழுங்கினால் அதிகரிக்கும். தும்மலின் போது மொத்த உடலும் குலுங்கும். முன் தலைவலி வறட்சி ஆனால் தாகம் இருக்காது. இருமல் கீழேபடுத்தால் அதிகரிக்கும்.

ஹோமியோ தடுப்பு மருந்து :

 முதல் நாள் ஒரு வேளை’இன்புளூயன்சினம் 200’[INFLUENCINUM-200C]
2ஆம் நாள் முதல் தினம் காலை வெறும் வயிற்றில் ‘ ஆர்சனியம் ஆல்பம் 30’ [ARSENICUM ALBUM-30C] தொடர்ந்து 3 நாட்களுக்கு.


இவ்விரு மருந்துகளும்  ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். நோய் தாக்கியிருப்பின்  குறிகளுக்கேற்ப ஆற்றல்மிக்க இதர ஹோமியோ மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று எளிதில் குணமடையலாம்.

No comments:

Post a Comment