Tuesday, January 6, 2015

பெண்களுக்கான அற்புத ஹோமியோ நிவாரணி ஃபாலிகுலினம் (FOLLICULINUM) -டாக்டர் எஸ்.வெங்கடாசலம்


பெண்களுக்கான அற்புத ஹோமியோ நிவாரணி ஃபாலிகுலினம் (FOLLICULINUM) -   டாக்டர் எஸ்.வெங்கடாசலம்                                                                                                                            
இது பெண்களுக்கான மிகச்சிறந்த ஹோமியோ நிவாரணி. இதனைக் கண்டறிந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ நிபுணர் மெலைசா ஆசிலம். சினைப்பைகள் சுரக்கும் இயற்கை ஹார் மோன் Folliculin  (இதற்கு Oestrogen என்று பெயர்). இதனை வீரியப்படுத்திக் தயாரிக்கப்பட்ட மருந்து என்பதால், பெண்களின் ஹார்மோன் அமைப்பு பாதிப்புகளுக்கும், பலவித உடல் நலப் பிரச்சனைகளுக்கும், உணர்வுரீதியான பாதிப்புகளுக்கும், குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளதாக டாக்டர். மெலைசா ஆசிலம் அழுத்தமாகக் கூறுகிறார்.

மனநிலைகளும் உணர்வு நிலைகளும்
பிறரோடு பழகுவதில் தன்னை முழுவதுமாக இழத்தல்; பிறர் வயப்படுதல்.
தனது நேரம், கவனம், ஆற்றல் அனைத்தையும் பிறருக்காக, பிறரின் எதிர்பார்புகளுக்காக செலவிடுதல் பிறரின் கால்மிதிப் போல் ஆகிவிடுதல்.
தனது ‘தனித்தன்மை’, ‘சுயம்’ ‘தன்னுணர்வு’ இழந்து, தான் யார்? தனது விருப்பு வெறுப்பு என்ன? என்ற உணர்வு கூட இல்லாமை.
எளிதில் மனம் உடைதல்; புண்படுதல்; அமைதியிழத்தல்; மன உறுதியை இழத்தல், உணர்வுரீதியாக, உளவியல் ரீதியாக சோர்வடைதல்.
தனித்திருக்க விரும்பமின்மை.

மாதவிடாய்க்கு முந்திய உடல், மன நிலைகள் (PreMenstrual Problems))
கருமுட்டை வெளியேறும் நாளிலிருந்து மாதவிடாய் துவங்கும் வரையிலும் ஏற்படும் பலவிதக் குறிகளுக்கு ஏற்றது (symptoms from ovulation to Menses).
சினைப்பை என்பது படைப்பாற்றல் மிக்க ஓர் உறுப்பு. அது செயல்படாவிட்டால் படைப்பு தடைபடும். இந்தத் தடைக்கான மூலகாரணம் ஆதிக்க மனோபாவமும் அதிகார உணர்வும் கொண்ட பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணையே (Domineering Parant or Spouse). படைப்பு ஆற்றல் அடக்கப்பட்டால் அல்லது தடுக்கப்பட்டால் அது எங்கே செல்லும்? என்ன ஆகும்? அது நோய்களாய் வடிவங் கொள்ளும். மனஅழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், அதிஉணர்ச்சி, உறுதியற்ற மனநிலை உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
மனச்சோர்வும் மனக் கிளர்ச்சியும் மாறிமாறி ஏற்படும்; அழுகை உண்டாகும். எரிச்சலும்,        கோபமும் ஏற்படும். மனநிலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பீதி ஏற்படும்.
சப்தம், தொடுதல், வெப்பம் தாங்க இயலாது.
பாலுணர்வு மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக அதிக பாலியல் கிளர்ச்சி காணப்படும். பாலியல் இயற்கை குறித்து மாறாத எண்ணம் இருக்கும் (Fixed ideas of Sexual Nature).
பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படும்.
மாதவிடாய்க்கு முன்பாக மார்பகங்கள் வீங்கி, வலி ஏற்படும். தொட்டால் வலி அதிகரிக்கும். இவ்வலி மாதவிடாய் வந்தபின் மறையும்.
மாதவிடாய்க்கு முன்பாகக் கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
குமட்டலும், வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும். பின் மலச்சிக்கல் ஏற்படும் - இரு நிலைகளும் மாறிமாறி ஏற்படும்..
மாதவிடாய்க்கு 10 நாட்கள் முன்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும்.
மாதவிடாய்க்கு முன்பாக அல்லது கருமுட்டை வெளியாகும் காலத்தில் அதிகளவு சாப்பிடாமலேயே எடை அதிகரிப்பு & நீர் உடம்பாகப் பெருத்தல் இரண்டும் ஏற்படலாம். (சில பெண்களுக்குக் கட்டாயம் அதிக அளவு உண்ணுதலில் மிகுந்த விருப்பம் ஏற்படலாம்.)
கருமுட்டை வெளிப்படும் நாட்களில் சினைப்பைப் பகுதியில் இழுக்கும்வலி, எரிச்சல்வலி, கவ்விப்பிடிக்கும் வலி, திட்டுத்திட்டாய் மாதவிடாய் படுதல்,  நீர்மக்கட்டிகள் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன.
மாதவிடாய்க்கு முன்பு உடலின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு உபாதைகள் எழுகின்றன.
கோதுமை மற்றும் சர்க்கரை மீது அதீத விருப்பம் உண்டாகும்.
தலைவலியுடன் அதிகளவு சளிப்பிடிக்கும்.
முகத்தில் பருக்கள் வெடிக்கும். விரல்களில் வறட்சியுடன் சரும எழுச்சிகளும், நகங்களில் பிளவும், உடைதலும் உண்டாகும். பலவித தோல் ஒவ்வாமைகள், சரும எழுச்சிகள், அரிப்பு, வறண்ட கரப்பான் படை, பெண்களின் தலையில் சொட்டை விழுதல் போன்றவை ஏற்படும்.
இருதயத்தைச் சுற்றி இறுக்கும் உணர்ச்சி ஏற்பட்டு இடதுகையில் பரவும். நுரையீரலுக்குப் புதிய காற்றுத் தேவைப்படும். காற்றை நீண்டு சுவாசித்தல்; ஆழ்ந்த பெருமூச்சு விடுதல்; வறட்டு இருமல் ஏற்படுதல்; இருதய இறுக்க உணர்ச்சியில் இருமல் மேலும் அதிகரிக்கும்.
மாதவிடாய்க்கு முன்பும், கருமுட்டை வெளிப்படும் போதும், மாதவிடாயின் போதும் முதுகிலும், அடிமுதுகிலும் வலி அதிகரிக்கும்.
மாதவிடாய்க்கு முன் கல்லீரல் வீக்கம்; அஜீரணம்; வாந்தி, குமட்டல்; வலது கீழ் உதரவிதானப் பகுதியில் ‘மாதவிடாய் முன்வலி’ தோன்றுதல்.
வயிறு வீங்குதல், கனத்தல், இரைச்சல் ஏற்படுதல், மலச்சிக்கல் ஏற்படுதல், சிலசமயம் மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படுதல். மலக்குடல் பகுதியில்       கனஉணர்வு.
திரவங்கள் விழுங்கும்போது தொண்டையில் தாங்க முடியாத அழுத்தமும் வலியும் ஏற்படும்.
வேகமான இருதயத்துடிப்பும், மயக்க உணர்வுடன் கூடிய படபடப்பும் ஏற்படும்.
மீண்டும் மீண்டும் நீர்ப்பை அழற்சி ஏற்படும்.
மாதவிடாய் காலப் பிரச்சனைகள்
சினைப்பைகள் மையப்படுத்தி மாதவிடாயின் போது வலி ஏற்படும்.
நீடித்த, ஏராளமான மாதவிடாய், நல்ல சிவப்புக் குருதியாக கரும்புள்ளிகளுடன் வெளிப்படும்.
பொதுவாக, குறுகிய கால அல்லது நீடித்த மாதவிடாய் சுழற்சி சம்பந்தமான அனைத்து      வகைப் பிரச்சனைகளுக்கும் Folliculinum  ஏற்றது.

மாதவிடாய் முற்றுக் காலப் பிரச்சனைகள் (Menopausal Problems)
மாதவிடாய் முற்றுக்காலத்தில் தோன்றும் பெருமளவிலான உடல் மற்றும் மனக்குறிகளைச் சீராக்கக் கூடிய ஆற்றல் இம்மருந்துக்கு உண்டு.
மாதாந்திரச் சுழற்சியில் ஒழுங்கீனம்
அதிக ரத்தப்போக்கு
உடலில் வெப்ப அலைகள், அனல்வீச்சு.
இரவு வியர்த்தல்; காற்றுப்பசி; கிறுகிறுப்பும் மயக்கமும்
வயிறு கனத்தல்
கர்ப்பப்பையில் தசைநார்க்கட்டிகள்
மிகை உணர்ச்சி - சப்தம், வெப்பம், தொடுதல் தாங்க இயலாது.
யோனி வறட்சி; மஞ்சள் அல்லது மரக்கலரில் கழிவு வெளிவருதல்.

இக்குறிகளில் எவையேனும், அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்பப்பை நீக்கப்பட்டபின் , அல்லது சினைப்பை நீக்கப்பட்டபின் காணப்பட்டால் Folliculinum பயன்படும். Menopause காலத்தில் அல்லது கர்ப்பப்பை, சினைப்பை அகற்றிய பிறகு சினைப்பை சுரக்கும் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவில் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும். ஃபாலிகுலினம், சினைப்பையின் ஈஸ்ட் ரோஜன் சுரப்பைத் தூண்ட வாய்ப்புள்ள போது தூண்டுகிறது. அத்தோடு சிறிதளவு ஈஸ்ட்ரோஜன் சுரக்கக்கூடிய அட்ரினல் சுரப்பி, கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற பாகங்களையும் தூண்டு கிறது. ஞஸ்ஹழ்ஹ் அகற்றப்பட்ட பின்னரும் இச் செயல் நடைபெற ஃபாலிகுலினம் பயன்படுகிறது.
ஃபாலிகுலினத்தின் இதர பயன்பாடுகள் :
இயல்பான நிலையில் சினையகங்கள் புரெஜெஸ்டிரான் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது இனப்பெருக்கத்திற்குத் தேவையான அளவிற்கு உற்பத்தி ஆகிறது. அட்ரினல் சுரப்பிகள் சில வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இவை ஒருவகை ஹார்மோன்களாக மாற்றம் அடைகின்றன. இத்தகைய ரசாயன மாற்றத்தின் போது புரொஜெஸ்டிரான் உற்பத்தி செய்யப்படுகிறது. சினைப்பைகளால் உற்பத்தி செய்யப்படும் புரொஜெஸ்டிரான் அளவு குறைவாக இருந்தாலும் Corticosteroid உற்பத்திச் செலவிலேயே புரொஜெஸ்டிரான் கிடைப்பதால் மாதவிடாய் சுழற்சியில் தடையும், பாதிப்பும் நிகழாது.
அட்ரினல் சுரப்பி பலவித Cortico steroid களை உற்பத்தி செய்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒரு பணியை மேற்கொள்கிறது. சிலவற்றிற்கு உடல் திசுக்களின் நீர்சமநிலையைப் பாதுகாப்பது பொறுப்பு. அப்போது செல்களிலுள்ள Iodium & Pottassium அளவுகளை ஒழுங்குபடுத்தும்; சில ஹார்மோன்கள் அலர்ஜி பாதிப்புகளைத் தடுக்கும்; சில ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்; சில ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் தொடர்பான பாகங்களை இயக்கும்

குழந்தைப் பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பெண்கள் உடலின் இயற்கையான இயக்கப் போக்குகளில் மாற்றங்களும், நோய்களும் ஏற்படுத்துகின்றன என ஹோமியோபதி நிபுணர்கள் உறுதிபட நம்புகின்றனர். கருத்தடை மாத்திரைகள் உண்ட பெண் மீண்டும் கர்ப்பம் அடைவது கடினம். கருத்தடை மாத்திரைகளால் இழந்த உடல் சமநிலையை மீட்கவும், மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பை உருவாக்கவும்  ஃபாலிகுலினம் உதவுகிறது.
மாதச் சுழற்சியைத் தற்காலிகமாக நிறுத்தவும், கருவைத் தடுக்கவும் எடுக்கப்படும் ஊசிகள், மருந்து, மாத்திரைகளால் பெண்ணின் உடலில் Estrogen Poisoning ஏற்படுகிறது. இதனால் உடலியக்க ஒழுங்குகள் தவறுவதோடு அதிகமாதப் போக்கு, கருவணு வெளிவராமை, கருத்தரிக்க இயலாமை, கருத்தரித்து விட்டால் இடையிலேயே சிதைவு, பிரசவத்திலும் பாலூட்டுவதிலும் இன் னல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய விளைவுகளை நிறுத்த ஃபாலிகுலினம் துணை புரிகிறது.
உடல்ரீதியாக, உளரீதியாக, பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம், பலாத்காரம் செய்யப்பட்ட வரலாறுள்ள பெண்களின் பிரச்சனைகளுக்கு இம்மருந்து பயன்படும். பாலியல் கொடுமை களுக்கு தற்போதோ அல்லது முன்போ ஆளான பெண்களுக்கு அவை நினைவிருக்கிறதோ இல்லையோ ஃபாலிகுலினம் சிறப்பாகப் பயன்படும்.
பெண்ணின் உடலையும் மனதையும் அவளது இசைவின்றி தவறாகப் பயன்படுத்தியவர் பெற்றொராக, உடன்பிறந்தவராக, உறவினராக, அன்போடு பராமரிப்பவராக, எஜமானராக, உயர் அதிகாரியாக இருக்கலாம். ‘மாட்டேன்’ என்ற ஒருமுறை கூடச் சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். துஷ்பிரயோகம் செய்தவரோடு பலமாக இணைக்கப்பட்ட நிலையை, தேவையற்ற கட்டுப்பாட்டைத் தகர்க்க ஃபாலிகுலினம் பயன்படும். மேலும் பழைய பலமான நினைவுகளின் மோதலைச் சந்திக்க கூடுதல் பலம் அளிப்பது ஃபாலிகுலினம்.
“அவர்களின் மன உறுதியை மீட்கவும், தன் மதிப்பு உணர்வை அதிகரிக்கவும், நலமான உணர்வை ஏற்படுத்தவும் ஃபாலிகுலானம் அரிய வகையில் பயன்படும்” என்று சில ஹோமியோ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீரிய அளவு :
ஃபாலிகுலினம் வெவ்வேறு வீரியங்களில் வெவ்வேறு விதமாக பலனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3X அல்லது 4X வீரியம் - அடக்கப்பட்ட மாதவிடாயிலும், குறைவான மாதப்போக்கிலும் தூண்டுதல் தந்து பலனளிக்கும்.
7C வீரியம் - மாதவிடாய் தொடர்புள்ள, ஹார்மோன் தொடர்புள்ள உடலியக்கச் சீர்குலைவுகளை, வலிகளை சமனப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் உதவும்.
9C வீரியம் -  அடிக்கடி மாதப்போக்கு ஏற்படக்கூடிய விபரீதத்தைத் தடுக்கும்.
நோயாளிக்கு வேறு ஹோமியோபதி மருந்துடன் ஃபாலிகுலினத்தை தேவைக்கேற்ப மாற்றிமாற்றி தரலாம்.

மாதவிடாய் சுழற்சி துவங்கி 10 முதல் 14 நாட்களுக்குள் 5 நாட்கள் அல்லது மாதவிடாய் சுழற்சி துவங்குவதற்கு 5 நாள் முன்பு இரவு வேளை இம்மருந்தை உபயோகிக்கலாம். (மாதவிடாய் நின்றுவிட்ட, அறியமுடியாத பெண்களுக்கு இது பொருந்தாது)

Wednesday, August 20, 2014

மாரியம்மாளின் மரணம் இயற்கையானது தானா? - டாக்டர். S.வெங்கடாசலம்

மாரியம்மாளின் மரணம் இயற்கையானது தானா?  -  டாக்டர். S.வெங்கடாசலம்
            
சாத்தூருக்கு அருகிலுள்ள கண்மாய்சூரங்குடி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாளுக்கு வயது 23.  எளிய விவசாயி ஒருவரின் மனைவி. காட்டு வேலை, வீட்டுவேலை எல்லா வேலைகளும் செய்யக்கூடிய திடகாத்திரமான பெண்.
            
அவரது வலது மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி போன்ற புடைப்பு தோன்றியிருந்ததை ஒரு நாள் கவனித்திருக்கிறார். வலியில்லை வேறு தொந்தரவில்லை என்பதால் அப்படியே விட்டு விட்டார்.  சிலநாட்களில் கட்டி வளர்ந்து இருப்பதைக் கண்டு துணுக்குற்றார்.  கணவருடன் வந்தார்.  பரிசோதித்துப் பார்த்துவிட்டு பயப்படவேண்டாம் மருந்து மாத்திரைகளிலேயே இதைக் கரைக்க முடியும் என்று தெரிவித்தேன்.  அந்த பெண்ணை முழுமையாக விசாரித்து உரிய மருந்து கொடுத்து பதினைத்து நாட்கள் கழித்து வருமாறு கூறி அனுப்பினேன்.  ஆனால் மாரியம்மாள் பதினைந்து நாளில் மீண்டும் வரவில்லை.  நாட்கள் ஓடின.  மிகுந்த சிரத்தை எடுத்து மருந்தளித்த பின் நோயாளர் எந்தவித தகவலுமின்றி வராமல் இருப்பது ஹோமியோ பதியர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலை.
           
பின்னர் தாமதமாக ஒரு நாள் மாரியம்மாளின் கணவர் மட்டும் வந்தார்.  அவரது மனைவிக்கு இந்தச் சின்னஞ்சிறிய கடுகு மாத்திரைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் மாத்திரை களையும் சரியாகச் சாப்பிடவில்லை என்றும் ஒரு மாதத்தில் கட்டி பெரிதாகத் தெரிந்ததால் மதுரையில் ஒரு பெரிய டாக்டரைச் சந்தித்து அவரது பரிசோதனை ஆலோசனைகளின்படி கட்டியை ஆபரேசன் செய்து நீக்கிவிட்டதாகவும் கூறினார்.  என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.  சிறிது நேர மௌனத்திற்குப் பின் இப்போது உங்கள் மனைவி நன்றாக இருக்கிறாரா? என்று விசாரித்து விட்டு அனுப்பினேன்.
           
நான்கைந்து மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அந்தப் பெண்ணுக்கு வலது மார்பகத்தில் ஆபரேசன் செய்த இடத்திற்குப் பக்கத்திலேயே முன்பைவிட சற்று பெரிதாக மற்றொரு கட்டி வந்து விட்டது.  (ஆபரேசன் மூலம் வெளியே தெரிந்த கட்டியை அகற்றியும் கட்டிகள் மீண்டும் மீண்டும் உருவாகும் உடலியக்க சூழலை மாற்றவில்லையே! நோயின் வேர்கள் அழியவில்லையே! ஆபரேசன் செய்தும் நிரந்தர நோயாளியாக அல்லவா மாற்றப்பட்டுள்ளார்)
            
மீண்டும் மதுரை டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டு வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன.  பின்னர் கட்டியை அல்ல வலது மார் பகத்தையே ஆபரேசன் மூலம் அகற்றி விட்டனர்.  (இது தான் நோயை வேரோடு களைதலா? பெண்மை யைப் பறைசாற்றும் மார்பகங்களில் ஒன்றை விஞ்ஞானப்பூர்வ நவீன சிகிச்சை என்ற பெயரால் மாரியம்மாள் இழந்து விட்டார்.  பல நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி, நலமடைந்த (?) பின்னர் கிராமத்திலுள்ள வீட்டுக்குத் திரும்பினார்.  ஊரிலுள்ளவர்களும், உறவினர்களும் விஷயமறிந்து வீட்டிற்கு வந்து விசாரித்துச் சென்றனர்.

            
எறும்பைப்போல் சுறுசுறுப்பாக இருந்த மாரியம்மாள் இப்போது வீட்டின் மூலையில் பாயில் படுத்தே கிடந்தார்.  வாசல் பெருக்கி நீர் தெளித்துக் கோலமிடவில்லை.  வீட்டு வேலைகள் பார்க்கவில்லை காட்டுவேலைக்கு போகவில்லை கணவரோ மற்றவரோ கூப்பிட்டால்கூட எங்கோ ஆழத்தில் புதைந்து கிடப்பது போல ‘ம்’ என்ற மெதுவான பதில் சத்தத்தோடு மௌனமாகிக் கிடந்தார்.
            
மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது என்று சிலரும், காத்து கருப்பு பட்டு விட்டது, பேய் பிடித்துவிட்டது என்று சிலரும் ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு சோறு தண்ணீர் இல்லாமல் மாரியம்மாள் முடங்கிவிட்ட பின் கடவுளின் ஏஜெண்டுகளாக சில பூசாரிகளும் மாந்திரீகவாதிகளும் மாரியம்மாளின் கணவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்து சென்றனர்.  மாரியம்மாளின் நிலை மோசமாகிக் கொண்டே போனது.  ஊர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த ஓர் நள்ளிரவில் மாரியம்மாள் நிரந்தரமாய் உறங்கி விட்டார்.


          
  நடந்து முடிந்த சோகத்தை அவரது கணவர் என்னிடம் தெரிவித்த போது தாங்கிக் கொள்ள இயலாத துக்கமும் அதிர்ச்சியும் எனக்கு ஏற்பட்டது.  “அவளுக்கு வைத்தியம் பார்க்க நகை நட்டுகளை விற்றேன், நிலத்தை விற்றேன்.  அவ்வளவு செலவழித்தும் அவள் விதி முடிந்து விட்டது.  மாரியம்மாள் போய்விட்டதால் எனக்கு எல்லாமே போய்விட்டது” என்று தோளில் கிடந்த துண்டால் கண்ணீரைத் துடைத்தபடி கூறிவிட்டுச் சென்றார்.  அந்த ஏழை உழவரின் இல்லத்தில் ஏற்பட்ட துயரத்தை இப்போது நினைத்தாலும் மனசின் கனம் மாற நீண்ட நேரமாகிறது.
                                          ********    **********    *********
     சிவகாசியைச் சேர்ந்த சகோதரி உமாவிற்கு வயது 21.  அம்மாவுடன் வந்தார்.  உமாவிற்கு வலது மார்பகத்தில் சிறிய கட்டிகள் இரண்டும் சற்று பெரிய கட்டி ஒன்றும் செயின்போல் அடுத்தடுத்து அமைந்திருந்தன.  அதிகம் அழுத்தினால் மட்டுமே லேசான வலி ஏற்பட்டது.  “எப்படியோ நான் கவனக்குறைவாக இருந்துவிட்டேன்.  எனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.  இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது.   சிவகாசியில் டாக்டர்களிடம் காட்டினேன்.  அறுவைச் சிகிச்சை தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டனர்.  கல்யாண நேரம் என்பதால் மார்பகத்தில் ஆபரேசன் செய்து கொள்வதில் இஷ்டமில்லை அம்மாதான் பல இடங்களில் கேட்டு விசாரித்து விட்டு இது மாதிரி கட்டிகளை ஆபரேசன் இல்லாமல் ஹோமியோபதியில் குணப்படுத்து கிறார்களாம் என்று சொன்ன பிறகு இங்கு வந்திருக்கிறோம்.”

           
உமாவிடம் எல்லா விவரங்களையும் கேட்டறிந்து குறித்துக் கொண்ட பின்னர் மருந்துகள் கொடுத்து அனுப்பினேன்.  சரியாக 15 நாட்கள் கழித்து வந்தார்.  “ஒரு மாற்றமும் தெரியவில்லையே” என்றார்.  பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் மருந்துகளைச் சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டு தொடர்ந்து மருந்துகள் கொடுத்தனுப்பி னேன்.  மற்றும் ஒரு முறை இதே போல் மருந்தளித்தபின்னர் 45 நாட்களில் சிறிய கட்டிகள் இரண்டும் காணாமல் போயின.  பெரிதாக இருந்த கட்டி பாதியளவு குறைந்து விட்டது.  உமாவின் உள்ளத்தில் நம்பிக்கை வலுவடைந்தது.  வரும் போதெல்லாம் ஹோமியோபதி மருத்துவமுறை பற்றியும் ஆர்வமாய் விசாரித்தார்.  சிகிச்சையும் தொடர்ந்தது.

            திருமண நாளுக்கு ஒருவாரம் முன்பு ‘அழைப்பிதழ்’ கொடுக்க வந்த உமாவின் முகத்தில் பிரகாசம்.   “கட்டிகள் இருந்த தடயமே இல்லை”  என்றார்.  அவருக்கு இறக்கைக் கட்டி பறக்கும் சந்தோசம். 


“இவ்வளவு சக்தி மிக்க நல்ல மருந்துகள் இருக்கும்போது ‘ஆபரேசன்’ தவிர வேறு வழியே இல்லை என்றும் தாமதப்படுத்தினால் ஆபத்து என்றும் ஏன் மிரட்ட வேண்டும்?”  என்று அர்த்தம் பொதிந்த கேள்வி உமாவிடமிருந்து வந்தது.  “ஹோமியோபதியின் மூலம் முழுநலம் பெற்ற உங்களைப் போன்றவர்கள் தான் இந்தக் கேள்விக்குரிய நடமாடும் பதில்கள்” என்று சொல்லிவிட்டு முன்கூட்டியே திருமண வாழ்த்துகளைக் கூறி அனுப்பி வைத்தேன்.

                                                       ----------------------
            சாதாரண சின்னஞ்சிறிய மூக்குச்சதை வளர்ச்சியிலிருந்து (POLYP) தொண்டைச் சதை வளர்ச்சி, கொழுப்புக்கட்டிகள் (LIPOMA), கர்ப்பப்பை, தசைநார்க்கட்டிகள் (UTERINE FIBROIDS), மார்பகக் கட்டிகள் (BREAST TUMOURS), திரவக்கட்டிகள் (CYSTS), மூலம் (HAEMORRHOIDS), பௌந்திரம் (FISTULA), ஆணிகள் (CORNS), பாலுண்ணிகள், மருக்கள் (WARTS) போன்ற உடலில் ஏற்படும் அதீத வளர்ச்சிகளையும் (EXTRA GROWTHS) சிறுநீரகக்கல், பித்தப்பை கல், கல்லீரல் வீக்கம் மண்ணீரல் வீக்கம் போன்ற வற்றையும் பக்க விளைவுகள் இல்லாமல் மீண்டும் தோன்றாமல் ஆபரேசன் இல்லாமல் குணப் படுத்தும் ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கு உண்டு.  இதற்கான கண்முன் சாட்சியங்களாய் ஹோமியோ சிகிச்சையில் குணமடைந்த பல்லாயிரம் பேர்கள் உள்ளனர்.  விபத்துகள் போன்ற மிகச் சிக்கலான கட்டங்களில் மட்டுமே அறுவைச் சிகிச்சை தேவை என்கிறது ஹோமி யோபதி.
            
மேலே குறிப்பிட்ட இரண்டு பெண்களின் சிகிச்சை அனுபவங்களை ஆராய்ந்து பாருங்கள் உமா முழுநலமடைந்து புதுமணப் பெண்ணாக இல்லற வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார்.  மாரியம்மாள் இடி தாக்கிய மரமாய் இறந்து விழுந்து விட்டார்.  அறுவைச் சிகிச்சைகளால் எத்தனை பின்விளைவுகள்! எத்தனை பாதிப்புகள்! மாரியம்மாளின் மரணம் இயற்கையானது தானா?  என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.  ‘சொர்க்கத் தின் வாசல்கதவு திறந்தே இருக்கிறது;  வருவதற்கு ஆளில்லை. நரகத்தின் கதவு மூடிக்கிடந்தாலும் சுவரேறிக் குதிக்கிறார்கள்’ என்ற அனுபவ மொழிதான் நினைவுக்கு வருகிறது.



“பல்லாயிரம் நோயாளிகள் தம் நோய்களால் இறக்காமல் மருத்துவர்களின் சிகிச்சைகளினால் இறந்துள்ளனர்.”- Dr.ஹானிமன்