Sunday, July 6, 2014

ஹோமியோபதி & மாற்றுமருத்துவம் கேள்வி பதில்-2ஹோமியோபதி & மாற்றுமருத்துவம் கேள்வி பதில்

·         எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவனுக்கு வயது 7; இளையவளுக்கு வயது 4.இரண்டு பேருக்கும் சளிபிடிக்காத நாளே இல்லை. இரண்டு பேருக்கும் சேர்ந்தே சளி பிடிக்கிறது. அல்லது இரண்டு பேருக்கும் மாறி மாறி சளிப்பிடிக்கிறது. இவர்களை வயிற்றில் சுமந்த காலம் முதல் இன்று வரை ஆங்கில மருத்துவம் தான் பார்த்து வருகிறேன். நோய் நீங்கிய பாடில்லை. இளையவளுக்கு இப்போது ரட்ங்ங்க்ஷ்ண்ய்ஞ் வரத் துவங்கிவிட்டது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் செலவழித்தும் நலம் கிடைக்க வில்லை. ஹோமியோபதி சிகிச்சை மூலம் என் குழந்தைகளை தீராத சளித்தொந்தரவிலிருந்து காப்பாற்ற முடியுமா? -                                                 T-சாவித்திரிபள்ளிப்பாளையம். 

·         மிகுந்த மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளான உங்களைப் போன்ற பெற்றோர் விழித்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகளைக்கூட நோயாளிகளைப் போல நடத்தும் மருத்துவமே அலோபதி. மரத்திலே காய் கனியும் வரை காத்திராமல் குறுக்குவழியில் பறித்து செயற்கை / ரசாயன முறையில் பழுக்க வைத்து விற்கப்படும் பழங்களைப் போல 100க்கு 90 முதல் 95 விழுக்காடு சிசேரியன் மூலம் குழந்தையை பெறச் செய்கிறது அலோபதி மருத்துவம். பிறந்த நாள் முதல் காலவாரியாக பல தடுப்புந்துகளை பிஞ்சு உடலுக்குள்   செலுத்தி இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை நிர்மூலம் செய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஓர் குட்டிப் பிரபஞ்சம். இயற்கையின் ஆற்றல்களும் தன்மைகளும் ஒவ்வொரு குழந்தைக் குள்ளும் உண்டு. 
ஆங்கில ரசாயன மருந்துகள் மூலம் நம் குழந்தைகளின் உடலில் அமைந்துள்ள இயற்கையான (நோய் எதிர்ப்பு)ஆற்றல் தகர்க்கப்பட்டு நோய்கள் முற்றுகையிடுகின்றன. ஆங்கில மருத்துவத்திலுள்ள குழந்தை நல நிபுணர்களிடம் பெற்றோரும் பிள்ளைகளும் கூட்டம் கூட்ட   மாக காத்திருந்து பெறும் சிகிச்சைகளின் ஒட்டுமொத்த பலன் தான் என்ன? உங்கள் பிள்ளைகளே உதாரணம்!
ஹோமியோபதி மருத்துவம் உங்கள் குழந்தைகளுக்கு நோயிலிருந்து முழு விடுதலை அளிக்கும். சமீப ஆண்டுகளாக மத்தியரசு மக்கள் நல்வாழ்வுத்துறை தாய் சேய் நலத்தில் ஹோமியோபதியின் சிறப்பிடம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வருகிறது. ஆயினும் இது இன்னும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். விரிவான விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டால் உங்களைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களும் குழந்தைகளும் பயனடைவார்கள். அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தியுங்கள்.

·         சமீபத்தில் ஹீலர்’ ஒருவரின் சொற்பொழிவைக் கேட்டேன். ரத்த அழுத்தம் உள்ளவர் கள் உப்பு’ குறைத்துக் கொள்ளவோநிறுத்தவோ அவசியமில்லை. வேண்டியளவு உப்பு சாப்பிடலாம் என்று கூறினார். இதனால் தற்காலிகமாக ஆ.ட. கூடுவது போல் தெரியும். கவலைப்படாதீர்கள். அதனால் ஒன்றுமில்லை” என்று ஆணித்தரமாக கூறினார். நான் 10 ஆண்டுகளாக பிரஷர் மாத்திரை சாப்பிட்டு வரக்கூடியவன். ஹீலர்கூறியதைப் போல சாப்பிடும் முறைகளில் சில மாற்றங்களைச் செய்து,                சாதம்குழம்புகாய்கறிகளில் உப்பு சேர்த்து சாப்பிடத் துவங்கினேன். தற்பொழுது பிரஷர் நன்கு ஏறிவிட்டது. தலைபாரம்உடற்சோர்வுபலவீனம்கிறுகிறுப்பு என       உடலில் பலவிதத் தொந்தரவுகள் வரத் துவங்கிவிட்டன. நான் செய்தது... செய்வது... சரியா தவறாஇயற்கை மருத்துவத்தின் அடிப்படையில்தான் அந்த ஹீலர் ஆலோசனைகள் வழங்குவது போல நினைத்தேன். தாங்கள் கருத்து என்ன?         -K.ராமன்திண்டுக்கல்.

·         உப்பு, சீனி, பால் மூன்றையும் மூன்று வெண்ணிற நஞ்சுகள்என்று இயற்கை மருத்துவம் வருணித்து எச்சரிப்பது உலகறிந்தது. உப்பில்லாத பண்டம் குப்பையிலேஎன்ற பழமொழி பலரது வாழ்க்கைக்குப் பொருந்தாது. உலகின் பலநாடுகளில் மக்கள் மத்தியில் உப்புபற்றிய விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது.
இரத்த அழுத்தம் மட்டுமின்றி, நீரிழிவு நோய், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பல முக்கிய நோய்கள் அதிகரித்து வருவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக உப்புஅமைந்துள்ளது. இந்த உப்புதொடர்பான சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம். 
உலகிலேயே முதன் முதலில் கடல்நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்ùடுத்தவர்கள் எகிப்தியர்களே. அவர்களது மொழியில் நேட்ரான்’ (NATRON) எனப்பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு (மம்மிக்களை பாடம் செய்வதற்கு) உப்பைப் பயன்படுத்தினர். ஆதிகாலத்தில் போரில், வேட்டையில் ஈடுபட்ட மனிதர்களுக்கு சோடியம் உப்புகண்டுபிடித்து    புது மாதிரியான அனுபவத்தை தந்தது. 
அன்றைய உடலுழைப்பு சார்ந்த வாழ்க்கை யில் மனித உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறியது. ரத்தத்திலுள்ள சோடியம் உப் பின் சமநிலை அவ்வப்போது குறைந்தது. போர்க் காலத்தில் வீரர்கள் உடல் சோர்ந்து விழும்போது அவர்களின் கையில் உப்புக்கட்டிகள் கொடுக்கப் பட்டன. அதேபோல நாக்கில் சிறிது உப்பு பட்டவுடன் உற்சாகம் ஏற்பட்டுவிடும்.       ஆகவே அப்போது தங்கத்தைவிட உப்பு உயர்வானதாக மதிக்கப்பட்டது. உப்பை (SALT) உழைப்பின் ஊதியமாகப் பெற்ற காலம் உண்டு. நஹப்ற் லிருந்து பிறந்த சொல்தான் SALARY ! 
இன்று ஏன் எல்லா மருத்துவ முறைகளும் உப்புக்கு எதிராகக் கொடிபிடிக்கின்றன? உடலுழைப்பு குறைந்து வரும் காலம் இது. ஒரு பகுதியினர் எப்போதும் உட்கார்ந்த நிலையில், குளிரூட்டப்பட்ட அறைகளில் வேலை பார்க்கிறார்கள்.      பதப்படுத்துவதற்கும், சில உணவுகளில் சற்று சுவை கூட்டவும் பயன்படுத்தத் துவங்கிய உப்பை இன்று உணவுகளில் அதிகளவு சேர்க்கும் நிலை வந்துவிட்டது. ஒரு நபரின் ரத்தத்தில் மொத்தம் 200 கிராம் சோடியம் இருக்கவேண்டும். அதிகமானால் வியர்வை, சிறுநீர் மலம் மூலம் உப்பு வெளியேற்றப்படும். நமது சிறுநீரகங்கள் ஒரு லிட்டர் சிறுநீரில் 2 கிராம் உப்பை வெளியேற்றுகின்றன. (12 கிராம் உப்பை வெளியேற்ற வேண்டுமானால் ஆறு லிட்டர் சிறுநீர் கழிக்கவேண்டும்!)
உடல் குறைபாடு காரணமாக சிறுநீரகம் சோடியம் உப்பை வெளியேற்றுவதில் பலவீனம் ஏற்பட்டால் உடல் பருமன் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரக கோளாறு, இருதய அடைப்பு போன்ற அபாயங்களும் ஏற்படக்கூடும்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
மனித உடலுக்கு பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம்,   சோடியம் ஆகிய 4 உப்புகள் அத்தியாவசியமானவை. இவற்றில் சோடியம் உப்பை மட்டுமே கடல்நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சோடியம் உப்பு ஏற்படுத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளை முன்னிட்டு கடலுக்குள் இருக்கும் பவளப் பாறைகளிலிருந்து கிடைக்கும் மெக்னீஷியம், புரோட் டீன்கள் அடங்கிய கோரல்உப்பு’ (COREL SALT), ஜப்பான், அமெரிக்காவில் பிரபலமடைந்து    வருகிறது. மலைப் பிரதேசங்களில் பாறை வடிவில் கிடைக்கும் சோடியம் மிகக் மிகக் குறைவாகவும், சல்பர், மெக்னீஷியம், கால்சியம் அதிகமாகவும் உள்ள இந்து உப்பை இந்தியாவில் ஒரு பகுதியினர் பயன்படுத்துகின்றனர்.
கடுமையான உடலுழைப்பு இல்லாத நிலையில் தினசரி வெறும் 2 கிராம் உப்பே ஒருவருக்கு போதுமானது. ஆனால் நிலைமை என்ன? காலை முதல் இரவு வரை ஒவ்வொரு நபரும் தேவையைவிட மிக அதிகமாக உப்பை உட்கொள்ள நேரிடுகிறது. உடலில் உப்பு மூலம் சோடியம் அளவு அதிகரிப்பதால் உயிர் அணுக்களை பாதிக்கிறது. ஆண்மை குறைகிறது, கருத்தரிக்கும் வாய்ப்புகளும் குறைகின்றன. எனவே தான், ரத்த அழுத்தம் முதல் மலட்டுத்தன்மை வரை ஏற்படுத்தும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுமாறு மருத்துவங்கள் மன்றாடுகின்றன.
நண்பரே! உங்களைப் போன்றவர்களை உப்பு சாப்பிடுமாறு ஊக்குவிப்பவர் ஹீலரா கில்லரா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உப்பைக் குறையுங்கள். பாக்கெட் உப்பு வேண்டாம். அதில் 99% சோடியம் உள்ளது. கல் உப்பில் 40% தான் சோடியம் உள்ளது. கல் உப்பை வாங்குங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குறைத்து உபயோகியுங்கள். ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு அலோபதி சிகிச்சை வேண்டாம். ஹோமியோபதி சிகிச்சையில் நீங்கள் (வாழ்   நாள் முழுதும் மாத்திரையடிமையாவதை மாற்றி) விரைவில் நலம் பெறமுடியும்.

·         என் மனைவிக்கு கடந்த 3 வருடமாக ஒவ்வொரு மாதமும் பத்துநாட்களுக்கு மேல் ரத்தப் போக்கு ஏற்படுகிறது. இடுப்புவலிவயிற்றுவலிகால் கை உளைச்சல்தலை சுற்றல்வாந்திசோர்வு ஏற்பட்டுமிகவும் பலவீனமாக இருக்கிறாள். வயது 29. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது பிரசவத்திற்குப் பின்னர்தான் இந்த மாதிரி அளவுக்கு அதிகமாக மாதப்போக்கு ஏற்படுகிறது. பலவிதமான மருந்து மாத்திரை சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. “கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள். வேறு தீர்வு இல்லை!” என்கிறார்கள். மருந்து மாத்திரைகளில்லாமல் இயற்கை மருத்துவம் மூலம் என் மனைவியின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமா?-                                                         T. வரதன்கரூர்.

·         உங்கள் மனைவி போல சில பெண்கள் பெரும்போக்கு காரணமாக அவதிப்பட நேரிடுகிறது. ரத்தம் அதிகளவு வெளியேறுவதால் ரத்த சோகை (ANAEMIA) தாக்குகிறது. மேலும் தலைசுற்றல், மயக்கம், குமட்டல், உடல் அசதி, பலவீனம், உடல் முழுதும் வலி, தூக்கமின்மை, சுரம், இடுப்பு வலி, கால் நரம்புகள் இழுப்பு (CRAMPS), தசைவலி, பதட்டம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அதிகப்போக்கு ஏற்பட அடிப்படையான காரணங்கள் உள்ளன. கர்ப்பப்பை பலவீனம், இயக் குநீர் (HARMONES) சுரப்பிகளில் ஏற்றத் தாழ்வு, மன அழுத்தம், கவலை, கோபம், எரிச்சல், உடற்பயிற்சி யின்மை, சத்துள்ள உணவுகள் சாப்பிடாமை போன்ற காரணங்கள் முக்கியமானவை.
இப்படிப்பட்ட பெண்கள் முதலில் போதுமான ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். ரத்தப்போக்கு நாட்களில் வேகமாக நடப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது கூடாது; அதிக எடை தூக்கக் கூடாது. ஆடைகளை இறுக்கமாக அணியக்கூடாது. உள்ளாடை அடிக்கடி மாற்றுதல் நல்லது. தினம் மூச்சுப் பயிற்சி உற்சாகம் தரும். காலை முதல் இரவு வரை ஐந்தாறு தடவைகளுக்கு மேல் பழச்சாறுகளை தேன் கலந்த அருந்தவேண்டும்.(முக்கியமாக அத்திப்பழம், பேரீச்சை, மாதுளம்பழம், ஆப்பிள், சப்போட்டா, நாவற்பழம், கருப்பு திராட்சை) வெண்பூசணி சாறு, பீட்ரூட் சாறு, காரட் சாறு, கொத்தமல்லி இலைச்சாறு, கருவேப்பிலைச் சாறு, முள்ளங்கி இலைச்சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றில் தேன் கலந்து தினமும் ஒரு சாறு பருகி வரலாம். (இவற்றில் சீனி சேர்க்காதீர்கள்; தயவு செய்து ஐஸ் சேர்க்காதீர்கள், இனிப்பு தேவை எனில் தேன் மட்டும் சேர்க்கலாம்)
வாழைப்பூ கசாயம், மருதம்பட்டை கசாயம், அசோக மரப்பட்டை கசாயம் போன்றவை அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் அற்புத சக்திமிக்கவை. (பொதுவாக துவர்ப்புச் சுவைமிக்க உணவுகள் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும்)
இத்தகைய இயற்கை முறைச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது ... அருகிலுள்ள ஹோமியோ,                சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ நிபுணர் யாரையேனும் நேரில் சந்தித்து, ஆலோசனை பெற்று தேவையெனில் (பக்க விளைவு இல்லாத) மருந்துகளும் சேர்த்தே சாப்பிடச் செய்யலாம்.உங்கள் மனைவியின் மாதப்போக்கு சில மாதங்களில் சீராகும்!

·         நான் எடை குறைவாகஒல்லியாக இருக்கிறேன். ஓரளவாவது சதை போட வேண்டும் என்று விரும்புகிறேன். என் வயது 23. என் நண்பர்கள் எனக்குக் கூறும் ஆலோசனைகள்1) வாராவாரம் தவறாமல் நான்கைந்து முறை பீர் சாப்பிட வேண்டும் (பீர் உடலுக்கு நல்லதுஎடை கூடும்உடல் குளிர்ச்சியடையும் என்பது அவர்களின் கருத்து) 2) பச்சை முட்டைகளாகத் தினமும் சாப்பிட வேண்டும். 3) சில சத்துமாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த ஆலோசனைகள் என் எடையை அதிகரிக்குமா?                              - K.பத்மராஜன்தஞ்சாவூர்.

 நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்ன பணியாற்றுகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் இக்கேள்வியில் உங்கள் நண்பர்களின் அறியாமையும் உங்களின் அப்பாவித்தனமும் பளிச்செனத் தெரிகிறது. பீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது; எடை கூடும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். பீர் குடித்தால் தொந்தி விழும்.  
முட்டையைப் பச்சையாகக் குடிப்பதும் நல்லதல்ல. அஜீரணக் கோளாறுகளும் வேறு சில வியாதிகளும் உண்டாகும். உடல் எடையை அதிகரிக்கும் நோக்கோடு எந்தவித மாத்திரை மருந்துகள் எந்த ஆங்கில மருத்துவ நிபுணர் ஆலோசனையின்பேரில் சாப்பிட்டாலும் வீதியில் போகிற சனியனை விலைகொடுத்து வாங்கிய கதைதான். வேண்டாம் விபரீத விளையாட்டு. 
உங்கள் தோற்றம் ஒல்லியாக இருப்பது ஒன்றும் தவறில்லை, ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம். உயரத்திற்கேற்ற எடை என்று உள்ளதா எனப் பாருங்கள். உதரணமாக உயரம் 168 செ.மீ என்றால் 168-100=68 என்று கணக்கிடுங்கள். இதைவிடக் குறைவாக இருந்தால் சற்றே அதிகரிக்க சரியான வழிமுறைகளைச் கண்டுப்பிடியுங்கள். 
தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். அத்துடன் சத்தான உணவுகள், புரதம், மாவு, இனிப்பு, கொழுப்புச் சத்துக்களும் அவசியம். மரபணுக் களும் நாளமில்லாச் சுரப்பிகளும் உடல் எடையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

·         எங்கள் பகுதியில் ஒரு ஹோமியோபதி மருத்துவர்தலைமுடி சம்பந்தமானபிரச்சினைக்காக சிகிச்சை பெறச் சென்றபோது ஷாம்பூ உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். ஷாம்பூகளில்லாமல் தலைமுடியைச் சுத்தமாகப் பராமரிக்க முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஷாம்பூ களால் எவ்வித நன்மையும் இல்லையா? -                                                                                   N .ஜெயஸ்ரீதிருவாடானை.

·         ஷாம்பூ மட்டுமின்றி இன்றைய நவநாகரிக உலகில் குவிக்கப்பட்டுள்ள எண்ணற்ற அழகு சாதனப் பொருள்கள் எதிலும் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏதுமில்லை. விளம்பரங்களின் கவர்ச்சி வலையில் மக்கள் மீள முடியாமல் வீழ்ந்துவிடுகின்றனர். ஷாம்பூ உபயோகித்தால் சுத்தமாவது மட்டுமின்றி தலைமுடியை தரைவரை வளரச்செய்து தவழவிடலாம் என்று விளம்பரங்கள் புளுகித் தள்ளுகின்றன. ஒரு பானம் குடித்தால் உங்கள் பிள்ளைகள் உயரமாக வளரும் என்கிறார்கள். மற்றொரு பானம் குடித்தால் உங்கள் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அகிலத்தை ஆளுவார்கள் என்கிறார்கள். ஒரு கிரீம் பூசினால் ஒரு சில வாரங்களில் கருப்பு நிறம் சிவப்பாக மாறிவிடும் என்கிறார்கள். இவை போன்ற விளம்பரங்களின் பின்னால் உள்ள உண்மைக்குப் புறம்பான பித்தலாட்டங்களால் வெகுவாக பாதிக்கப்படுவது படித்த, நடுத்தர வர்க்கத்து மக்களே.
முடியின் தன்மை அவரவரது பாரம்பரியம், வயது, உடல் ஆரோக்கிய நிலை போன்றவற்றினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புகளால் உலர்ந்த கூந்தலில் ஈரப்பசையினை உண்டாக்கவோ, பட்டுப்போல் மென்மையாக மாற்றவோ இயலாது. சேதமடைந்த முடிகளைப் புதுப்பிக்க ஷாம்புகளால் முடியாது. ஏனென்றால் ஷாம்பூ என்பது தண்ணீர், டிடர்ஜெண்ட், எண்ணெய், வாசனைப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த கலவையாகும். ஷாம்புகளில் வரும் நுரைக்கும், முடி & தலைதோலின் சுத்தம் & சுகாதாரத்திற்கும்   எந்தச் சம்பந்தமுமில்லை.
தலைத்தோல் அரிப்பு, படை, பொடுகு உள்ளவர்கள் ஷாம்பூ பயன்படுத்திக் கொண்டே சிகிச்சையும் சேய்து வந்தால் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். ஒருக்காலும் நலம் கிட்டாது.சுத்தமான சீயக்காய் பொடி, கடலை மாவு, பாசிபயறுமாவு போன்றவை எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தாத இயற்கையான பொருட்கள். இவற்றை ஷாம்பூக்கு பதில் பயன்படுத்துங்கள்.

·         எனக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. வயது 33. கணவரின் வயது 37.          ஏழு வயதில் பையன் இருக்கிறான். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் இரண்டாம் தடவையாக கருவுற்றேன். கருத்தரித்தது தெரியாமலேயே சிறுநீர் தொற்று (Urinary infection) க்காக தொடர்ச்சியாக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டேன். பிறக்கப் போகும் குழந்தைக்கு அதனால் மூளைவளர்ச்சியின்மை உள்பட குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்று டாக்டர் எச்சரித்ததால் கருக்கலைப்பு செய்துவிட்டேன் இன்றுவரை அதன்பின் கர்ப்பம் ஏற்படவேயில்லை. டாக்டர் கருக்கலைப்பு செய்து கொண்டதால் தான் இந்த பாதிப்பாஇதற்குத் தீர்வு தான் என்ன? -                                                                          N. லட்சுமிசிவராஜ்,வத்தலகுண்டு. 

·         ஹிஸ்ட்ரோ சால்பிஞ்சோ கிராம் அல்லது லேப்ராஸ்கோபி சோதனை செய்து கருக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்று பாருங்கள் பொதுவாக எம்.டி,பி. எனப்படும் Medical Termination of `Pergnanacy செய்யும்போது Fallobian Tube அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு அப்படி ஏற்பட்டால் கருவுறுதல் சாத்தியமில்லை.
ஒருவேளை அடைப்பு ஏதுமில்லை என்று சோதனைமூலம் தெரியவந்தால் மிண்டும் கருவுறுவதில் பிரச்சினை எதுவு மிருக்காது என்றாலும் ஆங்கிலமருத்துவத்தில் DC செய்து கொள்ளுமாறு கூறுவார்கள். இதன்பின் குழந்தை பிறக்கக் கூடும் எனக் காத்திருப்பார்கள். ஆரம்பம் முதல் செய்த தவறுகள் போலவே இதுவும் அமையும்.
அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். மிச்சசொச்சமுள்ள கருவுறும் வாய்ப்பை அலோபதி சிகிச்சைகள் மூலம் இழந்து விடாமல் ஹோமியோபதி மூலம் உங்களிடம் இன்னொரு அழகிய பூ மலரட்டும்! நம்பிக்கையோடு ஹோமியோபதி சிகிச்சைக்குச் செல்லுங்கள்.

·         எங்குபார்த்தாலும் கற்றாழை ஜøஸ்கற்றாழை சோப்கற்றாழை களிம்புகற்றாழை பானங்கள் என்று விற்கப்படுகிறதே! கற்றாழையில் அப்படியென்ன விசேசம்எங்கள் பகுதியில் இப்போது கூட கிராமப்புறங்களில் வீடுகளின் முன்புறம் திருஷ்டி பரிகாரமாக கற்றாழையைக் கட்டுகின்றனர். கற்றாழை திருஷ்டிப் பொருளாமருந்துப் பொருளா? -                                                                                                                            J. கஜேந்திரன்பரமக்குடி. 

·         நாள்பட்ட புண், வயிற்றுவலி, மூலம், மலச்சிக்கல், வயிறு நோய்கள், பூச்சிக்கடி, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்கு கற்றாழையைக் கொடுக்கலாம்என்று அரிஸ்டாடில் கூறியிருப்பதிலிருந்து இது எவ்வளவு தொன்மையான, வலிமையான இயற்கை மருந்து எனப் புரிந்து கொள்ளலாம். 
உண்மையில் கற்றாழை எந்த வீட்டில் உள்ளதோ அங்கே நோய்கள் நெருங்காது. மரணம் தள்ளிப்போகும். எனவே வீட்டு முன்பு கற்றாழையைக் கட்டிவைக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட விஷயம் வேறு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. கற்றாழை எனப்படும் இந்த அன்னிய நாட்டுச் செடி நான்காம் நூற்றாண்டில்தான் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.
அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் கற்றாழை கொஞ்சம் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு போன்ற பலவித வயிற்று கோளாறு காரக்கு சிறந்த நிவாரணி இது.
கற்றாழையில் வைட்டமின், என்சைம்கள், மினரல் மற்றும் அமினோ ஆசிட் எல்லாம் உள்ளன. காயங்கள் . புண்கள் மீது கற்றாழை மருந்தைத் தடவினால் விரைவில் ஆறுகின்றன.
காயங்களால் ஏற்படூம் வலியை நீக்குகிற சக்தியும் கற்றாழைக்கு உள்ளது. காயங்களின் உள்ளே துழைந்திருக்கும் பாக்டீரியா, ஃபங்கஸ், வைரஸ் போன்ற கிருமிகளையும் கற்றாழை அழித்தொழிக்கும். 
மேலும் கற்றாழையில் உள்ள ஆண்ட்டிசெப்டிக் ஏஜெண்ட்டுகள் நம் தோலின் வறட்சியைப்     போக்கி ஈரத்தன்மை ஏற்படுகின்றன. அரிப்பை நீக்குகின்றன. தோலிலுள்ள நச்சுத் தன்மை
நீங்கி ரத்த ஒட்டம் அதிகரிக்கச் செய்கிறது. கற்றாழையின் பலன்கள் இன்னும் ஏராளம் உள்ளன! 

·         அக்குப்பிரசர் மூலம் மலச்சிக்கல் குணமாகுமா ? எங்கள் வீட்டில் பெரியவர்கள்,சிறியவர்கள் வித்தயாசமின்றி எல்லோருக்கும் மலச்சிக்கல் ஒருபெரிய பிரச்சினையாக உள்ளது. கைப்பக்குவமாக பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. அக்குப்பிரசர் செய்துபார்த்தால் பலன் கிடைக்குமா டாக்டர்?                                                                         - M. கார்குழலி,மன்னார்குடி. 

·         நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். போதியளவு நீர் அருந்தாமையால், உணவில் நார்ச்சத்து இல்லாமையால், துரித உணவுகளால், பேக்கரிப் பண்டங்களால், உடற் பயிற்சியின்மையால் மலச்சிக்கல் ஏற்படுவதால் இவற்றை சரிசெய்ய வேண்டும். 
ஆள்காட்டி விரலின் கடைசியில் LI-4 என்ற புள்ளியிலும், கீழுதட்டின் அடியில் முகவாயில் உள்ள புள்ளியிலும் தொப்புளுக்கு கீழே 2 விரல் அகலம் தள்ளி உள்ள புள்ளியிலும், தொப்புளுக்குப் பக்கவாட்டில் 3விரல் அகலம் தள்ளி உள்ள புள்ளிகளிலும் சிலநிமிடம் தினமும்       காலை, மாலை அழுத்தம் தரவேண்டும். மலச்சிக்கல் மட்டுமின்றி வேறுபல அஜீரணத் தொந்தரவுகளும் சேர்ந்து குணமாகும். புள்ளிகள் இடத்தைக் கண்டறிவதில், பிரசர் கொடுப்பதில் குழப்பம், தயக்கம் இருப்பின் அருகிலுள்ள தகுதியும் அனுபவமும் நிறைந்த அக்குப்பிரசர் தெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுங்கள். 

·         என் நண்பண் வயது 22. அவனுக்கு பெண்களைப் போல முகத்தில் மீசை வளராமல் வாளிப்பாக உள்ளது. இதனால் அவனுக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டு யாருடனும் கலகலப்பாகப் பேசிப் பழகுவதில்லை அவனது அக்காவிற்கு வயது 24. அவர்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல மீசை அரும்பியுள்ளது. அது அவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் சங்கோஜமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்டு சந்தோசமேயில்லாமல் இருக்கிறார்கள். இவர்களின் தாயார் சமீபத்தில் டைபாய்டு சுரத்தால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை பெற்றார். தற்போது சுரம் இல்லை. ஆனால் அவருக்கு எப்போதுமில்லாதளவுக்கு முடிகொட்டுவதால் அதிர்ச்சி யடைந்துள்ளார். அருகிலுள்ள பியூட்டி பார்லர்களை நம்பிப் பணம் செலவழித்தும் இவர்கள் அனைவருக்கும் வேதனைதான் மிச்சம் . இப்பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுமருத்துவ சிகிச்சை உள்ளதா?-            L. நாராயணன்வில்லாபுரம்மதுரை. 

·         நண்பர் நாராயணன் அவர்களே! உங்கள் நண்பர் மற்றும் அவரது அக்கா, அம்மா மூவரின் முடிப் பிரச்சினைகளும் விரைவில் முடிவு காணக் கூடிய பிரச்சினைகளே! அழகு நிலையங்களிலோ, அலோபதி சிகிச்சையிலோ இப்பிச்சினைகளுக்கு விடைகாண முடியாது. ஹோமியோபதி மருத்துவம் ஒன்றுதான் மூவரின் பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளிவைக்க உதவும். 
                 ஆணுக்கு அழகூட்டி, கம்பீரம் ஏற்படுத்தும் ஆண்மை அடையாளமாய் அமைவது மீசை. மீசை முளைப்பதற்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்தான் காரணம். இது சுரக்கா விட்டால் அல்லது குறைவாக சுரந்தால் மீசை முளைப்பதில் பிரச்சினை வரும். ஹோமியோபதியில் தைராய்டினம், நேட்ரம்முர், செபியா மற்றும் சில மருந்துகள் உறுதியாக மீசை அரும்பச் செய்யும். 
                 முகத்தில் மீசை வளர்ந்துள்ள பெண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் சற்று அதிகரித்ததன் விளைவு அது. தூஜா, ஒலியம் ஜெகோரியஸ் ஆகிய ஹோமியோ மருந்துகள் மீசை முடிகளை மறையச் செய்து பெண்ணின் இயற்கையான முக்அழகை மீட்டு வழங்கும். 
                 சிலருக்கு டைபாய்டு சுரத்திற்குப் பின் முடிகொட்டும். உங்கள் நண்பரின் அம்மாவிற்கு ஆசிட் புளோர் (Acid Flour)30 இ என்ற ஹோமியோ மருந்து நிவாரணமளிக்கும். முடிஉதிர்தல் முடிவுக்கு வரும். அருகிலுள்ள ஹோமியோ மருத்துவரை அணுகி மூவரும் அவரது ஆலோசனை பெற்று மருந்துகள் உண்பது விரைவான நலம் பெற உதவும். 

·         எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகிறது. முதல் 2 வருடம் உறவு இனிமையாக இருந்தது. ஓரு குழந்தைக்குத் தந்தை ஆனேன். மனைவி கருவுற்றபோதும்பிரசவித்த பிறகும் பலமாதம் தனித்திருந்தேன். பின்னர் தான் பிரச்சினை ஆரம்பித்தது. எழுச்சி முன்பு போல இல்லைஉறவின் நேரமும் சுருங்கி விட்டது. என் மனைவியைப் பொறுத்தவரை குழந்தை பெற்றபின் செக்ஸில் விருப்பமே இல்லாதவளாக மாறி விட்டாள்! என் வற்புறுத்தலுக்கு இணங்கினால் மதனநீர் சுரக்காமல் அவள் வலியை உணர்கிறாள். எங்களது தாம்பத்திய உறவு பழங்கதை போல ஆகிவிட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். மாற்று மருத்துவத்தில் எங்களின் பாலியல் நலப் பிரச்சினை களைத் தீர்க்க வழியைக் கூறுங்கள். - பால்கணேசன்காரைக்கால். 

·         பாலியல் நலச் சிக்கல்களைத் தீர்க்க வயாகரா போன்றவை ஆங்கிலமருத்துவம் விஞ்ஞானப் போர்வையில் சிபாரிசு செய்யும் வன்முறைத்தனமான மருந்துகளாகும். இப்பிரச்சினைகளைச் சிறப்பாக, இயற்கையாக, பக்கவிளைவு இன்றித் தீர்ப்பதற்கு ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்களே ஏற்றவை. 
       நீங்கள் இருவரும் சர்க்கரைநோய் உள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.மன அழுத்தம், பரபரப்பு குழப்பங்களுக்கு இடமில்லாத அமைதியான சூழல் உறவுக்கு உகர்ந்தது. ஆண்களின் எழுச்சிசக்தியை மேம்படுத்த Selenium, Conium, Ustilago, Agnus Castus, Damiana போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. ஹோமியோ மருத்துவர் மேற்பார்வையில் இம்மருந்துகளில் உங்களுக்குரியதை தேர்வு செய்து சிகிச்சை பெறுங்கள்.
       பெண்களின் ஒருபகுதியினருக்கு மாதவிடாய் முற்றுப் பெற்ற (Menopause) பிறகும் பாலுணர்வு விருப்பம் குறையாமல் நீடிக்கிறது. ஒருபகுதியினருக்கு ஒருகுழந்தை பெற்றதும் குறைந்து விடுகிறது. குழந்தையை பராமரிப்பது, குடும்ப வேலைகள் போன்ற காரணங்களால் மனநிலை, உடல் நிலையில் பெண்களுக்கு மாற்றம் ஏற்பட்டு பாலுறவு விருப்பம் சரிந்து விடுகிறது. காரணமறிந்து, பிரச்சினையின் தன்மையறிந்து பெண்களின் உடலுறவு விருப்பத்தை இயற்கையாக மீட்பதற்கு, மதனநீரை சுரக்கச் செய்வதற்கு, உறவின் போது ஏற்படும் வலித்துயரை நீக்கி உறவில் பரவச உணர்வை உருவாக்குவதற்கு ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. தம்பதியர் இருவரும் அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவரை அணுகுங்கள். மீண்டும் உங்கள் இல்லத்தில் தாம்பத்தியஉறவு செழிக்கட்டும்.


No comments:

Post a Comment