Sunday, July 6, 2014

ஹோமியோபதி & மாற்று மருத்துவம் கேள்வி பதில்


ஹோமியோபதி & மாற்று மருத்துவம் கேள்வி பதில்
• எனக்கு கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி உள்ளது. 3 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. ஆங்கில மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். தற்போது சில மாதங்களாக சிறுநீர் அடிக்கடி கழிக்கும் நிலை வந்துள்ளது. இரவில் மிகவும் சிரமமாக உள்ளது. மணிக்கொரு முறை எழுந்து சிறுநீர் கழிப்பதால் தூக்கம் பாதிக்கிறது. பகலில் மிகவும் சோர்வு ஏற்படுகிறது. ஒரு நாள் கூட தவறாமல் ஆங்கில மாத்திரை மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தபோதிலும் இது ஏன் ஏற்பட்டது என்று டாக்டரிடம் விசாரித்தேன். ஸ்கேன் பரிசோதனை செய்து சுக்கிலச்சுரப்பி (Prostate Gland) வீங்கியுள்ளதாகவும், ரத்த சர்க்கரை அளவும் கூடியுள்ளதாகவும் கூறினார். ‘இன்சுலின்’ ஊசி மருந்து எடுத்துக்கொள்ளவும், (Prostate சுரப்பி பிரச்சினையை தீர்க்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவும் ஆலோசனை கூறினார். ஓய்வு பெறும் வயது. அறுவைச் சிகிச்சையை விரும்பவில்லை. என் நண்பர் ஒருவர் ‘மாற்றுமருத்துவங்களில்’ இப்பிரச்சினைகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். எனக்குத் தங்களின் ஆலோசனைகள் என்ன?
 - எ. தேவராஜன், சேலம் - 636 001.
தங்களின் பரிசோதனை அறிக்கைகளைப் பரிசீலித்தோம். சர்க்கரைநோயை - ரத்த சர்க்கரை அளவை முழுக்கட்டுப்பாட்டில் வைக்கவில்லை எனில் புதியபுதிய உடல்நலப் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். நீரிழிவை முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அற்புதமான ஹோமியோ, ஆயூர்வேதா, சித்தா, மூலிகை மருந்துகள் உள்ளன. உணவில் கட்டுப்பாட்டுடனும், உடற்பயிற்சி (அ) யோகா (அ) நடை பயிற்சி போன்ற தினசரி செயல்பாட்டுடனும் மாற்றுமருத்துவ சிகிச்சையையும் இணைத்துக் கொண்டால் உடல்நலம், மேம்படும் - ஆபத்துக்கள் விலகும். சர்க்கரை நோயினால் ஏற்படும் அதிக சிறுநீர் போக்கைக் கட்டுப்படுத்துவதில் ACID PHOS, URAN-NIT, NAT-MUR, MEDOR போன்ற முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகள் நிச்சயமாக பலனளிக்கும்.
பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை 2 அல்லது 3 மாத காலத்தில், ஆபரேசன் இல்லாமல் முழுமையாகக் குணப்படுத்த ஹோமியோபதியில் சிறந்த மருந்துகள் உள்ளன. ‘முதுமையை நோய்களின் கூடாரமாக’ மாற்றும் ஆங்கில சிகிச்சைகளை முடிந்தளவு குறைத்து. . . நிறுத்துங்கள்! அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரை அணுகி சிகிச்சை பெறுங்கள். முதுமையிலும் இனிமை காணுங்கள்.
குறட்டைக்கு குட்பை
 சமீபகாலமாக தூங்கிய மறுநிமிடமே குறட்டை வந்துவிடுவதை நானே உணரமுடிகிறது. வீட்டில் மற்றவர்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது. சிலநாளில் யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், தூக்கத்திலேயே மூச்சுத் திணறுவது போலவும் சிரமம் ஏற்படுகிறது. குறட்டையிலிருந்து விடுபட மருத்துவரை அணுகினேன். அவர் ஒரு நிபுணரைப் பரிந்துரை செய்தார். நிபுணரிடம் ஆலோசித்தேன். அதற்கு சிகிச்சை ஏதுமில்லை என்றதோடு மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏதோ ஓர் ஆப்ரேசன் செய்யவேண்டும் என்று கூறினார். இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. மாற்றுமருத்துவத்தில் குறட்டையை குணப்படுத்த இயலுமா?
 - M. கேசவப்பெருமாள், சிவகாசி.
1960ஆம் ஆண்டு ‘இக்கிமேட்சு’ (Lkematsu) என்ற ஜப்பானிய மருத்துவர்தான் முதன்முதலில் குறட்டைக்கான காரணத்தைக் கண்டறிந்தவர். அதுவரை குறட்டைவிட்டுத் தூங்கினால் நிம்மதியான தூக்கம் என்றுதான் கருதப்பட்டது. மூக்கிற்கும் தொண்டைக்கும் பின்புறமுள்ள மூச்சுக்குழல் உள்விட்டத்தில் சுருங்குவதும் இதனால் சுவாசக்காற்று அதிக அழுத்தத்துடனும், மிக வேகமாகவும் செல்வதும் நிகழ்கிறது. அதனால் தான் கொர் . . . கொர் . . . சப்தங்கள். புல்லாங்குழலில் துளைகளைச் சிறிதளவு அடைக்கும்போது இசை கிளம்புவது போல மூச்சுக் குழலின் தடையால் குறட்டை சப்தம் கிளம்புகிறது.
குடிப்பழக்கம், புகைப் பழக்கம், உடல் பருமன் உள்ளவர்களுக்கு குறட்டைத் தொந்தரவு அதிகளவு இருக்கும். சிலருக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதாலும், தொண்டை சதை வீக்கத்தாலும், அடினாய்டு எனப்படும் நோயாலும். . . சுவாசம் செல்லும் குழலில் எவ்வித அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை வந்துவிடும்.
தங்களின் குறட்டையால் வேறு உடல் சிரமங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். குறட்டையுடன் தூங்கும்போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர்ரத்த அழுத்தம் அதிகமாகும். இதயத் துடிப்பு வித்தியாசப்படும். இதயத்திலிருந்து மூளைக்குச் செல் லும் ரத்த அளவிலும் பிராணவாயு குறைந்து, மூளையின் பணி யிலும் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக மறதி ஏற்படும். பகலில் அசதியும், மனச் சோர்வும் ஏற்படும். சிலருக்கு ஆண்மைக் குறைவும் ஏற்படும். இத்தகைய இரவு நேர உபாதை களால் ஏற்படும் மூச்சுத் தடை ‘SLEEP APNEA SYNDROME’ (தூக்க மூச்சடைப்பு) என்று அழைக்கப்படுகிறது.
குறட்டை மற்றும் தூக்க மூச்சடைப்பு பிரச்சினைகளுக்கு முழுநிவாரணமளிக்கக் கூடியது ஹோமியோபதி மருத்துவமே.
• எனக்கு வயது 25. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இன்னும் திருமணமாகவில்லை. என் உடல் வளர்ச்சிக்கேற்ப மார்பகங்கள் வளர்ச்சியின்மை என்பதால் என் எதிர்காலம் - திருமண வாழ்க்கை போன்றவற்றை எண்ணி வேதனைப்படுகிறேன். “உடல் மெலிந்த பெண்களுக்கு பெருத்த மார்பகங்களும், பருமனான பெண்களுக்கு மெலிந்த மார்பகங்களும் இருப்பதை நீ பார்த்த தில்லையா? இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்?” என்று தோழிகள் கூறுகிறார்கள். ஓர் அக்குப் பங்சர் மருத்துவரிடம் (தொடுசிகிச்சை) ஆறுமாத காலம் சிகிச்சை பெற்றேன். எந்தவித சிறு முன்னேற்றமும் இல்லை. ஹோமியோபதியில் இதற்கு மருந்துகள் இருப்பதாக ஒரு தோழி மூலம் கேள்விப்பட்டேன் - உண்மையா? திருமணத்திற்கு முன் என் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா.
 - V. பரிமளம், சென்னை -18.
உடல் பாகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் இத்தகைய குறைபாடுகளுக்கு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் கோளாறுகள்தான். அடிப்படைக் காரணம். மார்பகத்தை பெரிதாக்குவதற்கு ஆங்கில மருத்துவ அணுகுமுறைப்படி அறுவைச் சிகிச்சையோ, ஹார்மோன் சிகிச்சையோ தேவையில்லை. இதனால் புதிய பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள்.
இன்றைய உலகம் பெண்களையும், பெண்களின் மார்பகங்களையும் விளம்பரப் பொருட்களாக்கி விட்டன. விளம்பரங்களில் காணப்படும் கவர்ச்சியும், எடுப்பான பெரிய மார்பகங்களும் இல்லையே என தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டிய அவசியமில்ல. சிறிய மார்பகங்களாக இருப்பினும் உணர்ச்சிக் குறைபாடோ, பால் சுரப்பதில் குறைபாடோ இருக்காது. எனினும் மிகவும் மெலிந்த நிலையில் உள்ள மார்பகங்களை வயது மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்ப வளர்ச்சி பெறச் செய்ய ஹோமியோபதியில் Sabal Ser, lodium, Conium, Lyco, Muxmos, Kali iod போன்ற சூப்பர் மருந்துகள் உள்ளன. “வெளிப்பூச்சு மருந்துகளால் ஒரே மாதத்தில் மார்பகம் பெரிதாகும்” எனும் விளம்பரங்களால் பலரும் ஏமாந்து போகின்றனர்.
ஹோமியோபதி மருத்துவரிடம் முறையான சிகிச்சையை குறிப்பிட்ட காலம் வரை பெற்றால் . . . பெரிய மார்பகத்தை சிறிதாக்க, சிறிய மார்பகத்தை உடம்பிற்கேற்ப சதைப் பிடிப்புடன் வளரச் செய்ய, மார்பகக் கட்டிகளை கரைக்க, மாதவிடாய் கால மார்பக வீக்கம் வலிகளைப் போக்க இயலும். முழுமையான நன்மை பெற நேரடி சிகிச்சை தேவை.
• சில சித்த வைத்தியர்கள் பல பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும் “சகலவிதமான செக்ஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு” என்று தொடர்ந்து விளம்பரம் செய்கின்றனரே . . . இவர்களுக்கு வேறு எந்த வியாதிகளையும் குணப்படுத்த தெரியாதா? அல்லது சித்தாவின் எல்லை சுருங்கி விட்டதா?
       - த. ரமேஷ், திருச்சி.
சித்தர்கள் நமக்கு வழங்கியது மருத்துவ வடிவிலான வாழ்கலை விஞ்ஞானம். மனிதன் சந்திக்கும் எண்ணற்ற நோய்களைத் தீர்க்க ஏராளமான அரிய மருந்துகளை உலகுக்கு அடையாளம் காட்டியவர்கள் சித்தர்கள். சித்தர்கள் மனித ஆரோக்கியத்திற்காக, சமுதாய ஆரோக் கியத்திற்காக, நோய்கள் குறித்து மக்கள் விழிப்படைவதற்காக, மருத்து வர்களாக மட்டுமின்றி சீர்திருத்தவாதிகளாக, வாழ்வியல் வழிகாட்டி களாக, மூத்தனங்களுக்கு எதிரான கலகக்காரர்களாக வாழ்ந்தவர்கள். நீங்கள் குறிப்பிடும் சித்த மருத்துவர்கள் சமூகத்திற்கு பயனற்ற பொய்யர்கள். சமூகத்தை ஏமாற்றி, மிரட்டி, கல்லாப் பெட்டிகளை நிரப்புபவர்கள். மாற்றுமருத்துவத் துறையின் களங்கங்கள்.
பாத வெடிப்புகள் பறந்து போகும்
• பாதங்களில் பாளம்பாளமாக வெடிப்புகள் உள்ளன. செருப்பில்லாமல் ஒரு அடிகூட நடக்க முடியவில்லை. வலி எடுக்கிறது. ஒருசில வெடிப்புகள் சற்று ஆழமாக உள்ளது. சிலசமயம் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் அதிகப் பிரச்சினை தெரிகிறது. வலி தாங்காமல் ஆங்கில மருந்துக் கடையில் ஏதேனும் வெளிப்பூச்சு மருந்து வாங்கிப் பயன்படுத்தினால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். வேறு ஏதேனும் சிறந்த சிகிச்சை இருக்கிறதா?
 - மா. ஆதிலெட்சுமி, வாடிப்பட்டி.
இயந்திரங்களில் பயன்படுத்தும் கிரீசை வெடிப்புகளில் தடவி பித்த வெடிப்பை சரிசெய்கிற வர்கள் உண்டு. ஆளமரத்துப் பாலும், அத்திமரப்பாலும் சமஅளவில் கலந்து பித்த வெடிப்புகளில் பூசிவந்தால் நலம் கிடைக்கும். சிலர் மருதாணி இலையை அரைத்துப் பூசினால் குணம்பெற்றுள்ளனர். கடுக்காய், மஞ்சள் இரண்டையும் அரைத்துத் தடவலாம். அலோபதி வெளிப்பூச்சு மருந்தினைவிட இவை மேலானவை - கூடுதல் பலன் தருபவை - பாதுகாப்பானவை.
பித்தவெடிப்புகளின் தன்மைக்கேற்ப ஹோமியோபதி யில் Calcarea Carb, Hepar Sulp, Petroleum, Silica, Sarasaparilla, Sulphur, Nitric Acid, Graphites போன்ற பல மருந்துகள் பயன்படுகின்றன. மழைக்கால பித்த வெடிப் புக்கு Petroleum 30C எனும் ஹோமியோ மாத்திரை தினசரி இரண்டு வேளை வீதம் 1 வார காலம் மட்டும் உணவுக்கு அரைமணி நேரம் முன் /பின் சுவைத்துச் சாப்பிடலாம்.
ரத்தக் கசிவுள்ள வெடிப்புக்கு Nitric Acid ஏற்றது. ஹோமி யோபதியிலுள்ள Petroleum Ointment வெளிப்பூச்சு மருந்து வேறு எந்த வெளிப்பூச்சு மருந்தையும் விட சிறந்த நிவாரணம் தரும். அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
மூளைக்கட்டிக்கும் வலிப்புக்கும் ஒருங்கிணைந்த மாற்றுமருத்துவ சிகிச்சை
• எனது உறவினர் இரவுக் காவலர் பணியில் இருப்பவர். வயது 42. ஒரு வருட காலமாக வாரத்திற்கு 1 தடவையாவது வலிப்பு வந்துவிடுகிறது. கடந்த மாதம் அடிக்கடி வலிப்பு ஏற்படவே. . . ஆங்கில மருத்துவ மூளை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்றோம். MRI scan ஆய்வு செய்தார். வேறு சில பரிசோதனைகளும் செய்த பின் மூளையில் ‘Giloma’ இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சை அவசியம் என்றும் வலியுறுத்தினார். இவ்வளவு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தும் குடிப்பழக்கத்தை இவர் இன்னும் நிறுத்தவில்லை. இவரது மனைவியும், மூன்று பிள்ளைகளும் செய்வதறியாமல் பதறிப் போயுள்ளனர். உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். ‘‘Giloma’’ என்பது ஆபத்தானதா? இதுவரை மாற்றுமருத்துவ சிகிச்சைகள் மூலம் ஆபரேசனின்றி குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளதா?
 - ஆ. கார்த்தீஸ்வரன், திருநள்ளாறு.
உள்ளது. நிச்சயமாக உள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தில் (முற்றிய நிலையில் அல்லாத, புற்றுக் கட்டிகள் உள்ளிட்ட) பெரும்பாலான கட்டிகளைக் கரைத்து குணமாக்க இயலும். இது அன்றாடம் உலகம் முழுதும் நிரூபணமாகிவரும் உண்மை!
தங்களது உறவினருக்கு ஏற்பட்டுள்ள ‘Giloma’ என்பது புற்றுநோய் கட்டி அல்ல - பயம் வேண்டாம். ‘Giloma’ மற்றும் வலிப்பு இரண்டையும் குணப்படுத்த ‘PLUMBUM’ என்ற ஒரே ஒரு ஹோமியோபதி மருந்தே போதும். அவருக்கு மதுப்பழக்கமும் உள்ளதாகக் கூறுகிறீர்கள். அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தித்து, ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுங்கள். இந்த நோயாளிக்கு ஹோமியோபதி சிகிச்சை முதன்மையானது. இச் சிகிச்சை யில் ஹோமியோபதியுடன், பாச் மலர் மருந்துகள், சில அரிய மூலிகை மருந்துகள், பயோ மருந்துகள், அக்குப்பங்சர் ஆகிய சிகிச்சைகளை இணைத்துக் கொள்ளும்போது. . . துரித நிவாரணமும் குறுகிய காலத்தில் முழுகுணமும் பெறலாம். தங்கள் உறவினர் குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்து மகிழ்ச்சியை மறுமலர்ச்சியை ஏற்படுத்த மாற்றுமருத்துவங்களால் முடியும். கவலையை விடுங்கள்!

2 comments:

  1. The Casino of Vegas: Vegas With a Casino in the USA
    It's 오산 출장안마 a good 속초 출장샵 place to be if 익산 출장마사지 you're not in Vegas, but Las Vegas' casino has something to offer. The hotel's 대전광역 출장안마 890 square-foot casino offers 150 gaming 밀양 출장마사지

    ReplyDelete