மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம்-GANGLION
மணிக்கட்டின்
மேற்பகுதியில் (Dorsal surface) காணப்படும் முண்டு போன்ற வீக்கம்
நரம்பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு
வீக்கம் எனப்படுகிறது. (போயரிக் இதனை An encysted tumour on a tendon எனக் கூறுகிறார்) இத்தகைய முண்டு வீக்கம் மணிக்கட்டின் மேல்புறத்திலோ
(on top of wrist) , கீழ்ப்புறத்திலோ , விரல்கள்
முடி வடையும் மூட்டுகளிலோ அரிதாக பாதங்களிலோ உருவாகக்கூடும். இது நோயின் விளைவாக
தோன்றிய மெல்லிய சுவருள்ள திசுப் பை (cyst) இதனுள்ளே
திரவச்சுரப்பு நிரம்பியிருக்கும். இது உருவாவதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை
என்று அலோபதி மருத்துவம் குறிப்பிடுகிறது.
இந்த மணிக்கட்டு
வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் வெளிப்படையாக எல்லோரும் பார்க்ககூடிய வகையிலும்
விகாரமாகவும் தெரியும்; தோல் பரப்பின் அடியில் சிறிய வடிவத்தில்
அமைந்திருந்தால் பிறர் பார்வைக்குட்படாத போதிலும் வலியை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்.
சிலருக்கு இவ்வலி மணிக்கட்டுப் பகுதியில் (Localised) மட்டும்
நிற்கும் சிலருக்கு இவ்வலி கைவிரல்களிலோ, கையிலோ ஊடுருவிப்
பரவி வேதனை தரும்.
ஆங்கில
மருத்துவத்தில் இவ்வீக்கத்திலுள்ள திரவச் சுரப்பை நீக்க, வீக்கத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை (Gangilonectomy) வரை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இச்சிகிச்சைக்குப் பிறகும்
இவ்வீக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை
தவிர்க்கப்படுகிறது. சில பிரத்யேக மருந்துகளும், குணம்
குறிகளுக்கேற்ற மருந்துகளும் பயன்படுத்தி நிலையான, நீடித்த
பலனைப் பெற முடிகிறது. பக்க விளைவு இல்லாமல், கத்தியோ ஊசியோ
காயப் படுத்தாமல், எதிர் உயிரி மருந்துகள் (Anitbiotics)
இல்லாமல், உடம்பில் தழும்பு ஏற்படுத்தாமல்
அகவயமான காரணங்களை அகற்றி வீக்கத்தை வற்றச் செய்து . நிரந்தர குணம் பெற முடிகிறது.
மணிக்கட்டு நரம்பணு முடிச்சு
வீக்கத்திற்கும் பயன்படும் முக்கிய முன்று மருந்துகள் 1.ரூடா (Ruta)
2.பென் ஜாயிக் ஆசிட் (Ben-zonic Acid) 3.சிலிகா
(Sililca). வீக்கத்துடன் வலியும்
இணைந்து துயரப்படுத்தும் போது ரூடா உயர்வீரியம் அற்புதமான பலன் தருகிறது.
இருப்பினும் ரூடா 30 மற்றும் 200C வீரியத்திலேயே
விகிச்சையைத் துவங் கலாம். ஒரிரு வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
இல்லாவிட்டால் உயர்வீரியத்திற்கு சென்று பயன் பெறலாம். இவ்வீக்கத்தில் யூரியா
அமிலத்தன்மை (Uricacid Diathesis) காணப் பட்டால் பென் ஜாயிக்
ஆசிட் மருந்தும் கால்சியப் படிவங்கள் காணப்பட்டால் கல்கேரியா கார்ப்
மருந்தும் தேவைப்படுகின்றன. மருத்துவர் கிளார்க் சல்பர் CM
வீரியத்தில் காலை நேரத்தில் ஒரு வேளை
மருந்து மூலம்.. மூன்று வார காலத்தில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கத்தைக்
குணப்படுத்தலாம் என அனுபவச் சான்றுடன் சுட்டிக்காட்டுகிறார்.
Ganglion வீக்கத்தைக் குணப்படுத்த ரூடா. பென் ஜாயிக் ஆசிட், சலிகா,
சல்பர், கல்கேரியா கார்ப் போன்ற மருந்துகள்
மட்டுமின்றி கல்கேரியா புளோர், தூஜா, பாஸ்பரஸ், ஆர்னிகா , ஸடிக்டா,
நேட்ரம் மூர் போன்ற மருந்துகளும்
உதவுகின்றன.
No comments:
Post a Comment