Sunday, July 6, 2014

ஹோமியோபதி & மாற்றுமருத்துவம் கேள்வி பதில்-2



ஹோமியோபதி & மாற்றுமருத்துவம் கேள்வி பதில்

·         எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவனுக்கு வயது 7; இளையவளுக்கு வயது 4.இரண்டு பேருக்கும் சளிபிடிக்காத நாளே இல்லை. இரண்டு பேருக்கும் சேர்ந்தே சளி பிடிக்கிறது. அல்லது இரண்டு பேருக்கும் மாறி மாறி சளிப்பிடிக்கிறது. இவர்களை வயிற்றில் சுமந்த காலம் முதல் இன்று வரை ஆங்கில மருத்துவம் தான் பார்த்து வருகிறேன். நோய் நீங்கிய பாடில்லை. இளையவளுக்கு இப்போது ரட்ங்ங்க்ஷ்ண்ய்ஞ் வரத் துவங்கிவிட்டது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் செலவழித்தும் நலம் கிடைக்க வில்லை. ஹோமியோபதி சிகிச்சை மூலம் என் குழந்தைகளை தீராத சளித்தொந்தரவிலிருந்து காப்பாற்ற முடியுமா? -                                                 T-சாவித்திரி, பள்ளிப்பாளையம். 

·         மிகுந்த மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளான உங்களைப் போன்ற பெற்றோர் விழித்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகளைக்கூட நோயாளிகளைப் போல நடத்தும் மருத்துவமே அலோபதி. மரத்திலே காய் கனியும் வரை காத்திராமல் குறுக்குவழியில் பறித்து செயற்கை / ரசாயன முறையில் பழுக்க வைத்து விற்கப்படும் பழங்களைப் போல 100க்கு 90 முதல் 95 விழுக்காடு சிசேரியன் மூலம் குழந்தையை பெறச் செய்கிறது அலோபதி மருத்துவம். பிறந்த நாள் முதல் காலவாரியாக பல தடுப்புந்துகளை பிஞ்சு உடலுக்குள்   செலுத்தி இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை நிர்மூலம் செய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஓர் குட்டிப் பிரபஞ்சம். இயற்கையின் ஆற்றல்களும் தன்மைகளும் ஒவ்வொரு குழந்தைக் குள்ளும் உண்டு. 
ஆங்கில ரசாயன மருந்துகள் மூலம் நம் குழந்தைகளின் உடலில் அமைந்துள்ள இயற்கையான (நோய் எதிர்ப்பு)ஆற்றல் தகர்க்கப்பட்டு நோய்கள் முற்றுகையிடுகின்றன. ஆங்கில மருத்துவத்திலுள்ள குழந்தை நல நிபுணர்களிடம் பெற்றோரும் பிள்ளைகளும் கூட்டம் கூட்ட   மாக காத்திருந்து பெறும் சிகிச்சைகளின் ஒட்டுமொத்த பலன் தான் என்ன? உங்கள் பிள்ளைகளே உதாரணம்!
ஹோமியோபதி மருத்துவம் உங்கள் குழந்தைகளுக்கு நோயிலிருந்து முழு விடுதலை அளிக்கும். சமீப ஆண்டுகளாக மத்தியரசு மக்கள் நல்வாழ்வுத்துறை தாய் சேய் நலத்தில் ஹோமியோபதியின் சிறப்பிடம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வருகிறது. ஆயினும் இது இன்னும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். விரிவான விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டால் உங்களைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களும் குழந்தைகளும் பயனடைவார்கள். அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தியுங்கள்.

·         சமீபத்தில் ‘ஹீலர்’ ஒருவரின் சொற்பொழிவைக் கேட்டேன். ரத்த அழுத்தம் உள்ளவர் கள் ‘உப்பு’ குறைத்துக் கொள்ளவோ, நிறுத்தவோ அவசியமில்லை. வேண்டியளவு உப்பு சாப்பிடலாம் என்று கூறினார். “இதனால் தற்காலிகமாக ஆ.ட. கூடுவது போல் தெரியும். கவலைப்படாதீர்கள். அதனால் ஒன்றுமில்லை” என்று ஆணித்தரமாக கூறினார். நான் 10 ஆண்டுகளாக பிரஷர் மாத்திரை சாப்பிட்டு வரக்கூடியவன். ‘ஹீலர்’கூறியதைப் போல சாப்பிடும் முறைகளில் சில மாற்றங்களைச் செய்து,                சாதம், குழம்பு, காய்கறிகளில் உப்பு சேர்த்து சாப்பிடத் துவங்கினேன். தற்பொழுது பிரஷர் நன்கு ஏறிவிட்டது. தலைபாரம், உடற்சோர்வு, பலவீனம், கிறுகிறுப்பு என       உடலில் பலவிதத் தொந்தரவுகள் வரத் துவங்கிவிட்டன. நான் செய்தது... செய்வது... சரியா தவறா? இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில்தான் அந்த ஹீலர் ஆலோசனைகள் வழங்குவது போல நினைத்தேன். தாங்கள் கருத்து என்ன?         -K.ராமன், திண்டுக்கல்.

·         உப்பு, சீனி, பால் மூன்றையும் ‘மூன்று வெண்ணிற நஞ்சுகள்’ என்று இயற்கை மருத்துவம் வருணித்து எச்சரிப்பது உலகறிந்தது. ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி பலரது வாழ்க்கைக்குப் பொருந்தாது. உலகின் பலநாடுகளில் மக்கள் மத்தியில் ‘உப்பு’ பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது.
இரத்த அழுத்தம் மட்டுமின்றி, நீரிழிவு நோய், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பல முக்கிய நோய்கள் அதிகரித்து வருவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக ‘உப்பு’ அமைந்துள்ளது. இந்த ‘உப்பு’ தொடர்பான சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம். 
உலகிலேயே முதன் முதலில் கடல்நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்ùடுத்தவர்கள் எகிப்தியர்களே. அவர்களது மொழியில் ‘நேட்ரான்’ (NATRON) எனப்பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு (‘மம்மி’க்களை பாடம் செய்வதற்கு) உப்பைப் பயன்படுத்தினர். ஆதிகாலத்தில் போரில், வேட்டையில் ஈடுபட்ட மனிதர்களுக்கு ‘சோடியம் உப்பு’ கண்டுபிடித்து    புது மாதிரியான அனுபவத்தை தந்தது. 
அன்றைய உடலுழைப்பு சார்ந்த வாழ்க்கை யில் மனித உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறியது. ரத்தத்திலுள்ள சோடியம் உப் பின் சமநிலை அவ்வப்போது குறைந்தது. போர்க் காலத்தில் வீரர்கள் உடல் சோர்ந்து விழும்போது அவர்களின் கையில் உப்புக்கட்டிகள் கொடுக்கப் பட்டன. அதேபோல நாக்கில் சிறிது உப்பு பட்டவுடன் உற்சாகம் ஏற்பட்டுவிடும்.       ஆகவே அப்போது தங்கத்தைவிட உப்பு உயர்வானதாக மதிக்கப்பட்டது. உப்பை (SALT) உழைப்பின் ஊதியமாகப் பெற்ற காலம் உண்டு. நஹப்ற் லிருந்து பிறந்த சொல்தான் SALARY ! 
இன்று ஏன் எல்லா மருத்துவ முறைகளும் உப்புக்கு எதிராகக் கொடிபிடிக்கின்றன? உடலுழைப்பு குறைந்து வரும் காலம் இது. ஒரு பகுதியினர் எப்போதும் உட்கார்ந்த நிலையில், குளிரூட்டப்பட்ட அறைகளில் வேலை பார்க்கிறார்கள்.      பதப்படுத்துவதற்கும், சில உணவுகளில் சற்று சுவை கூட்டவும் பயன்படுத்தத் துவங்கிய உப்பை இன்று உணவுகளில் அதிகளவு சேர்க்கும் நிலை வந்துவிட்டது. ஒரு நபரின் ரத்தத்தில் மொத்தம் 200 கிராம் சோடியம் இருக்கவேண்டும். அதிகமானால் வியர்வை, சிறுநீர் மலம் மூலம் உப்பு வெளியேற்றப்படும். நமது சிறுநீரகங்கள் ஒரு லிட்டர் சிறுநீரில் 2 கிராம் உப்பை வெளியேற்றுகின்றன. (12 கிராம் உப்பை வெளியேற்ற வேண்டுமானால் ஆறு லிட்டர் சிறுநீர் கழிக்கவேண்டும்!)
உடல் குறைபாடு காரணமாக சிறுநீரகம் சோடியம் உப்பை வெளியேற்றுவதில் பலவீனம் ஏற்பட்டால் உடல் பருமன் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரக கோளாறு, இருதய அடைப்பு போன்ற அபாயங்களும் ஏற்படக்கூடும்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
மனித உடலுக்கு பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம்,   சோடியம் ஆகிய 4 உப்புகள் அத்தியாவசியமானவை. இவற்றில் சோடியம் உப்பை மட்டுமே கடல்நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சோடியம் உப்பு ஏற்படுத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளை முன்னிட்டு கடலுக்குள் இருக்கும் பவளப் பாறைகளிலிருந்து கிடைக்கும் மெக்னீஷியம், புரோட் டீன்கள் அடங்கிய ‘கோரல்உப்பு’ (COREL SALT), ஜப்பான், அமெரிக்காவில் பிரபலமடைந்து    வருகிறது. மலைப் பிரதேசங்களில் பாறை வடிவில் கிடைக்கும் சோடியம் மிகக் மிகக் குறைவாகவும், சல்பர், மெக்னீஷியம், கால்சியம் அதிகமாகவும் உள்ள இந்து உப்பை இந்தியாவில் ஒரு பகுதியினர் பயன்படுத்துகின்றனர்.
கடுமையான உடலுழைப்பு இல்லாத நிலையில் தினசரி வெறும் 2 கிராம் உப்பே ஒருவருக்கு போதுமானது. ஆனால் நிலைமை என்ன? காலை முதல் இரவு வரை ஒவ்வொரு நபரும் தேவையைவிட மிக அதிகமாக உப்பை உட்கொள்ள நேரிடுகிறது. உடலில் உப்பு மூலம் சோடியம் அளவு அதிகரிப்பதால் உயிர் அணுக்களை பாதிக்கிறது. ஆண்மை குறைகிறது, கருத்தரிக்கும் வாய்ப்புகளும் குறைகின்றன. எனவே தான், ரத்த அழுத்தம் முதல் மலட்டுத்தன்மை வரை ஏற்படுத்தும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுமாறு மருத்துவங்கள் மன்றாடுகின்றன.
நண்பரே! உங்களைப் போன்றவர்களை உப்பு சாப்பிடுமாறு ஊக்குவிப்பவர் ஹீலரா கில்லரா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உப்பைக் குறையுங்கள். பாக்கெட் உப்பு வேண்டாம். அதில் 99% சோடியம் உள்ளது. கல் உப்பில் 40% தான் சோடியம் உள்ளது. கல் உப்பை வாங்குங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குறைத்து உபயோகியுங்கள். ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு அலோபதி சிகிச்சை வேண்டாம். ஹோமியோபதி சிகிச்சையில் நீங்கள் (வாழ்   நாள் முழுதும் மாத்திரையடிமையாவதை மாற்றி) விரைவில் நலம் பெறமுடியும்.

·         என் மனைவிக்கு கடந்த 3 வருடமாக ஒவ்வொரு மாதமும் பத்துநாட்களுக்கு மேல் ரத்தப் போக்கு ஏற்படுகிறது. இடுப்புவலி, வயிற்றுவலி, கால் கை உளைச்சல், தலை சுற்றல், வாந்தி, சோர்வு ஏற்பட்டு, மிகவும் பலவீனமாக இருக்கிறாள். வயது 29. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது பிரசவத்திற்குப் பின்னர்தான் இந்த மாதிரி அளவுக்கு அதிகமாக மாதப்போக்கு ஏற்படுகிறது. பலவிதமான மருந்து மாத்திரை சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. “கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள். வேறு தீர்வு இல்லை!” என்கிறார்கள். மருந்து மாத்திரைகளில்லாமல் இயற்கை மருத்துவம் மூலம் என் மனைவியின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமா?-                                                         T. வரதன், கரூர்.

·         உங்கள் மனைவி போல சில பெண்கள் பெரும்போக்கு காரணமாக அவதிப்பட நேரிடுகிறது. ரத்தம் அதிகளவு வெளியேறுவதால் ரத்த சோகை (ANAEMIA) தாக்குகிறது. மேலும் தலைசுற்றல், மயக்கம், குமட்டல், உடல் அசதி, பலவீனம், உடல் முழுதும் வலி, தூக்கமின்மை, சுரம், இடுப்பு வலி, கால் நரம்புகள் இழுப்பு (CRAMPS), தசைவலி, பதட்டம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அதிகப்போக்கு ஏற்பட அடிப்படையான காரணங்கள் உள்ளன. கர்ப்பப்பை பலவீனம், இயக் குநீர் (HARMONES) சுரப்பிகளில் ஏற்றத் தாழ்வு, மன அழுத்தம், கவலை, கோபம், எரிச்சல், உடற்பயிற்சி யின்மை, சத்துள்ள உணவுகள் சாப்பிடாமை போன்ற காரணங்கள் முக்கியமானவை.
இப்படிப்பட்ட பெண்கள் முதலில் போதுமான ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். ரத்தப்போக்கு நாட்களில் வேகமாக நடப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது கூடாது; அதிக எடை தூக்கக் கூடாது. ஆடைகளை இறுக்கமாக அணியக்கூடாது. உள்ளாடை அடிக்கடி மாற்றுதல் நல்லது. தினம் மூச்சுப் பயிற்சி உற்சாகம் தரும். காலை முதல் இரவு வரை ஐந்தாறு தடவைகளுக்கு மேல் பழச்சாறுகளை தேன் கலந்த அருந்தவேண்டும்.(முக்கியமாக அத்திப்பழம், பேரீச்சை, மாதுளம்பழம், ஆப்பிள், சப்போட்டா, நாவற்பழம், கருப்பு திராட்சை) வெண்பூசணி சாறு, பீட்ரூட் சாறு, காரட் சாறு, கொத்தமல்லி இலைச்சாறு, கருவேப்பிலைச் சாறு, முள்ளங்கி இலைச்சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றில் தேன் கலந்து தினமும் ஒரு சாறு பருகி வரலாம். (இவற்றில் சீனி சேர்க்காதீர்கள்; தயவு செய்து ஐஸ் சேர்க்காதீர்கள், இனிப்பு தேவை எனில் தேன் மட்டும் சேர்க்கலாம்)
வாழைப்பூ கசாயம், மருதம்பட்டை கசாயம், அசோக மரப்பட்டை கசாயம் போன்றவை அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் அற்புத சக்திமிக்கவை. (பொதுவாக துவர்ப்புச் சுவைமிக்க உணவுகள் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும்)
இத்தகைய இயற்கை முறைச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது ... அருகிலுள்ள ஹோமியோ,                சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ நிபுணர் யாரையேனும் நேரில் சந்தித்து, ஆலோசனை பெற்று தேவையெனில் (பக்க விளைவு இல்லாத) மருந்துகளும் சேர்த்தே சாப்பிடச் செய்யலாம்.உங்கள் மனைவியின் மாதப்போக்கு சில மாதங்களில் சீராகும்!

·         நான் எடை குறைவாக, ஒல்லியாக இருக்கிறேன். ஓரளவாவது சதை போட வேண்டும் என்று விரும்புகிறேன். என் வயது 23. என் நண்பர்கள் எனக்குக் கூறும் ஆலோசனைகள்1) வாராவாரம் தவறாமல் நான்கைந்து முறை பீர் சாப்பிட வேண்டும் (பீர் உடலுக்கு நல்லது, எடை கூடும், உடல் குளிர்ச்சியடையும் என்பது அவர்களின் கருத்து) 2) பச்சை முட்டைகளாகத் தினமும் சாப்பிட வேண்டும். 3) சில சத்துமாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த ஆலோசனைகள் என் எடையை அதிகரிக்குமா?                              - K.பத்மராஜன், தஞ்சாவூர்.

 நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்ன பணியாற்றுகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் இக்கேள்வியில் உங்கள் நண்பர்களின் அறியாமையும் உங்களின் அப்பாவித்தனமும் பளிச்செனத் தெரிகிறது. பீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது; எடை கூடும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். பீர் குடித்தால் தொந்தி விழும்.  
முட்டையைப் பச்சையாகக் குடிப்பதும் நல்லதல்ல. அஜீரணக் கோளாறுகளும் வேறு சில வியாதிகளும் உண்டாகும். உடல் எடையை அதிகரிக்கும் நோக்கோடு எந்தவித மாத்திரை மருந்துகள் எந்த ஆங்கில மருத்துவ நிபுணர் ஆலோசனையின்பேரில் சாப்பிட்டாலும் வீதியில் போகிற சனியனை விலைகொடுத்து வாங்கிய கதைதான். வேண்டாம் விபரீத விளையாட்டு. 
உங்கள் தோற்றம் ஒல்லியாக இருப்பது ஒன்றும் தவறில்லை, ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம். உயரத்திற்கேற்ற எடை என்று உள்ளதா எனப் பாருங்கள். உதரணமாக உயரம் 168 செ.மீ என்றால் 168-100=68 என்று கணக்கிடுங்கள். இதைவிடக் குறைவாக இருந்தால் சற்றே அதிகரிக்க சரியான வழிமுறைகளைச் கண்டுப்பிடியுங்கள். 
தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். அத்துடன் சத்தான உணவுகள், புரதம், மாவு, இனிப்பு, கொழுப்புச் சத்துக்களும் அவசியம். மரபணுக் களும் நாளமில்லாச் சுரப்பிகளும் உடல் எடையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

·         எங்கள் பகுதியில் ஒரு ஹோமியோபதி மருத்துவர், தலைமுடி சம்பந்தமானபிரச்சினைக்காக சிகிச்சை பெறச் சென்றபோது ஷாம்பூ உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். ஷாம்பூகளில்லாமல் தலைமுடியைச் சுத்தமாகப் பராமரிக்க முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஷாம்பூ களால் எவ்வித நன்மையும் இல்லையா? -                                                                                   N .ஜெயஸ்ரீ, திருவாடானை.

·         ஷாம்பூ மட்டுமின்றி இன்றைய நவநாகரிக உலகில் குவிக்கப்பட்டுள்ள எண்ணற்ற அழகு சாதனப் பொருள்கள் எதிலும் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏதுமில்லை. விளம்பரங்களின் கவர்ச்சி வலையில் மக்கள் மீள முடியாமல் வீழ்ந்துவிடுகின்றனர். ஷாம்பூ உபயோகித்தால் சுத்தமாவது மட்டுமின்றி தலைமுடியை தரைவரை வளரச்செய்து தவழவிடலாம் என்று விளம்பரங்கள் புளுகித் தள்ளுகின்றன. ஒரு பானம் குடித்தால் உங்கள் பிள்ளைகள் உயரமாக வளரும் என்கிறார்கள். மற்றொரு பானம் குடித்தால் உங்கள் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அகிலத்தை ஆளுவார்கள் என்கிறார்கள். ஒரு கிரீம் பூசினால் ஒரு சில வாரங்களில் கருப்பு நிறம் சிவப்பாக மாறிவிடும் என்கிறார்கள். இவை போன்ற விளம்பரங்களின் பின்னால் உள்ள உண்மைக்குப் புறம்பான பித்தலாட்டங்களால் வெகுவாக பாதிக்கப்படுவது படித்த, நடுத்தர வர்க்கத்து மக்களே.
முடியின் தன்மை அவரவரது பாரம்பரியம், வயது, உடல் ஆரோக்கிய நிலை போன்றவற்றினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புகளால் உலர்ந்த கூந்தலில் ஈரப்பசையினை உண்டாக்கவோ, பட்டுப்போல் மென்மையாக மாற்றவோ இயலாது. சேதமடைந்த முடிகளைப் புதுப்பிக்க ஷாம்புகளால் முடியாது. ஏனென்றால் ஷாம்பூ என்பது தண்ணீர், டிடர்ஜெண்ட், எண்ணெய், வாசனைப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த கலவையாகும். ஷாம்புகளில் வரும் நுரைக்கும், முடி & தலைதோலின் சுத்தம் & சுகாதாரத்திற்கும்   எந்தச் சம்பந்தமுமில்லை.
தலைத்தோல் அரிப்பு, படை, பொடுகு உள்ளவர்கள் ஷாம்பூ பயன்படுத்திக் கொண்டே சிகிச்சையும் சேய்து வந்தால் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். ஒருக்காலும் நலம் கிட்டாது.சுத்தமான சீயக்காய் பொடி, கடலை மாவு, பாசிபயறுமாவு போன்றவை எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தாத இயற்கையான பொருட்கள். இவற்றை ஷாம்பூக்கு பதில் பயன்படுத்துங்கள்.

·         எனக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. வயது 33. கணவரின் வயது 37.          ஏழு வயதில் பையன் இருக்கிறான். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் இரண்டாம் தடவையாக கருவுற்றேன். கருத்தரித்தது தெரியாமலேயே சிறுநீர் தொற்று (Urinary infection) க்காக தொடர்ச்சியாக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டேன். பிறக்கப் போகும் குழந்தைக்கு அதனால் மூளைவளர்ச்சியின்மை உள்பட குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்று டாக்டர் எச்சரித்ததால் கருக்கலைப்பு செய்துவிட்டேன் இன்றுவரை அதன்பின் கர்ப்பம் ஏற்படவேயில்லை. டாக்டர் கருக்கலைப்பு செய்து கொண்டதால் தான் இந்த பாதிப்பா? இதற்குத் தீர்வு தான் என்ன? -                                                                          N. லட்சுமிசிவராஜ்,வத்தலகுண்டு. 

·         ஹிஸ்ட்ரோ சால்பிஞ்சோ கிராம் அல்லது லேப்ராஸ்கோபி சோதனை செய்து கருக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்று பாருங்கள் பொதுவாக எம்.டி,பி. எனப்படும் Medical Termination of `Pergnanacy செய்யும்போது Fallobian Tube அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு அப்படி ஏற்பட்டால் கருவுறுதல் சாத்தியமில்லை.
ஒருவேளை அடைப்பு ஏதுமில்லை என்று சோதனைமூலம் தெரியவந்தால் மிண்டும் கருவுறுவதில் பிரச்சினை எதுவு மிருக்காது என்றாலும் ஆங்கிலமருத்துவத்தில் DC செய்து கொள்ளுமாறு கூறுவார்கள். இதன்பின் குழந்தை பிறக்கக் கூடும் எனக் காத்திருப்பார்கள். ஆரம்பம் முதல் செய்த தவறுகள் போலவே இதுவும் அமையும்.
அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். மிச்சசொச்சமுள்ள கருவுறும் வாய்ப்பை அலோபதி சிகிச்சைகள் மூலம் இழந்து விடாமல் ஹோமியோபதி மூலம் உங்களிடம் இன்னொரு அழகிய பூ மலரட்டும்! நம்பிக்கையோடு ஹோமியோபதி சிகிச்சைக்குச் செல்லுங்கள்.

·         எங்குபார்த்தாலும் கற்றாழை ஜøஸ், கற்றாழை சோப், கற்றாழை களிம்பு, கற்றாழை பானங்கள் என்று விற்கப்படுகிறதே! கற்றாழையில் அப்படியென்ன விசேசம்? எங்கள் பகுதியில் இப்போது கூட கிராமப்புறங்களில் வீடுகளின் முன்புறம் திருஷ்டி பரிகாரமாக கற்றாழையைக் கட்டுகின்றனர். கற்றாழை திருஷ்டிப் பொருளா? மருந்துப் பொருளா? -                                                                                                                            J. கஜேந்திரன், பரமக்குடி. 

·         “நாள்பட்ட புண், வயிற்றுவலி, மூலம், மலச்சிக்கல், வயிறு நோய்கள், பூச்சிக்கடி, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்கு கற்றாழையைக் கொடுக்கலாம்” என்று அரிஸ்டாடில் கூறியிருப்பதிலிருந்து இது எவ்வளவு தொன்மையான, வலிமையான இயற்கை மருந்து எனப் புரிந்து கொள்ளலாம். 
உண்மையில் கற்றாழை எந்த வீட்டில் உள்ளதோ அங்கே நோய்கள் நெருங்காது. மரணம் தள்ளிப்போகும். எனவே வீட்டு முன்பு கற்றாழையைக் கட்டிவைக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட விஷயம் வேறு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. கற்றாழை எனப்படும் இந்த அன்னிய நாட்டுச் செடி நான்காம் நூற்றாண்டில்தான் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.
அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் கற்றாழை கொஞ்சம் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு போன்ற பலவித வயிற்று கோளாறு காரக்கு சிறந்த நிவாரணி இது.
கற்றாழையில் வைட்டமின், என்சைம்கள், மினரல் மற்றும் அமினோ ஆசிட் எல்லாம் உள்ளன. காயங்கள் . புண்கள் மீது கற்றாழை மருந்தைத் தடவினால் விரைவில் ஆறுகின்றன.
காயங்களால் ஏற்படூம் வலியை நீக்குகிற சக்தியும் கற்றாழைக்கு உள்ளது. காயங்களின் உள்ளே துழைந்திருக்கும் பாக்டீரியா, ஃபங்கஸ், வைரஸ் போன்ற கிருமிகளையும் கற்றாழை அழித்தொழிக்கும். 
மேலும் கற்றாழையில் உள்ள ஆண்ட்டிசெப்டிக் ஏஜெண்ட்டுகள் நம் தோலின் வறட்சியைப்     போக்கி ஈரத்தன்மை ஏற்படுகின்றன. அரிப்பை நீக்குகின்றன. தோலிலுள்ள நச்சுத் தன்மை
நீங்கி ரத்த ஒட்டம் அதிகரிக்கச் செய்கிறது. கற்றாழையின் பலன்கள் இன்னும் ஏராளம் உள்ளன! 

·         அக்குப்பிரசர் மூலம் மலச்சிக்கல் குணமாகுமா ? எங்கள் வீட்டில் பெரியவர்கள்,சிறியவர்கள் வித்தயாசமின்றி எல்லோருக்கும் மலச்சிக்கல் ஒருபெரிய பிரச்சினையாக உள்ளது. கைப்பக்குவமாக பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. அக்குப்பிரசர் செய்துபார்த்தால் பலன் கிடைக்குமா டாக்டர்?                                                                         - M. கார்குழலி,மன்னார்குடி. 

·         நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். போதியளவு நீர் அருந்தாமையால், உணவில் நார்ச்சத்து இல்லாமையால், துரித உணவுகளால், பேக்கரிப் பண்டங்களால், உடற் பயிற்சியின்மையால் மலச்சிக்கல் ஏற்படுவதால் இவற்றை சரிசெய்ய வேண்டும். 
ஆள்காட்டி விரலின் கடைசியில் LI-4 என்ற புள்ளியிலும், கீழுதட்டின் அடியில் முகவாயில் உள்ள புள்ளியிலும் தொப்புளுக்கு கீழே 2 விரல் அகலம் தள்ளி உள்ள புள்ளியிலும், தொப்புளுக்குப் பக்கவாட்டில் 3விரல் அகலம் தள்ளி உள்ள புள்ளிகளிலும் சிலநிமிடம் தினமும்       காலை, மாலை அழுத்தம் தரவேண்டும். மலச்சிக்கல் மட்டுமின்றி வேறுபல அஜீரணத் தொந்தரவுகளும் சேர்ந்து குணமாகும். புள்ளிகள் இடத்தைக் கண்டறிவதில், பிரசர் கொடுப்பதில் குழப்பம், தயக்கம் இருப்பின் அருகிலுள்ள தகுதியும் அனுபவமும் நிறைந்த அக்குப்பிரசர் தெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுங்கள். 

·         என் நண்பண் வயது 22. அவனுக்கு பெண்களைப் போல முகத்தில் மீசை வளராமல் வாளிப்பாக உள்ளது. இதனால் அவனுக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டு யாருடனும் கலகலப்பாகப் பேசிப் பழகுவதில்லை அவனது அக்காவிற்கு வயது 24. அவர்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல மீசை அரும்பியுள்ளது. அது அவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் சங்கோஜமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்டு சந்தோசமேயில்லாமல் இருக்கிறார்கள். இவர்களின் தாயார் சமீபத்தில் டைபாய்டு சுரத்தால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை பெற்றார். தற்போது சுரம் இல்லை. ஆனால் அவருக்கு எப்போதுமில்லாதளவுக்கு முடிகொட்டுவதால் அதிர்ச்சி யடைந்துள்ளார். அருகிலுள்ள பியூட்டி பார்லர்களை நம்பிப் பணம் செலவழித்தும் இவர்கள் அனைவருக்கும் வேதனைதான் மிச்சம் . இப்பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுமருத்துவ சிகிச்சை உள்ளதா?-            L. நாராயணன், வில்லாபுரம், மதுரை. 

·         நண்பர் நாராயணன் அவர்களே! உங்கள் நண்பர் மற்றும் அவரது அக்கா, அம்மா மூவரின் முடிப் பிரச்சினைகளும் விரைவில் முடிவு காணக் கூடிய பிரச்சினைகளே! அழகு நிலையங்களிலோ, அலோபதி சிகிச்சையிலோ இப்பிச்சினைகளுக்கு விடைகாண முடியாது. ஹோமியோபதி மருத்துவம் ஒன்றுதான் மூவரின் பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளிவைக்க உதவும். 
                 ஆணுக்கு அழகூட்டி, கம்பீரம் ஏற்படுத்தும் ஆண்மை அடையாளமாய் அமைவது மீசை. மீசை முளைப்பதற்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்தான் காரணம். இது சுரக்கா விட்டால் அல்லது குறைவாக சுரந்தால் மீசை முளைப்பதில் பிரச்சினை வரும். ஹோமியோபதியில் தைராய்டினம், நேட்ரம்முர், செபியா மற்றும் சில மருந்துகள் உறுதியாக மீசை அரும்பச் செய்யும். 
                 முகத்தில் மீசை வளர்ந்துள்ள பெண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் சற்று அதிகரித்ததன் விளைவு அது. தூஜா, ஒலியம் ஜெகோரியஸ் ஆகிய ஹோமியோ மருந்துகள் மீசை முடிகளை மறையச் செய்து பெண்ணின் இயற்கையான முக்அழகை மீட்டு வழங்கும். 
                 சிலருக்கு டைபாய்டு சுரத்திற்குப் பின் முடிகொட்டும். உங்கள் நண்பரின் அம்மாவிற்கு ஆசிட் புளோர் (Acid Flour)30 இ என்ற ஹோமியோ மருந்து நிவாரணமளிக்கும். முடிஉதிர்தல் முடிவுக்கு வரும். அருகிலுள்ள ஹோமியோ மருத்துவரை அணுகி மூவரும் அவரது ஆலோசனை பெற்று மருந்துகள் உண்பது விரைவான நலம் பெற உதவும். 

·         எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகிறது. முதல் 2 வருடம் உறவு இனிமையாக இருந்தது. ஓரு குழந்தைக்குத் தந்தை ஆனேன். மனைவி கருவுற்றபோதும், பிரசவித்த பிறகும் பலமாதம் தனித்திருந்தேன். பின்னர் தான் பிரச்சினை ஆரம்பித்தது. எழுச்சி முன்பு போல இல்லை; உறவின் நேரமும் சுருங்கி விட்டது. என் மனைவியைப் பொறுத்தவரை குழந்தை பெற்றபின் செக்ஸில் விருப்பமே இல்லாதவளாக மாறி விட்டாள்! என் வற்புறுத்தலுக்கு இணங்கினால் மதனநீர் சுரக்காமல் அவள் வலியை உணர்கிறாள். எங்களது தாம்பத்திய உறவு பழங்கதை போல ஆகிவிட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். மாற்று மருத்துவத்தில் எங்களின் பாலியல் நலப் பிரச்சினை களைத் தீர்க்க வழியைக் கூறுங்கள். - பால்கணேசன், காரைக்கால். 

·         பாலியல் நலச் சிக்கல்களைத் தீர்க்க வயாகரா போன்றவை ஆங்கிலமருத்துவம் விஞ்ஞானப் போர்வையில் சிபாரிசு செய்யும் வன்முறைத்தனமான மருந்துகளாகும். இப்பிரச்சினைகளைச் சிறப்பாக, இயற்கையாக, பக்கவிளைவு இன்றித் தீர்ப்பதற்கு ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்களே ஏற்றவை. 
       நீங்கள் இருவரும் சர்க்கரைநோய் உள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.மன அழுத்தம், பரபரப்பு குழப்பங்களுக்கு இடமில்லாத அமைதியான சூழல் உறவுக்கு உகர்ந்தது. ஆண்களின் எழுச்சிசக்தியை மேம்படுத்த Selenium, Conium, Ustilago, Agnus Castus, Damiana போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. ஹோமியோ மருத்துவர் மேற்பார்வையில் இம்மருந்துகளில் உங்களுக்குரியதை தேர்வு செய்து சிகிச்சை பெறுங்கள்.
       பெண்களின் ஒருபகுதியினருக்கு மாதவிடாய் முற்றுப் பெற்ற (Menopause) பிறகும் பாலுணர்வு விருப்பம் குறையாமல் நீடிக்கிறது. ஒருபகுதியினருக்கு ஒருகுழந்தை பெற்றதும் குறைந்து விடுகிறது. குழந்தையை பராமரிப்பது, குடும்ப வேலைகள் போன்ற காரணங்களால் மனநிலை, உடல் நிலையில் பெண்களுக்கு மாற்றம் ஏற்பட்டு பாலுறவு விருப்பம் சரிந்து விடுகிறது. காரணமறிந்து, பிரச்சினையின் தன்மையறிந்து பெண்களின் உடலுறவு விருப்பத்தை இயற்கையாக மீட்பதற்கு, மதனநீரை சுரக்கச் செய்வதற்கு, உறவின் போது ஏற்படும் வலித்துயரை நீக்கி உறவில் பரவச உணர்வை உருவாக்குவதற்கு ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. தம்பதியர் இருவரும் அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவரை அணுகுங்கள். மீண்டும் உங்கள் இல்லத்தில் தாம்பத்தியஉறவு செழிக்கட்டும்.


ஹோமியோபதி & மாற்று மருத்துவம் கேள்வி பதில்


ஹோமியோபதி & மாற்று மருத்துவம் கேள்வி பதில்
• எனக்கு கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி உள்ளது. 3 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. ஆங்கில மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். தற்போது சில மாதங்களாக சிறுநீர் அடிக்கடி கழிக்கும் நிலை வந்துள்ளது. இரவில் மிகவும் சிரமமாக உள்ளது. மணிக்கொரு முறை எழுந்து சிறுநீர் கழிப்பதால் தூக்கம் பாதிக்கிறது. பகலில் மிகவும் சோர்வு ஏற்படுகிறது. ஒரு நாள் கூட தவறாமல் ஆங்கில மாத்திரை மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தபோதிலும் இது ஏன் ஏற்பட்டது என்று டாக்டரிடம் விசாரித்தேன். ஸ்கேன் பரிசோதனை செய்து சுக்கிலச்சுரப்பி (Prostate Gland) வீங்கியுள்ளதாகவும், ரத்த சர்க்கரை அளவும் கூடியுள்ளதாகவும் கூறினார். ‘இன்சுலின்’ ஊசி மருந்து எடுத்துக்கொள்ளவும், (Prostate சுரப்பி பிரச்சினையை தீர்க்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவும் ஆலோசனை கூறினார். ஓய்வு பெறும் வயது. அறுவைச் சிகிச்சையை விரும்பவில்லை. என் நண்பர் ஒருவர் ‘மாற்றுமருத்துவங்களில்’ இப்பிரச்சினைகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். எனக்குத் தங்களின் ஆலோசனைகள் என்ன?
 - எ. தேவராஜன், சேலம் - 636 001.
தங்களின் பரிசோதனை அறிக்கைகளைப் பரிசீலித்தோம். சர்க்கரைநோயை - ரத்த சர்க்கரை அளவை முழுக்கட்டுப்பாட்டில் வைக்கவில்லை எனில் புதியபுதிய உடல்நலப் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். நீரிழிவை முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அற்புதமான ஹோமியோ, ஆயூர்வேதா, சித்தா, மூலிகை மருந்துகள் உள்ளன. உணவில் கட்டுப்பாட்டுடனும், உடற்பயிற்சி (அ) யோகா (அ) நடை பயிற்சி போன்ற தினசரி செயல்பாட்டுடனும் மாற்றுமருத்துவ சிகிச்சையையும் இணைத்துக் கொண்டால் உடல்நலம், மேம்படும் - ஆபத்துக்கள் விலகும். சர்க்கரை நோயினால் ஏற்படும் அதிக சிறுநீர் போக்கைக் கட்டுப்படுத்துவதில் ACID PHOS, URAN-NIT, NAT-MUR, MEDOR போன்ற முக்கியமான சில ஹோமியோபதி மருந்துகள் நிச்சயமாக பலனளிக்கும்.
பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை 2 அல்லது 3 மாத காலத்தில், ஆபரேசன் இல்லாமல் முழுமையாகக் குணப்படுத்த ஹோமியோபதியில் சிறந்த மருந்துகள் உள்ளன. ‘முதுமையை நோய்களின் கூடாரமாக’ மாற்றும் ஆங்கில சிகிச்சைகளை முடிந்தளவு குறைத்து. . . நிறுத்துங்கள்! அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரை அணுகி சிகிச்சை பெறுங்கள். முதுமையிலும் இனிமை காணுங்கள்.
குறட்டைக்கு குட்பை
• சமீபகாலமாக தூங்கிய மறுநிமிடமே குறட்டை வந்துவிடுவதை நானே உணரமுடிகிறது. வீட்டில் மற்றவர்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது. சிலநாளில் யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், தூக்கத்திலேயே மூச்சுத் திணறுவது போலவும் சிரமம் ஏற்படுகிறது. குறட்டையிலிருந்து விடுபட மருத்துவரை அணுகினேன். அவர் ஒரு நிபுணரைப் பரிந்துரை செய்தார். நிபுணரிடம் ஆலோசித்தேன். அதற்கு சிகிச்சை ஏதுமில்லை என்றதோடு மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏதோ ஓர் ஆப்ரேசன் செய்யவேண்டும் என்று கூறினார். இது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. மாற்றுமருத்துவத்தில் குறட்டையை குணப்படுத்த இயலுமா?
 - M. கேசவப்பெருமாள், சிவகாசி.
1960ஆம் ஆண்டு ‘இக்கிமேட்சு’ (Lkematsu) என்ற ஜப்பானிய மருத்துவர்தான் முதன்முதலில் குறட்டைக்கான காரணத்தைக் கண்டறிந்தவர். அதுவரை குறட்டைவிட்டுத் தூங்கினால் நிம்மதியான தூக்கம் என்றுதான் கருதப்பட்டது. மூக்கிற்கும் தொண்டைக்கும் பின்புறமுள்ள மூச்சுக்குழல் உள்விட்டத்தில் சுருங்குவதும் இதனால் சுவாசக்காற்று அதிக அழுத்தத்துடனும், மிக வேகமாகவும் செல்வதும் நிகழ்கிறது. அதனால் தான் கொர் . . . கொர் . . . சப்தங்கள். புல்லாங்குழலில் துளைகளைச் சிறிதளவு அடைக்கும்போது இசை கிளம்புவது போல மூச்சுக் குழலின் தடையால் குறட்டை சப்தம் கிளம்புகிறது.
குடிப்பழக்கம், புகைப் பழக்கம், உடல் பருமன் உள்ளவர்களுக்கு குறட்டைத் தொந்தரவு அதிகளவு இருக்கும். சிலருக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதாலும், தொண்டை சதை வீக்கத்தாலும், அடினாய்டு எனப்படும் நோயாலும். . . சுவாசம் செல்லும் குழலில் எவ்வித அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை வந்துவிடும்.
தங்களின் குறட்டையால் வேறு உடல் சிரமங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். குறட்டையுடன் தூங்கும்போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர்ரத்த அழுத்தம் அதிகமாகும். இதயத் துடிப்பு வித்தியாசப்படும். இதயத்திலிருந்து மூளைக்குச் செல் லும் ரத்த அளவிலும் பிராணவாயு குறைந்து, மூளையின் பணி யிலும் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக மறதி ஏற்படும். பகலில் அசதியும், மனச் சோர்வும் ஏற்படும். சிலருக்கு ஆண்மைக் குறைவும் ஏற்படும். இத்தகைய இரவு நேர உபாதை களால் ஏற்படும் மூச்சுத் தடை ‘SLEEP APNEA SYNDROME’ (தூக்க மூச்சடைப்பு) என்று அழைக்கப்படுகிறது.
குறட்டை மற்றும் தூக்க மூச்சடைப்பு பிரச்சினைகளுக்கு முழுநிவாரணமளிக்கக் கூடியது ஹோமியோபதி மருத்துவமே.
• எனக்கு வயது 25. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இன்னும் திருமணமாகவில்லை. என் உடல் வளர்ச்சிக்கேற்ப மார்பகங்கள் வளர்ச்சியின்மை என்பதால் என் எதிர்காலம் - திருமண வாழ்க்கை போன்றவற்றை எண்ணி வேதனைப்படுகிறேன். “உடல் மெலிந்த பெண்களுக்கு பெருத்த மார்பகங்களும், பருமனான பெண்களுக்கு மெலிந்த மார்பகங்களும் இருப்பதை நீ பார்த்த தில்லையா? இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்?” என்று தோழிகள் கூறுகிறார்கள். ஓர் அக்குப் பங்சர் மருத்துவரிடம் (தொடுசிகிச்சை) ஆறுமாத காலம் சிகிச்சை பெற்றேன். எந்தவித சிறு முன்னேற்றமும் இல்லை. ஹோமியோபதியில் இதற்கு மருந்துகள் இருப்பதாக ஒரு தோழி மூலம் கேள்விப்பட்டேன் - உண்மையா? திருமணத்திற்கு முன் என் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா.
 - V. பரிமளம், சென்னை -18.
உடல் பாகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் இத்தகைய குறைபாடுகளுக்கு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் கோளாறுகள்தான். அடிப்படைக் காரணம். மார்பகத்தை பெரிதாக்குவதற்கு ஆங்கில மருத்துவ அணுகுமுறைப்படி அறுவைச் சிகிச்சையோ, ஹார்மோன் சிகிச்சையோ தேவையில்லை. இதனால் புதிய பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள்.
இன்றைய உலகம் பெண்களையும், பெண்களின் மார்பகங்களையும் விளம்பரப் பொருட்களாக்கி விட்டன. விளம்பரங்களில் காணப்படும் கவர்ச்சியும், எடுப்பான பெரிய மார்பகங்களும் இல்லையே என தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டிய அவசியமில்ல. சிறிய மார்பகங்களாக இருப்பினும் உணர்ச்சிக் குறைபாடோ, பால் சுரப்பதில் குறைபாடோ இருக்காது. எனினும் மிகவும் மெலிந்த நிலையில் உள்ள மார்பகங்களை வயது மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்ப வளர்ச்சி பெறச் செய்ய ஹோமியோபதியில் Sabal Ser, lodium, Conium, Lyco, Muxmos, Kali iod போன்ற சூப்பர் மருந்துகள் உள்ளன. “வெளிப்பூச்சு மருந்துகளால் ஒரே மாதத்தில் மார்பகம் பெரிதாகும்” எனும் விளம்பரங்களால் பலரும் ஏமாந்து போகின்றனர்.
ஹோமியோபதி மருத்துவரிடம் முறையான சிகிச்சையை குறிப்பிட்ட காலம் வரை பெற்றால் . . . பெரிய மார்பகத்தை சிறிதாக்க, சிறிய மார்பகத்தை உடம்பிற்கேற்ப சதைப் பிடிப்புடன் வளரச் செய்ய, மார்பகக் கட்டிகளை கரைக்க, மாதவிடாய் கால மார்பக வீக்கம் வலிகளைப் போக்க இயலும். முழுமையான நன்மை பெற நேரடி சிகிச்சை தேவை.
• சில சித்த வைத்தியர்கள் பல பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும் “சகலவிதமான செக்ஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு” என்று தொடர்ந்து விளம்பரம் செய்கின்றனரே . . . இவர்களுக்கு வேறு எந்த வியாதிகளையும் குணப்படுத்த தெரியாதா? அல்லது சித்தாவின் எல்லை சுருங்கி விட்டதா?
       - த. ரமேஷ், திருச்சி.
சித்தர்கள் நமக்கு வழங்கியது மருத்துவ வடிவிலான வாழ்கலை விஞ்ஞானம். மனிதன் சந்திக்கும் எண்ணற்ற நோய்களைத் தீர்க்க ஏராளமான அரிய மருந்துகளை உலகுக்கு அடையாளம் காட்டியவர்கள் சித்தர்கள். சித்தர்கள் மனித ஆரோக்கியத்திற்காக, சமுதாய ஆரோக் கியத்திற்காக, நோய்கள் குறித்து மக்கள் விழிப்படைவதற்காக, மருத்து வர்களாக மட்டுமின்றி சீர்திருத்தவாதிகளாக, வாழ்வியல் வழிகாட்டி களாக, மூத்தனங்களுக்கு எதிரான கலகக்காரர்களாக வாழ்ந்தவர்கள். நீங்கள் குறிப்பிடும் சித்த மருத்துவர்கள் சமூகத்திற்கு பயனற்ற பொய்யர்கள். சமூகத்தை ஏமாற்றி, மிரட்டி, கல்லாப் பெட்டிகளை நிரப்புபவர்கள். மாற்றுமருத்துவத் துறையின் களங்கங்கள்.
பாத வெடிப்புகள் பறந்து போகும்
• பாதங்களில் பாளம்பாளமாக வெடிப்புகள் உள்ளன. செருப்பில்லாமல் ஒரு அடிகூட நடக்க முடியவில்லை. வலி எடுக்கிறது. ஒருசில வெடிப்புகள் சற்று ஆழமாக உள்ளது. சிலசமயம் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் அதிகப் பிரச்சினை தெரிகிறது. வலி தாங்காமல் ஆங்கில மருந்துக் கடையில் ஏதேனும் வெளிப்பூச்சு மருந்து வாங்கிப் பயன்படுத்தினால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். வேறு ஏதேனும் சிறந்த சிகிச்சை இருக்கிறதா?
 - மா. ஆதிலெட்சுமி, வாடிப்பட்டி.
இயந்திரங்களில் பயன்படுத்தும் கிரீசை வெடிப்புகளில் தடவி பித்த வெடிப்பை சரிசெய்கிற வர்கள் உண்டு. ஆளமரத்துப் பாலும், அத்திமரப்பாலும் சமஅளவில் கலந்து பித்த வெடிப்புகளில் பூசிவந்தால் நலம் கிடைக்கும். சிலர் மருதாணி இலையை அரைத்துப் பூசினால் குணம்பெற்றுள்ளனர். கடுக்காய், மஞ்சள் இரண்டையும் அரைத்துத் தடவலாம். அலோபதி வெளிப்பூச்சு மருந்தினைவிட இவை மேலானவை - கூடுதல் பலன் தருபவை - பாதுகாப்பானவை.
பித்தவெடிப்புகளின் தன்மைக்கேற்ப ஹோமியோபதி யில் Calcarea Carb, Hepar Sulp, Petroleum, Silica, Sarasaparilla, Sulphur, Nitric Acid, Graphites போன்ற பல மருந்துகள் பயன்படுகின்றன. மழைக்கால பித்த வெடிப் புக்கு Petroleum 30C எனும் ஹோமியோ மாத்திரை தினசரி இரண்டு வேளை வீதம் 1 வார காலம் மட்டும் உணவுக்கு அரைமணி நேரம் முன் /பின் சுவைத்துச் சாப்பிடலாம்.
ரத்தக் கசிவுள்ள வெடிப்புக்கு Nitric Acid ஏற்றது. ஹோமி யோபதியிலுள்ள Petroleum Ointment வெளிப்பூச்சு மருந்து வேறு எந்த வெளிப்பூச்சு மருந்தையும் விட சிறந்த நிவாரணம் தரும். அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
மூளைக்கட்டிக்கும் வலிப்புக்கும் ஒருங்கிணைந்த மாற்றுமருத்துவ சிகிச்சை
• எனது உறவினர் இரவுக் காவலர் பணியில் இருப்பவர். வயது 42. ஒரு வருட காலமாக வாரத்திற்கு 1 தடவையாவது வலிப்பு வந்துவிடுகிறது. கடந்த மாதம் அடிக்கடி வலிப்பு ஏற்படவே. . . ஆங்கில மருத்துவ மூளை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்றோம். MRI scan ஆய்வு செய்தார். வேறு சில பரிசோதனைகளும் செய்த பின் மூளையில் ‘Giloma’ இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சை அவசியம் என்றும் வலியுறுத்தினார். இவ்வளவு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தும் குடிப்பழக்கத்தை இவர் இன்னும் நிறுத்தவில்லை. இவரது மனைவியும், மூன்று பிள்ளைகளும் செய்வதறியாமல் பதறிப் போயுள்ளனர். உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். ‘‘Giloma’’ என்பது ஆபத்தானதா? இதுவரை மாற்றுமருத்துவ சிகிச்சைகள் மூலம் ஆபரேசனின்றி குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளதா?
 - ஆ. கார்த்தீஸ்வரன், திருநள்ளாறு.
உள்ளது. நிச்சயமாக உள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தில் (முற்றிய நிலையில் அல்லாத, புற்றுக் கட்டிகள் உள்ளிட்ட) பெரும்பாலான கட்டிகளைக் கரைத்து குணமாக்க இயலும். இது அன்றாடம் உலகம் முழுதும் நிரூபணமாகிவரும் உண்மை!
தங்களது உறவினருக்கு ஏற்பட்டுள்ள ‘Giloma’ என்பது புற்றுநோய் கட்டி அல்ல - பயம் வேண்டாம். ‘Giloma’ மற்றும் வலிப்பு இரண்டையும் குணப்படுத்த ‘PLUMBUM’ என்ற ஒரே ஒரு ஹோமியோபதி மருந்தே போதும். அவருக்கு மதுப்பழக்கமும் உள்ளதாகக் கூறுகிறீர்கள். அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தித்து, ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுங்கள். இந்த நோயாளிக்கு ஹோமியோபதி சிகிச்சை முதன்மையானது. இச் சிகிச்சை யில் ஹோமியோபதியுடன், பாச் மலர் மருந்துகள், சில அரிய மூலிகை மருந்துகள், பயோ மருந்துகள், அக்குப்பங்சர் ஆகிய சிகிச்சைகளை இணைத்துக் கொள்ளும்போது. . . துரித நிவாரணமும் குறுகிய காலத்தில் முழுகுணமும் பெறலாம். தங்கள் உறவினர் குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்து மகிழ்ச்சியை மறுமலர்ச்சியை ஏற்படுத்த மாற்றுமருத்துவங்களால் முடியும். கவலையை விடுங்கள்!

இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்


இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்



மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். காளான்  வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. காளானில் உள்ள லென்ட்டைசன் (LENTYSINE), உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில்  உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. எரிட்டிடைனின் (ERITADENIN) என்ற வேதிப்பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.  எந்தவித கொழுப்புப் பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி  உறுப்புக்களுக்கு  எரிட்டினைன் அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம் சீராக செயல்படுகிறது.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறினால் இதயத்தின் செயல்பாடு? உடற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இத்தகைய நிலையைச் சரி செய்ய பொட்டாசியம் சத்து தேவை. அந்த வகையில் பொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. பொட்டாசியம் அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 44%, சோடியம் 9% உள்ளது. எனவே இதயத்தைக் காக்க உணவாக காளான் உள்ளது.

இவைத் தவிர காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும் மலட்டுத்தன்மையாகும். நிவாரணி. பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். முட்டைகோஸ், பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

மேதை ஹானிமன் அவர்கள் வரலாற்றுக் குறிப்புகள்



மேதை ஹானிமன் அவர்கள் வரலாற்றுக் குறிப்புகள்


·         மேதை ஹானிமன் அவர்கள் பிறந்த நாள்  10.04.1755
·         மருத்துவம் படிக்க லீப்சிக் சென்ற ஆண்டு  1775
·         மருத்துவத்தில் பட்டம் பெற்ற ஆண்டு 1779
·         ஜோசனா குச்லரை திருமணம் செய்த ஆண்டு (வயது 27)     1782
·         ‘அறுவை சிகிச்சை’ நூல் வெளியிட்ட ஆண்டு      1784
·         ‘பாலின் மருத்துவ நூல்’ வெளியிட்ட ஆண்டு       1789
·         Dr.வில்லியம் கல்லெனின் மெட்டீரியா மெடிக்கா மொழிபெயர்ப்பும்
   ஹோமியோபதியின் அடிப்படை விதியைக் கண்டுபிடித்தலும் 1790
·         ஹோமியோபதி பற்றி முதல் அறிமுக கட்டுரை
        (The New Method of Ascertaining the effects of Drugs)      1796
·         ஹோமியோபதி பற்றி சிறப்புரைகள் செய்ய ஆரம்பித்தது  1801

·         ஹோமியோயோபதி மருத்துவ முறையின் அடிப்படைக் கோட்பாட்டு நூல்           ஆர்கனான் முதல் பதிப்பு வெளியிட்ட ஆண்டு  1810
·         மெட்டீரியா மெடிக்கா பியூரா வெளியிட்ட ஆண்டு  1811

·         ஆர்கனான் 2ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1819
·         ஆர்கனான் 3ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1824
·         ஆர்கனான் 4ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1829
·         முதல் மனைவி இறந்த ஆண்டு                     1830
·         மெட்டீரியா டெடிக்கா பியூரா வெளியிட்ட ஆண்டு 1830
·         ஆர்கனான் 5ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1833
·         மேடம் மெலானியை மணம் செய்ததும் பாரீஸ் சென்றதும்       1835
·         நாள்பட்ட வியாதி புத்தகம் வெளியிட்ட ஆண்டு    1838
·         ஆர்கனான் இறுதியாக்கப்பட்ட ஆண்டு (ஆனால் வெளியாகவில்லை)     1842
·         வாழ்நாளை வீணாக்கவில்லை. எல்லம் சிறப்பாக செய்து முடித்தேன் என்ற மனநிம்மதியுடன் ஹானிமன் விடைபெற்ற நாள்    2.7.1843

·         ஆர்கனான் 6ஆம் பதிப்பு வெளியிட்ட ஆண்டு      1921


மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம்- [GANGLION] --Dr.S.வெங்கடாசலம் & Dr.V.ஆவுடேஸ்வரி



மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம்-GANGLION
மணிக்கட்டின் மேற்பகுதியில் (Dorsal surface) காணப்படும் முண்டு போன்ற வீக்கம் நரம்பணுத்திரள் வீக்கம்  அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் எனப்படுகிறது. (போயரிக் இதனை An encysted tumour on a tendon எனக் கூறுகிறார்) இத்தகைய முண்டு வீக்கம் மணிக்கட்டின் மேல்புறத்திலோ (on top of wrist) , கீழ்ப்புறத்திலோ , விரல்கள் முடி வடையும் மூட்டுகளிலோ அரிதாக பாதங்களிலோ உருவாகக்கூடும். இது நோயின் விளைவாக தோன்றிய மெல்லிய சுவருள்ள திசுப் பை (cyst) இதனுள்ளே திரவச்சுரப்பு நிரம்பியிருக்கும். இது உருவாவதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அலோபதி மருத்துவம் குறிப்பிடுகிறது.

      
இந்த மணிக்கட்டு வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் வெளிப்படையாக எல்லோரும் பார்க்ககூடிய வகையிலும் விகாரமாகவும் தெரியும்; தோல் பரப்பின் அடியில் சிறிய வடிவத்தில் அமைந்திருந்தால் பிறர் பார்வைக்குட்படாத போதிலும் வலியை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சிலருக்கு இவ்வலி மணிக்கட்டுப் பகுதியில் (Localised)  மட்டும் நிற்கும் சிலருக்கு இவ்வலி கைவிரல்களிலோ, கையிலோ ஊடுருவிப் பரவி வேதனை தரும்.
      
ஆங்கில மருத்துவத்தில் இவ்வீக்கத்திலுள்ள திரவச் சுரப்பை நீக்க, வீக்கத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை (Gangilonectomy)  வரை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இச்சிகிச்சைக்குப் பிறகும் இவ்வீக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. சில பிரத்யேக மருந்துகளும், குணம் குறிகளுக்கேற்ற மருந்துகளும் பயன்படுத்தி நிலையான, நீடித்த பலனைப் பெற முடிகிறது. பக்க விளைவு இல்லாமல், கத்தியோ ஊசியோ காயப் படுத்தாமல், எதிர் உயிரி மருந்துகள் (Anitbiotics)  இல்லாமல், உடம்பில் தழும்பு ஏற்படுத்தாமல் அகவயமான காரணங்களை அகற்றி வீக்கத்தை வற்றச் செய்து . நிரந்தர குணம் பெற முடிகிறது.


 மணிக்கட்டு நரம்பணு முடிச்சு வீக்கத்திற்கும் பயன்படும் முக்கிய முன்று மருந்துகள் 1.ரூடா (Ruta) 2.பென் ஜாயிக் ஆசிட் (Ben-zonic Acid) 3.சிலிகா (Sililca). வீக்கத்துடன் வலியும் இணைந்து துயரப்படுத்தும் போது ரூடா உயர்வீரியம் அற்புதமான பலன் தருகிறது. இருப்பினும் ரூடா 30 மற்றும் 200C வீரியத்திலேயே விகிச்சையைத் துவங் கலாம். ஒரிரு வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால் உயர்வீரியத்திற்கு சென்று பயன் பெறலாம். இவ்வீக்கத்தில் யூரியா அமிலத்தன்மை (Uricacid Diathesis) காணப் பட்டால் பென் ஜாயிக் ஆசிட் மருந்தும் கால்சியப் படிவங்கள் காணப்பட்டால் கல்கேரியா கார்ப் மருந்தும் தேவைப்படுகின்றன. மருத்துவர் கிளார்க் சல்பர் CM  வீரியத்தில் காலை நேரத்தில் ஒரு வேளை மருந்து மூலம்.. மூன்று வார காலத்தில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கத்தைக் குணப்படுத்தலாம் என அனுபவச் சான்றுடன் சுட்டிக்காட்டுகிறார்.
Ganglion  வீக்கத்தைக் குணப்படுத்த ரூடா. பென் ஜாயிக் ஆசிட், சலிகா, சல்பர், கல்கேரியா கார்ப் போன்ற மருந்துகள் மட்டுமின்றி கல்கேரியா புளோர், தூஜா, பாஸ்பரஸ், ஆர்னிகா , ஸடிக்டா, நேட்ரம் மூர் போன்ற மருந்துகளும் உதவுகின்றன.


Thursday, June 26, 2014

தழும்பு வராமல் தடுக்க, அகற்ற ஹோமியோதி சிகிச்சை --- Dr. S.வெங்கடாசலம் ,Dr.V.ஆவுடேஸ்வரி

பல காயங்கள் ஆறிய பின் தழும்பு அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. சில காயங்கள் மட்டுமே தழும்பு ஏற்படாமல் ஆறி இயற்கை தோல் மீண்டும் ஏற்படுகின்றன.  தழும்புகளால் எந்தவித ஆபத்தோ, உபாதையோ இல்லை என்றாலும் தோற்றப் பொலிவைப் பாதிக்கிறது.வெட்டுக்காயங்களில், அடிப்பட்ட காயங்களில், சிறிய, பெரிய விபத்துக் காயங்களில், நெருப்புக் காயங்களில் மற்றும் முகப் பருக்களால், அம்மைப் புண்களால் ஏற்படக் கூடிய தழும்புகளை உடனடி ஹோமியோபதி சிகிச்சை மூலம் தடுக்க  முடியும். 


ஆழமான காயங்களில் ஆங்கிலச் சிகிச்சை முறைப்படி தையல்போட்ட நிலையிலும் கூட ஹோமியோபதி சிகிச்சையை இணைத்துக் கொண்டால் தழும்பு உண்டாவதைத் தவிர்க்க இயலும். 

ஏற்கனவே இவைபோன்ற தழும்புகளால் மனச் சிரமங்களுக்கு ஆளானவர்கள் ஹோமி யோபதி மருந்துகள் மூலம் தழும்புகளை மறையச் செய்ய வாய்ப்பு உள்ளது.  உலகிலுள்ள வேறெந்த மருத்துவமுறையிலும் தழும்புகளை குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதும் ஹோமியோபதியில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தழும்புகள் வராமல் தடுக்கவும், வந்த தழும்புகளைக் குணப்படுத்தவும் பயன்படக்கூடிய சில முக்கிய ஹோமியோபதி மருந்துகள் இதோ :

1.காலண்டுலா [CALENDULA]:அனைத்துவிதக் காயங்களுக்கும், புண்களுக்கும் பயன்படக் கூடியது.  இம்மருந்தினை [mother tincture] திரவ வடிவில் சிறிது எண்ணெய் கலந்து மேற்பூச்சாகவும், மாத்திரை வடிவில் உள்மருந்தாகவும் பயன்படுத்தலாம். ஆயிண்ட்மென்ட் வடிவத்திலும் கிடைக்கிறது.  (சர்க்கரை நோயாளிகளின்) ஆறாத புண்களைக் கூடத் தழும்புகளின்றிக் குணப்படுத்தும் ஆற்றலுடையது காலண்டுலா.


2.ஆண்டிம் டார்ட் [ANTIM TART]: அம்மை நோயின் போது ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்பவருக்கு தழும்புகள் ஏற்படுவதில்லை.  தழும்பு ஏற்பட்டவர்கள் இம்மருந்தினை தினம் 2 வேளை வீதம் 1 முதல் 2 மாத காலம் எடுத்துக்கொண் டால் தழும்புகள் முற்றிலும் மறைந்து விடும்.


3.காஸ்டிகம் [CAUSTICUM ]:நெருப்புக் காயத்தின் போது உடனடி யாக இம்மருந்தைச் சாப்பிட்டால் எரிச்சல், வலி மறைவதோடு துரித நிவாரணம் கிடைக்கும். புண்கள், தழும்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.  பொதுவாக நெருப்புக் காயத்தால் ஏற்பட்ட தழும்பு எக்காலத்திலும் குணமாகாது.  தசை நாண்கள் இழுக்கப்பட்டு, சுருங்கி, இறுக்க உணர்வுடன் கூடிய தழும்பாகக் காணப்படும்.  இந்நிலையிலும் காஸ்டிகம் மருந்து தொடர்ந்து உட்கொண்டால் தழும்பு நிச்சயம் குணமாகும்.

4.கிராபைட்டிஸ்[GRAPHITES]:கடினப்பருக்கள் மற்றும் எக்சிமா எனப்படும் கரப்பான்படைப்  புண்கள் காரணமாக ஏற்படும் தழும்புத் திட்டுக்களையும், கீலாய்டு (KELOIDS) எனப்படும் தழும்புப் புண்களையும், 


பெண்களின் மார்பக அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஏற்படும் தழும்புகளையும் குணப்படுத்தும் ஆற்றல் உள்ள மருந்து இது. வெளிப்பூச்சாகவும், உள் மருந்தாகவும் பயன்படும்.

5.ஃபுளோரிக் ஆசிட்         [FLOURIC ACID]:     பருவ வயதில் ஏற்படும் சில வகைப் பருக்கள் தழும்புகளை ஏற்படுத்துகின்றன.இவற்றை மறையச் செய்ய இம்மருந்து உதவும். சிலிகா (SILICEA) எனும் மருந்தும் இதற்குப் பயன்படும்.


6.கல்கேரியா ஃபுளோர்[CALCAREA FLOUR] ;டாக்டர். சூஸ்லரின் கண்டுப்பிடிப்பான இந்த திசு மருந்து... எல்லாவித தழும்புகளையும் கரைத்து, குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.  தினம் மூன்று வேளை - வேளைக்கு 4 மாத்திரை வீதம் உட்கொண்டால் பலன் கிடைக்கும். ஹோமியோபதி மருந்துகளுடன் இதனை இணைத்து உட்கொண்டால் சிறந்த பலன் பெறலாம்.


Monday, April 14, 2014

கட்டை விரலும் கனவும் - Dr.S.வெங்கடாசலம்


தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர் உட்பட உலகின் எந்த அதிசயமும் கட்டைவிரல் இல்லாமல் உருவாக முடியாது. மனிதனின் உணர்வுடன் கூடிய உழைப்பிற்கு வடிவம் தரக் கூடியது கட்டைவிரல். மகாபாரதத்தில் போர்க்கலை வித்தைகளைக் கற்றுத்தேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏகலைவன் குருதட்சனை என்ற பெயரில் உயர்ஜாதி ஆதிக்கத் திற்குக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்தான். 

பாரதத்தில் நேர்த்தியான கைத்தறி நெசவு காரணமாக அன்னியத் துணிகளை விரிவாக விற்பனை செய்வது பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் கட்டை விரல்கள் பிரிட்டிஷ் கொடுங்கோலர்களால் மனிதாபிமானமின்றி துண்டிக்கப்பட்டதை இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் ரத்தக்கறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதனின் லட்சியக் கனவுகள் எல்லாம் கட்டைவிரல் இல்லாமல் நனவாக முடியுமா?


‘கட்டைவிரலில் வலிக்கிறது’ என்று சிகிச்சைக்கு வந்தார் ஒருவர். இடதுகையை நீட்டி, மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். வலியின் தன்மை, அதிகரிப்பு - குறைதல் குறித்த விவரம், இதரக் குறிகள் எல்லாம் விசாரித்தேன். “வேறு எந்தப் பிரச்சனையுமில்லை; இரண்டு, மூன்று மாதமாக இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். ஓரளவுகூட அவரைப் பற்றிய புரிதல் ஏற்படாமல் அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய இக்கட்டான நிலை. 

ஓரிரு நிமிட இடைவெளி கடந்து, “உங்களைப் பற்றிய விவரங்களையும் வலியுடன் சம்பந்தப்பட்ட வேறு விஷயங்களையும் நீங்கள் தெரியப்படுத்தினால் தான் உதவியாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டு, தாகம், நீர், மலம், பசி... குறித்து விசாரித்தேன். மீண்டும் அவர் அழுத்தம் திருத்தமாக "வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை; இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை” என்று கூறியதையே கூறிமுடித்தார். சிகிச்சைக் குறிப்புகள் நூல்களில் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு மருந்து கொடுத்தனுப்பினேன்.


ஒருவாரம் கழித்து வந்தபோது, “ஒரளவு மட்டும் வலி குறைந்துள்ளது” என்றார். மேலும் ஒருவார மருந்து தரப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமும் மருந்தளிக்கப்பட்டது. நான்காவது வாரம் அவர் மீண்டும் வந்தபோது முகம் சற்று வாடியிருந்தது. “வலி எப்படி உள்ளது?” என்று விசாரித்தேன். “முதல்வாரம் வலி குறைந்தது; இரண்டாவது வாரம் மேலும் கொஞ்சம் வலி குறைந்தது. இப்போது மூன்றாவது வாரம் மருந்து சாப்பிட்டபின் வலி மீண்டும் வந்து விட்டது. அது மட்டுமில்லாமல் இரவு தூக்கத்திலேயே சிறுநீர் கழித்து ஆடையும் படுக்கையும் பாழாகி விடுகிறது” என்று குறிப்பிட்டார்.

“இதுபோல் இதற்குமுன்னர் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்ட துண்டா?,” என்று கேட்டபோது “இல்லையே! இப்போது சிலநாளாகத் தான் அப்படி யுள்ளது. கொஞ்ச நாளாக கனவில் சிறுநீர்கழிப்பது போல் தோன்றும். ஆனால் தற்போது அந்த மாதிரிக் கனவு ஏற்படும்போது நிஜமாகவே சிறுநீரும் வெளிவந்து விடுகிறது” என்றார்.


அவருக்கு மீண்டும் பழைய மருந்து தரவில்லை. கனவுக் குறியை மையமாகக் கொண்டு ‘கிரியோசோட்டம்’ என்ற ஹோமியோபதி மருந்து தேர்வு செய்து கொடுத்தனுப்பினேன்.


 அதன்பின்னர் அவர் நீண்டநாள் வரவேயில்லை. ஒருநாள் அவரது உறவுக்காரப் பெண்ணுக்குச் சிகிச்சை பெற அழைத்து வந்திருந்தபோது “கடைசியாக நீங்கள் எனக்குக் கொடுத்த மருந்தில் கையிலிருந்த வலி மறைந்துவிட்டது. இரவு உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் நின்றுவிட்டது” என்று சொல்லிவிட்டு உறவுக்காரப் பெண்ணை அறிமுகப்படுத்தத் துவங்கினார்.