Thursday, December 5, 2013

மாற்று மருத்துவங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட இனமா?

“இதை தவிர வேறு வழியில்லை !” -இது ஆங்கில மருத்துவத்தின் மூடநம்பிக்கை      
“சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்...சிந்தை இருங்காரடி!”  
என்று மனம் வெந்து பாடினான் மகாகவி பாரதி. “டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்து இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!” என்று ஆங்கில மருத்துவத் துறையினர் திரும்பத் திரும்பக் கூறி கொண்டேயிருப்பது வேதனையானது. அதைவிட வேதனையானது அதை அப்படியே நம்பி அரசும், ஊடகங்களும் திரும்பத் திரும்பக் கூறி மக்களை பீதிக்குள்ளாக்குவது!
டெங்கு சுரத்தைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும், ஹோமியோபதியிலும், இந்திய மருத்துவங்களிலும் சிறப்பான அரிய மருந்துகள் உள்ளன என்பது அரசுகளுக்குத் தெரியாதா? மக்களின் உயிரையும்,நலத்தையும் காக்கும் கடமையுள்ள அரசுகள் ஹோமியோபதி & இந்திய மருத்துவ டெங்கு தடுப்பு மருந்துகளை முழுஅளவில் மக்களுக்கு வினியோகம் செய்ய ஏன் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை? போலியோ சொட்டுமருந்து போன்ற ஆங்கில தடுப்பு மருந்துகளை ஒரே நாளில் மாநிலம் முழுவதும் (குழந்தைகளுக்கு) வழங்குவது போல் சித்தா, ஹோமியோ டெங்கு தடுப்பு மருந்துகளை ஏன் வழங்க முடியவில்லை?தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் ஹோமியோ,சித்தா மருத்துவங்களையும் ஒருங்கிணைத்து சிகிக்சையளித்து ஏன் உயிர்களைக் காக்க இயலவில்லை? 

கோவில் கருவறைக்குள் பிறசாதியினர் நுழைய முடியாதது போல மரணத்துடன் போராடும் நிலையில் ஆங்கில மருத்துவம் தவிர இந்திய மருத்துவங்கள் நோயாளிகளை ஏன் நெருங்க முடியவில்லை? மாற்று மருத்துவங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட இனமா? அல்லது அறிவியலுக்கு ஆராய்ச்சிகளுக்குப் புறம்பானவையா? டெங்குவிற்கு தடுப்பு மருந்து ‘இல்லை’ என்று உரக்கவும், ‘இருக்கிறது’ என்று மெல்லிய குரலிலும் அரசுகள் இருவேறு குரல்களில் ஒலிப்பது ஏன்?

இன்று வெளியுலகிற்குத் தெரியாமலேயே லட்சக்கணக்கானோர் ஆங்கில மருத்துவச் சிகிச்சைகளால் நடைபிணங்காளக வாழ்ந்து வருகின்றனர்.  புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ரேடியோ தெரபி சிகிச்சை காரணமாக 10 வருடம் வாழத் தகுதியானவர்கள் கூட பல்வேறு கொடூரமான விளைவுகளுக்கு உள்ளாகி ஓரிடு ஆண்டுகளுக்குள் சுடுகாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.அவர்களுடைய சொத்து சுகங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு குடும்பத்தை நிர்க்கதிக்கு ஆளாக்கி விடுகின்றனர். 

டிபி நோய் மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பார்வையை, கேட்கும் திறனைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்பது அலோபதி மருத்துவர்களுக்கு தெரியாதா? “இதைத் தவிர வேறு வழியில்லை!” என்று அவர்கள் நம்புகிறார்கள்.  இதற்கு மாற்றுத் தீர்வுகள் உள்ளன என்பதே உண்மை நிலை. இந்த உண்மையை ஜனநாயக உணர்வோடு ஏற்றுக்கொண்டால் சில சாதாரண சிகிச்சைகளில் கூட பலரது வாழ்க்கையைத் தொலைக்கும் அவலம் ஏற்படாது!  டெங்கு, சிக்குன்குனியா, பன்றி சுரம் போன்றவை பரவும் போது பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படும் நிலை, மரணம் போன்றவை நிகழாது!

மனித உடலில் இயங்கும் எதிர்ப்பாற்றலே மனிதனை நலமாக்குவதில் மருந்துகளைக் காட்டிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.  துயருற்ற மனிதனுக்கும் அவனுக்குக் கொடுக்கக் கூடிய மருந்திற்கும் ஓர் இணைப்பு விதி நிச்சயம் இருந்தாக வேண்டும்.  அலோபதியில் இந்த அடிப்படை பின்பற்றப் படவில்லை. மனித உடலமைப்பை தனித்தனி SPARE PARTSகளின் தொகுப்பாகவே கருதுகிறது.  ஆனால் இயற்கையைப் போன்றே மனித உடலியக்கத்திற்கும் பன்முகத்தன்மை கொண்ட ஒன்றோ டொன்று தொடர்புடைய ஓர் ஒழுங்கமைப்பு உள்ளது. இதனை ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்கள் ஏற்கின்றன. ஆங்கில மருத்துவமோ எந்திரவியல் அணுகுமுறையில் மனிதனைப் பார்ப்பதாலும்,தொழில் அறத்தை மீறுவதாலும்,மனித குலம் நோய்களைவிடக் கொடுமையான விளைவுகளைச் சந்தித்து வருகிறது!
“உண்மை என்பது ஓரளவு தான் மக்களை எட்டுகிறது.  பொய்மையும், மூடத்தனமும் பெரும்பான்மையினரை வென்று விடுகிறது” என்ற அரிஸ்டாடிலின் வாக்கு இன்று வரை நிதர்சனமாகவே உள்ளது

No comments:

Post a Comment