மண் தின்னும்
குழந்தை என்றால் பெற்றோருக்குப் பெரும் வேதனை. மண் மட்டுமன்றி சாம்பல், காகிதம்,கோலப்பொடி, விபூதி, பல்பொடி, குச்சி, சாக்பீஸ், துணிஎன்று
உண்ணத்தகாத பல பொருட்களை விரும்பி ருசித்துச் சாப்பிடும் குழந்தைகளை லண்டன்
மலர் மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து விரைவில் மாற்ற முடியும்.
பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு வயதை நெருங்கும் போதிலிருந்து இரண்டு வயது வரை கண்ணில்கண்டதை எல்லாம் எடுத்துப் பார்க்கும் பழக்கமும், கடித்துப் பார்க்கும் பழக்கமும் இருக்கும் அதையும் கடந்து ஒரு சில பொருட்களை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டு, முறையாக உண்ண வேண்டிய உணவைத் தவிர்த்தால் வளரும் பருவத்தில் உடல்நலக் கேடுகளை உருவாக்கும். இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்கு
உட்பட்டகுழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும்
அரவணைப்பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர்
உணவூட்டும் பழக்கங்களிலுள்ள
குறைபாடுகள்,ரத்தசோகை, மனவளர்ச்சி
குறைபாடு போன்றகாரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி,வளர்ந்து நீடிக்கிறது.
குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப,
கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா,அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா,கல்கேரியாபாஸ், நைட்ரிக்
ஆசிட், நக்ஸ்வாமிகா
போன்ற ஹோமியோபதி
மருந்து கள் மண், சாம்பல்
தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக
உதவும். மலர் மருந்துகளில் வால்நட், வொய்ட்,செஸ்ட்நட் பட், செர்ரிப்பழம், சிக்கரி
போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் வியக்கத்தக்க மாற்றத்தை
ஏற்படுத்தும்.
மண்ணும் காகிதமும் தின்னும் பழக்கமுடைய நான்கு வயதுச் சிறுமியை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவளுக்கு மலம் மிக இறுகலாகவும் சற்று கருநிறமாகவும் சிரமப்பட்டு வெளியேறுகிறது. ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் வலி தாங்காமல் அழுகிறாள். உணவையோ, திண்பண்டங் களையோ விரும்பி உண்பதில்லை. மண் தின்பதும் பேப்பர்களை மென்று ருசித்துத் தின்பதும் எவ்வளவு திட்டி அடித்த போதும் நிறுத்த முடியவில்லை. சில மாத காலம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. வளர வளரச் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறிய வலுவற்ற கருத்தில் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் வளரும் குழந்தைகளில் காணப்படும் பொறாமை, சந்தோஷம்,
பயம், தாழ்வுமனப்பான்மை,கோபம், எரிச்சல், பிடிவாதம், மந்தம், சோம்பல், ஞாபகக் குறைபாடு, பிறரைக்
குறைகூறும் சுபாவம் போன்ற இயற்கைக்கு
மாறான பல்வேறு குணக்கேடுகளையும் மாற்றி குழந்தைகளிடம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தைகளின் மன
ஆற்றல்களை அதிகரிக்கவும் மலர்
மருந்துகள்அற்புதமாக பயனளிக்கின்றன. சிறுவர்களிடம் காணப்படும் திருட்டு, புகை, குடிப்பழக்கம்
போன்றவற்றையும் மலர் மருந்துகளால் மாற்ற இயலும்.
குழந்தைகளுக்கு மட்டுமன்றி எந்த வயதின ருக்கும் இம்மருந்துகள் பயன்படும். எதிர்மறையான
இயல்புகளை நீக்கி மனநலத்தையும், உடல்நலத்தையும் அளிப்பதே இவற்றின்
சிறப்பம்சம்.



No comments:
Post a Comment